வேலூர் வரலாறு:-
வேலூர் மாவட்டம் பழங்கால நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாலாற்றின் கரையில் வேலூர் அமைந்துள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான் ஆகியோர் வேலூரை ஆண்டுள்ளனர். 1606-1672 விஜயநகர பேரரசின் காலத்தில் வேலூர் நகரம் அவர்களின் தலைமையிடமாக செயல்பட்டது. 17ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடக போரின் போது வேலூர் கோட்டை சிறந்த, உறுதியான ப
டை அரணாக விளங்கியது. தலைநகரை உருவாக்குவதிலும் அரசுகளை உருவாக்குவதிலும் இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாக தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தென் ஆற்காடு, வட ஆற்காடு பகுதிகள் 1810ம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சி இறுதியில் வெளியிடப்பட்ட அரசியல் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. 1908ல் இந்த பகுதிகள் தென் ஆற்காடு, வட ஆற்காடு என இரண்டு மாவட்டங்களாக இருந்தது. தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் பகுதி முதலில் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது. இந்த பகுதி ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ மையமாக இருந்தது. 1911ம் ஆண்டில் வேலூர், வட ஆற்காட்டின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் கைப்பற்றிய இடம் ஆற்காடு. வேலூர் சிப்பாய் கலகம் மிகவும் பிரசித்தி பெற்றது. 1806ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் இந்திய சுதந்திர போராட்டத்திற்கான ஆரம்பம் ஆகும். வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகளையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களையும் கண்கவர் சுற்றுலாதலங்களையும், பக்தி பரவசமூட்டும் ஆன்மிக திருக்கோயில்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது. காவலூர், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி, வேலூர் கோட்டை மற்றும் அகழி, வளர்ந்து வரும் வனவிலங்கு சரணாலயமான அமிர்திகாடு ஆகியவை மாவட்டத்தின் சிறப்புகள்.சென்னையிலிருந்த ு 130 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் வேலூர் அமைந்துள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் கைப்பற்றிய இடம் ஆற்காடு. வேலூர் சிப்பாய் கலகம் மிகவும் பிரசித்தி பெற்றது. 1806ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் இந்திய சுதந்திர போராட்டத்திற்கான ஆரம்பம் ஆகும். வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகளையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களையும் கண்கவர் சுற்றுலாதலங்களையும், பக்தி பரவசமூட்டும் ஆன்மிக திருக்கோயில்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது. காவலூர், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி, வேலூர் கோட்டை மற்றும் அகழி, வளர்ந்து வரும் வனவிலங்கு சரணாலயமான அமிர்திகாடு ஆகியவை மாவட்டத்தின் சிறப்புகள்.சென்னையிலிருந்த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக