கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இலண்டன் பயணத் தொடர்ச்சி

மணிக்கூட்டுக் கோபுர வளாகத்தைச் சுற்றிப்பார்த்த போது அங்கு காவற்பணியில் நின்ற காவற்றுறையைச் சேர்ந்த காவலாளியோடு நின்று நிழல் பிடித்துக் கொண்டு நடந்தோம்.


அந்த வளாகத்துள் இருந்த அந்தச் சிலை எம் கண்ணில் மலைப்பைத் தந்தது

அவர்தாம் ஒலிவர் கிறொம்வேல்(Olivar Cromwell)

இங்கிலாந்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியதில் ஒலிவருக்கு பெரும் பங்குண்டு. அதுமட்டுமல்லாது அடிமட்ட மக்களுக்களின் உரிமைக்காக பெரும் பாடுபட்ட மனிதர் எனலாம்.அம்மனிதரின் படிமத்தைப் பார்த்ததில் மிகவும் மகிழ்வாக இருந்தது. ஏன் இந்த மகிழ்வென்றால் உலகத்தில் மாற்றாம் ஏற்படுமாயின் அது ஐரோப்பியர்களாலேயே ஏற்படும் .முதலாம் உலகப்போருக்கு கரணியம் ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி.இரண்டாம் உலகப்போருக்குக் கரணியமும் பொருளாதார வீழ்ச்சி தான். ஐரோப்பியரின் நாடுகாண் பயணங்கள் ஏற்பட்டதும் பொருளாதாரம் தான். அது பிரித்தானிய உலகாள விரும்பும் மேல்தட்டு வருக்கத்தினால் ஏற்படுவதால் அங்கு ஒரு மக்களாட்சியை தொற்றுவிக்க கரணியமாக விரும்பிய ஒலிவர் போற்றுதற்குரியவர்.அவர் சிந்தித்தது பிரித்தானியர்களுக்காகத்தான் ஆனாலும் அதுவே உலக மாற்றமாக இன்று மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

யாம் பார்த்த இலண்டன்

உலகத்தையே ஓரளவு ஆண்ட ஒரு நாட்டுக்கானபயணம். பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. நோர்வேயில் இருந்து இலண்டன் இலண்டனில் இருந்து நோர்வே என அமைந்த பயணம் எட்டு நாள் வரை அமைந்தது. இறயன் என்ற விண்ணூர்தியில் ஏறி கிட்டமட்ட இருமணிநேர பயணத்தில் பின்னிரவு இலண்டனை யாம் வந்தடைந்தேம்.


நோர்வே நாட்டு விண்ணூர்ர்தி நிலையம் போலல்லாமல் மிகவும் பெரிதாகவும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் விண்ணூர்தி நிலையம். பேருந்துகளின் ஊழியம் மகிழுந்துகளின் ஊழியம் மிகவு அருமையாக இருந்தது. நிறைய மக்களைக்கொண்ட நாடான போதும் அந்த நாட்டின் ஒழுங்கமைப்பு  மிகவும் சிறப்பானது. உலகுக்கே நேர்த்தியைச் சொல்லிக்கொடுத்த நாடல்லவா!

நாடு நல்லது நம்மினம் கூடாது என்பதைப் போல  கரோ என்ற இடத்தில்
தங்கியிந்தபோது அறிந்து கொண்டேம். யாம் தங்கியிருந்தது தென்கரோவில் கூடுதலாக இந்தியர்களும் இலங்கையர்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட இடம் போல் இருந்தது இலண்டனின் பழைய நாகரிக நிலம் கரோ . குப்பை களுக்குக்குறைவில்லை அவற்றை வெள்ளையர்கள் துப்புரவு செய்வது அருது போலும்,நோர்வேயில் இருந்து போன எமக்கு இடத்தைப் பார்த்ததும் அருவருப்பாக இருந்தது.எச்சித்துப்பல்களையும் வெற்றிலைத்துப்பல்களையும் துப்புரவு இல்லாத்த குப்பைத்தொட்டிகளையும் காணக்கூடியதாக இருந்தது. பொதுவாக எம்மவர்களும் இடங்களே இப்படி இருக்கும் என்றல்ல சீக்கியர்களின் பொற்கோயிலுக்குச் சென்றிருந்தேன் என்ன எழில் தூய்மையின் இருப்பிடம். அதே நேரம் தமிழ்க் கோயிலுக்குச் சென்றிருந்தேன் பத்தி வருவதை விட வாந்தி வந்துவிடும் அவ்வளவு அழுக்கு நிறைந்த கழிவறைகள்.கருவறை மட்டும் துப்புரவாய் இருந்தால் போதாது இறைபத்தி நிறையவேண்டுமென்றால் சுற்றாடல் துப்புரவாக இருக்க வேண்டும்.

ஆனால், எம்மக்களின் வீடுகள் துப்புரவாகவும் கோயில்கள் போலவும் இருந்தன.ஆனாலும் ஒரு கவலை நிறைந்த்திருந்தது மூத்தோரின் நிலைதான் பிள்ளைகளின் வேலைப்பழுவும் பேரப்பிளைகளோடு ஒட்ட முடியாத மொழியும் அவர்களை புறம்பாக்கியே வைத்திருக்கிறது.பாழடைந்த கட்டிடத்தில் மூத்தோர் முற்றம் என்ன கொடுமை உலகத்திலேயே இரண்டாவது பணக்காரன் ஒரு தமிழன். இலணடன் மக்களிம் இல்லாத் பணமா? ஒற்றுமை இன்மையால் இந்த இனம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.ஆளாளுக்கு தமிழ்ப்பள்ளிகள் ஆளாளுக்கு வானொலிகள். ஒன்றுபடாத எதுவும் உருப்படியாகாது.

நிற்க,
இலண்டனின் நகரப்புறத்திலிருந்து நகருக்குச் சென்றிருந்தேன். பழைய வரலாற்றைப் பேணுவதோடு புதிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கிக்கொண்டு பிரித்தானியா என்ற நாட்டை மேம்படுத்தும் மக்கள். இதுதாம் பிரித்தானியர்களின் வெற்றி அவர்கள்  வெற்றிக்கு அனைத்து நாட்டு அறிவாளிகளும் தம் மூளைகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பணம் கிடைத்தால் போதும் தாம் வாழ்ந்தால் போதும் என்பதே வேற்று நாட்டு மக்களின் மோகம் அதை வெள்ளையர்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகம் என்றதும் தஞ்சைப் பெருங்கோயில் இந்தியா என்றும் தாச்மகால் இலண்டன் என்றது பெரிய மணிக்கூட்டுக் கோபுரம் தான் கண்ணில் வரும்.


காலை எழுந்து நண்பன் எழிலோடும் என் மகன் தாரகனோடும் இலண்டன் நகர் நோக்கிப் புறப்பட்டேம்.குகைவண்டி(Tube) பிடித்துக்கொண்டு புறப்பட்டோம்.ஒரு வண்டியில் ஏறி மாறி மற்ற வண்டியில் ஏறி முதலில் மெழுகுபொம்மைகள் வைத்துள்ள அருங்காச்சியத்துக்குச் சென்றடைந்தோம். ஆடி கால பள்ளி விடுமுறை விடாத்ததால் பெருங்கூட்டத்தில் இருந்து தப்பித்தோம்.அதிக நேரம் காவல் நில்லாது அருங்காச்சியில் உள்ள மெழுகு பொம்மைகளைக்(உலக சாதனை மாந்தரைக்) கண்டுகளித்தோம்.


அத்தனை பொம்மைகளும் அப்படியே அச்சொட்டாக அந்த மாந்தரைப் போலவே இருந்தன. பல ஆசைகளோடு வந்தத மக்காள் தம் விருப்புகளை நிழல் பிடித்துக்கொண்டனர்.அங்கு எனக்கு பிடித்தவர்கள் பலரிருந்தனர் முதலாம் எலிசபத்து,காந்தி,நெல்சன் மண்டேலா,ஒபாமா,நியுட்டன்,மைக்கல், உலக ஓட்டவீரர் இப்போதிருக்கின்ற உசைன் போல்த்து, இன்னும் பலர் எனக்குப் பிடித்தமானவர்களோடும் நிழல் பிடித்துக்கொண்டேன்.

முதலாம் எலிசபத்து இலண்டனில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு மிகப்பெரிய வணிக நாடக பிரித்தானியத்தை மாற்றியமைத்தார் அவரின் அந்த உறுதிக்குத் துணையாக நின்றவர் ஒரு கிறித்துவ பாதிரியார் ஆவார் 
உள்நாட்டுக் குறும்பரையும் வேற்றுநாட்டு ஒற்றரையும் வேரறுத்தாள்.


அவர்கள் குடும்பத்தினருக்கும் இடையூறில்லாமல் குற்றவாளிகளையே கொன்று முடித்தார். அதுவே அவ்வரசியின் வெற்றி அவரின் வரலாறு போல் தமிழருக்குத் தலைவர் மே.தகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சொன்னால் மிகையாகாது. 
பெரு மாந்தரை பார்க்காத நாம் நேரிலே அவர்களை பார்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஒரு பெண். சிந்தனையும் செயல் வடிவமும் கொண்டவர்கள் இங்கிலாந்துப் பெண்கள். இங்கிலாந்துப் பெண்ணே பெண்ணுரிமையைப் பாடுதற்கு வித்திட்டவர்."கேளடாமானிவா எம்முள் கீழோர் மேலோர் இல்லை"_மாகவி சுப்பிரமணிய பாரதியார்.ஐரோப்பிய பெண்களைப் போல தமிழீழப்பெண்களும் தரணியோங்க வாழ்ந்தனர் தலைவன் வேலன் மகன் காலத்தில்.
எத்தனை அடக்கு முறைகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்ட இலண்டன் போல் ஆபிரிக்க் அரிமா நெல்சன் மண்டேலாவுக்கு வந்தது. ஈட்டி முனை என்ற இயக்கத்தைக் கூட்டிப் போராடுகையில் வெள்ளையரால் சிறைபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் சிறைக்கோலம் கொண்டு இனத்தின் அமைதிக்காக வாழ்ந்து வருபவர் ஆவர்.

மெழுகு பொம்மைகளின் அருங்காட்சியம் உருவாக்குவதற்கு சிந்தனையும் செயல் வடிவமும் கொடுத்தவர் அம்மையார்
தொடரும்.....?