கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2007

காலநிலை மாற்றம்



உலகதின் காலநிலை மாற்றத்தினால் பல அழிவுகளை கண்டங்களும் நாடுகளும் எதிர்கொள்ளப் போகின்றன என்பதை (Al Gore) தெரிவித்துள்ளார்.உலக அமைதிக்காக நோபல் பரிசினை (Al Gore) அவர்களுக்கு நோர்வே வழங்கியதில் உலக நாடுகளின் அரசியலாளர்களின் செவிகளுகளுக்கு சங்கை ஊதியிருக்கிறது. வெள்ளம் வருமுன்பே இலங்கையும் அணை கட்ட வில்லையென்றால் அழுது பயனில்லை.

காலநிலை மாற்றத்துக்கான கரணியங்கள்




  • சூரியக்கோளின் வெடிப்பு.

  • உலகத்தின் புதிய தொழில்நுட்பமும் கந்தகக்குண்டுகளும்.

  • உலகம் முதுமை அடைந்தநிலை

நாம் உலகத்தைக் காப்பாற்ற செய்யவேண்டியவை



  • உலகத்தில் உள்ள காடுகளை காப்பாற்றுதல்.

  • மரங்களை நாட்டுதல்.

  • போர்களை நடாத்தாமல் அமைதி வழியை கடைப்பிடித்தல்.

  • மாந்தநேயத்துக்காக பொது அமைப்புகள் கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தல்.

  • நிலங்களை பாதுகாத்தல்.

சனி, 15 டிசம்பர், 2007

இலகுதமிழில் இலக்கணம்

எழுத்துகளின் பிறப்பு என்பது யாது ?
எழுத்துகளை ஒலிக்கும்போது, உள்நின்ற காற்று விசையுடன் எழுவதால் ஒலியணுக்களின் கூட்டம் ஒலியாகச் செவியில் புலனாகிறது. இவ்வொலி மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்னும் இடங்களில் பொருந்தி நாக்கு, மேல்வாய், பல், உதடு ஆகியவற்றின் முயற்சி வேறுபாட்டால் வெவ்வேறு எழுத்துகளாக ஒலிக்கிறது. இதுவே எழுத்துகளின் பிறப்பாகும்.

எழுத்து பிறக்கும் இடங்கள் யாவை ?

எழுத்து கழுத்து, மூக்கு, மார்பு, தலை ஆகிய இடங்களில் பிறக்கின்றன.

எவ்வெவ்வுறுப்புகளின் முயற்சியால் எழுத்துகள் பிறக்கின்றன ?

மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய இடங்களில் பொருந்தி எழும் ஒலி, வாயைத் திறத்தல் , இதழைக் குவித்தல், நாவின் நுனி, அடிப்பகுதிகள் பற்களோடும், மேல்வாயிலும் பொருந்துதல், உதடுகள் ஒன்றொடொன்று பொருந்துதல் ஆகிய முயற்சியால் வெவ்வேறு எழுத்துகளாய்ப் பிறக்கின்றன.

கீழ்வருக் எழுத்துகள் எவ்விடத்தில் பிறக்கின்றன ?

ஆ-கழுத்து , ர-கழுத்து , ம-கழுத்து , க-மார்பு , ய- கழுத்து , ஐ- கழுத்து , ற-மார்பு, ந-மூக்கு

வணக்கம் தமிழ்

வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினை
கையினாலுரை காலம் இரிந்திட
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள் தலை கொண்டு பணிகுவாம்

______

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தந்றுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்;
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலைய ளமும்துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துவமே.

சதுர்மறையா ரியம்வருமுன் சாலுலகே நினதாயின்
முதுமொழிநீ முதலிலியா மொழிகுவதும் வியப்பாமே.

பத்துப்பாட் டெண்தொகையே பகுத்தறிந்து பற்றினவர்
எத்துணையும் பற்றுவரோ இலக்கணமில் பொய்க்கதையே.

வாள்ளுவர்செய் திருக்குறளை மறவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுமுதலா ஒருகுலத்துக் கொருநயனே.

- மனோன்மணீயம் - சுந்தரம்பிள்ளை

சனி, 1 டிசம்பர், 2007

திருவள்ளுவமாலை


குறளிங்கு கூறாத விடயமில்லை
குணம் காக்கும் நூலது போல் எதுவுமில்லை
அறம் நிறைந்த வாழ்வுதரும் பொய்யேயில்லை
அதை அறியாக் கல்வியெனில் பயனேயில்லை
ஆட்சிமுறை வாழ்க்கைநெறி அனைத்தும் கூறும்
அன்புவழி இன்பநிலை அதுவும் பேசும்
வீழ்ச்சியற்ற வாழ்வுபெற வழியைக் காட்டும்
விரும்பியதைக் கற்றுவிடு அறிவைத் தீட்டும்
தூவல்>பா.சிவபாலன்.(இலங்கை)

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன் அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைகுத்தில்; - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர்முப் பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு

- மருத்துவன் தாமோதரனார் -

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார் அன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்?

- சீத்தலைச் சாத்தனார் -

ஒன்றே பொருள் எனின் வேறுஎன்ப; வேறுஎனின்
அன்றுஎன்ப ஆறு சமயத்தார்; - நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

- கல்லாடர் -

அறம்பொருள் இன்பம்வீடு என்னும் அந்நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை; அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடை யார்.

- மாமூலனார் -

தானே முழுது உணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்றும் மற்று!

- நக்கீரர் -

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்துஅலந்தான் - வால் அறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்
உள்ளுவஎல்லாம் அளந்தார் ஓர்த்து.

- பரணர் -

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனைஅளவு
வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

- கபிலர் -

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைத்து வள்ளுவனாய்த் தந்து உரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னி; வாய் வாழ்த்துக; நல்நெஞ்சம்
சிந்திக்க; கேட்க செவி.

- உக்கிரப் பெருவழுதியார் -

திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க
உருத்திர சன்மர் என உரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்.

- அசரீரி -

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாற!பின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு.

- நாமள் -

என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும்
நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்பேன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

- இறையனார் -