கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2012

நாலடியார்


நாலடியார் - நட்பிற் பிழை பொறுத்தல்

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்;
நெல்லுக் குமியுண்டு; நீர்க்கு நுரையண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

நல்லவரென்று ஆராய்ந்து தேர்ந்தபின், அந்நல்லவரிடம் நட்பு கொண்டபின் அந்நல்லவரிடம் குறைகள் இருப்பது இயல்பு நாம் பெருந்தன்மையோடு பொறுத்து கொள்ள வேண்டும்.
நெல்லில் உமி இருந்தாலும் அதை நீக்கி விட்டு அரிசியாக கொள்கிறோம் அதே போல் பூவுடன் முள் இருந்தாலும் பூவை நாம் புறக்கணிப்பதில்லை. ஆதலால் அன்பு கொண்டவரிடம் சில குறைகள் இருந்தால் அவற்றை புறக்கணித்து அவரிடமுள்ள நற்பண்புகளை மட்டுமே பார்க்க வேண்டும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கம் அருமை... நன்றி...

Vishal Associates சொன்னது…

நாலடியார் கூறும் நல்லறிவுக் கதைகளை காண/ படிக்க
http://srivishal99.blogspot.in/ க்கு செல்லவும்.