கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2012

இதிகாச‌க்குப்பை

இதிகாச‌க்குப்பைக‌ளை, ப‌குத்த‌றிவு நெருப்பின் மீது கொட்டாதீர்க‌ள்!


திப்பு சுல்தான் என்ற புனைப்பெயரில், புராண புளுகுகளுக்கு வக்காலத்து வாங்கும் நண்பர் ஒருவ‌ர், இதிகாசத்திலிருந்து நல்லதை எடுத்து வாழ்வில் பயன்படுத்தியவன் சிறப்பாக வாழ்கிறான். அதை நோண்டி அங்கே குற்றம் என்று சொல்கிறவன் தன் சுயவாழ்விலும் அப்படியே இருக்கிறான். என்று திருவாய் மலர்ந்தருளுயிருக்கிறார்.


ஹிந்து மதத்தின் யோக்கியத்திற்கு(??) கட்டியம் கூறும் மகாபாரதத்தை துணைக்கழைத்திருக்கிறார்.
மகாபாரதம் என்பது பங்காளி சண்டை, அதுவும் நல்ல பங்காளிகளின் சண்டை அல்ல!
கள்ள பங்காளி சண்டை.(க‌ள்ள‌க்காத‌ல், க‌ள்ள‌ புருஷ‌ன் மாதிரி...)

கதையின் படி,திருராஷ்ட்டிரனும், பாண்டுவும் சகோதரர்கள்.
அஸ்தினாபுர சாம்ராஜ்யம், இவர்களின் வாரிசுகளுக்கு உரிமையானது.

துரியோதனன்,துச்சாதனன் உள்ளிட்ட கவுரவர்கள் 100 பேருமே, திருராஷ்ட்டிரானின் வாரிசுகள்.

பஞ்ச பாண்டவர்கள் எனப்படும் அய்வரில், யாராவது பாண்டுவின் மகன்கள் யாராவது உண்டா?

அவர்களை, குந்தி புத்திரர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியுமே, தவிர பாண்டு புத்திரர்கள் என்று சொல்ல முடியுமா?

தர்மன் - எமனிற்கும்,
பீமன்- வாயுவிற்கும்( காற்று)
அர்ஜீனன் - இந்திரனுக்கும்,
நகுல, சகாதேவன் - அசுபதி தேவர்களுக்கும் பிறந்ததாக க‌தை சொல்வதுதான் பாரதம்!க‌ருப்புச்ச‌ட்டைக்கார‌ர்க‌ள் அல்ல‌!!

இப்படி, அனுபவம் வாய்ந்த குந்தி தேவியின் முதல் முயற்சி சூரியனுடன்.
அந்த ரிசல்ட் தான் கர்ணன் என்பது உதிரிகதை.
அம்பி ம‌ணிர‌த்ன‌ம், இதை தான் த‌ள‌ப‌தி என்ற‌ பெய‌ரில், இருட்டுக்குள்ளே ப‌ட‌மெடுத்து காசாக்கினார் என்பது கொசுறு த‌க‌வ‌ல்.

ம‌காபார‌த‌த்தில், விப‌ச்சார‌த்திற்கு பிற‌க்காத‌வ‌ன் யாராவ‌து உண்டா? என்ற‌ ப‌குத்த‌றிவு பெரியாரின் கேள்விக்க‌ணைக்கு, வைதீக‌க்கும்ப‌லிட‌ம் க‌ன‌த்த‌ ம‌வுன‌மே நில‌வுகிற‌து.

மேற்குறிப்பிட்ட அய்வரின் ஒரே மனைவி, பாஞ்சாலி பத்தினி என்ப‌தை நிருபிக்க‌ தீ மிதிப்பவன் அப்பாவிதமிழன்.
அந்த மகாபாரத கதையை, கதாகலாசேபம் செய்யும் பார்ப்பனர்கள், யாரும் தீ மிதிப்பதில்லை.

இந்த பஞ்ச பாண்டவர்களின் மண்ணுரிமைக்கு கட்ட பஞ்சாயத்து பண்ணிய யோக்கிய சிகாமணி - கிருஷ்ணன்.
அத்தனை அயோக்கியதனங்களையும் செய்து, எவன்,எவனுக்கோ பிறந்தவர்களுக்கு...துரியோதனன் மற்றும் சகோதரர்களின் சொத்தை பறித்து கொடுத்தது தான் கிருஷ்ணபரமாத்மாவின் தர்மம்.
பைத்திய‌க்கார‌னுக்கு, க‌ள் ஊற்றி விட்ட‌து போன்ற‌ கிருஷ்ண‌னின் உள‌ற‌ல்க‌ள் தான் கீதை என்று க‌வித்துவ‌மாக‌ சொன்ன‌வ‌ர் பெரியார்.

பெண்ணை, ம‌னித‌ உயிராக மதிக்காமல், பொருளாகப்பார்த்து.....திரவுபதையை வைத்து சூதாடிய கதையிலிருந்து....நியாய, தர்மத்தை கற்றுக்கொள்ளும் சைக்கோத்தனம் எங்களுக்கில்லை.

பெரியாரின் மொழியில் சொல்வதனால், நல்ல விருந்திட்டு, இலையின் ஒரத்தில், கொஞ்சூண்டு நரகலை வைத்து விட்டால்.....நாகரிகமுள்ள மனிதர்களால் சாப்பிட முடியாது.

வாழையிலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் நரகலை பார்த்துக்கொண்டே, சாப்பிடும் யோக்கியர்கள், மகாபாரததிலிருந்து, நீதிகளை கற்றுக்கொள்ளட்டும்.


பிற‌ப்பொக்கும் என்று ம‌னித‌ நீதி சொன்ன‌ திருவ‌ள்ளுவ‌ர், ஜாதீய‌த்தை சாடிய‌ த‌மிழ்சித்த‌ர்க‌ள்,
அருட்பெருஞ்சோதியே, த‌னிப் பெருங்க‌ருணை என‌த்தெளிந்த வ‌ள்ள‌லார் என‌ நெடிய‌ த‌த்துவ‌ம‌ர‌பு த‌மிழனுக்கு சொந்த‌ம்.‌

கால‌த்திற்கேற்ப‌, த‌க்க‌து, த‌காத‌து என‌ ப‌குத்த‌றியும் அறிவை த‌ந்திருக்கிறார் பெரியார்.

அழுக்குருண்டை பிள்ளையார் தொட‌ங்கி, புராண‌, இதிகாச‌ம் குறித்த‌ ப‌குத்த‌றிவு கேள்விக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌த்தெரியாத‌,பூணூல் பூனைக‌ள் வ‌ந்து நிற்குமிட‌ம் பெரியாரின் திரும‌ணம்.

திரேதாயுக‌ம்,துவாப்ராயுக‌ம் என்று க‌ல‌ர்,க‌லர் ரீலுக்கு ஒரே ப‌தில் பெரியார், மைன‌ர் பொண்ணை க‌லியாண‌ம் க‌ட்டிக்கிட்டாரு என்று பாம‌ர‌ப்புல‌ம்ப‌ல்.

பெரியாரின் திரும‌ண‌த்திற்கு வ‌ராம‌ல், கோபித்துக்கொண்டு,த‌னிக்க‌டை/த‌னிக்க‌ட்சி தொட‌ங்கிய‌ அண்ணாவே, அவ‌ர‌து அமைச்ச‌ர‌வையை, பெரியாரிட‌ம் காணிக்கையாக்கிவிட்டார்.


பெரியாரின் அறிவுப்பூர்வ‌மான‌,ச‌ட்ட‌ப்பூர்வ‌மான‌ திரும‌ண‌த்தை குறை சொல்வ‌து யார் தெரியுமா?

பெண்ணாசை,பொன்னாசை த‌விர்க்க‌ (??)காவிக‌ட்டிக்கொண்டு, ம‌ட‌த்தில் பார்க்க‌ வ‌ந்த‌ பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ரை, த‌ன‌து இச்சைக்கு அழைத்தானே
ம‌டாதிப‌தியாக‌ இருந்த‌ சுப்புர‌ம‌ணியின் ப‌க்த‌கோடிக‌ள் தான்.

ஆனால், புராண‌ புளுகுமூட்டை குத்த‌கைக்கார‌ர்க‌ள்,1949 திரும‌ண‌த்தை ப‌ற்றி பேசியே...த‌ங்க‌ள் போலிச்ச‌ர‌க்கை காப்பாற்ற‌ நினைக்கிறார்க‌ள்.


பார்ப்ப‌ன‌ அன்ப‌ர்க‌ளே, உங்க‌ளின் இதிகாச‌க்குப்பைக‌ளை, ப‌குத்த‌றிவு நெருப்பின் மீது கொட்டாதீர்க‌ள்!

கருத்துகள் இல்லை: