கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 24 நவம்பர், 2012

தமிழின ஒழிப்பு

நன்றி





தமிழின ஒதுக்கல், ஒடுக்கல், ஒழிப்பு

இன்று எப்படி பாரிய கொலையாட்டத்தையும், இனவழிப்பையும் செய்துவிட்டு உண்மைகளை எப்படிச் சிங்களம் திரிக்கின்றதோ, அதேபோல் கடந்த சில நூறு வருடங்களாக பாரிய வரலாறுகளைத் திரித்து, அதை உண்மையென ஒப்புவித்து உலகை ஏமாற்றிய, ஏமாற்றிக் கொண்டிருக்கும் பெருமை சிங்களவர்களையே சாரும். சர்ச்சைக்குரியதாக வரலாற்றாசிரியர்களால் நோக்கப்படும் இலங்கைக்குப் புத்தபிரான் வந்தாரெனவும், அவரது பற
்கள் தம்மிடம் உள்ளதாகப் புத்தபிரானைக் காட்டி, பெளத்த தலங்கள் பல கட்டி, அவர் காட்டிய நெறிக்கெதிராக, சில நூறு வருடங்களாக கொலை வெறியாட்டம் ஆடும் சிங்களத்தின் நீண்ட, நெடிய, கொடிய வரலாறு இது.

சில நூறு வருடங்களுக்கு முன் பெரும்பான்மையாக இருந்த தமிழினம் சிறுபான்மையாக்கப்பட்டு, இன்று நாடற்றவர்களாக இராணுவ கொடுங்கோல் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வரப்பட்டு, அடிமைகள் ஆக்கப்பட்டுள்ள ஈழவரலாறு. தமிழர்களின் வரலாற்றையே சிங்கள வரலாறாகவும், பண்டைத் தமிழரசுகளைத் தம் அரசாகவும், ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன் பலமொழிக் கலப்பால் உருவான சிங்களம், தமிழையும் தமிழர்களையும் அழித்த, அழித்துக் கொண்டிருக்கின்ற வரலாறு இது. மிகவேகமாக மீதிப்பகுதியும் சிங்கள, பெளத்தமத மயமாக மாறும் பேரபாயம் எழுந்துள்ளது.

இலங்கையின் சிறுபான்மைச் சிங்களவர் 1934ல் தந்திரமாகவும் நயவஞ்சகமாகவும் மந்திரிசபையைக் கைப்பற்றி தனிச்சிங்கள மந்திரிசபையாக மாற்றி அமைத்தனர். தாம் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல சதி வேலைகளையும், சூழ்ச்சிகளையும் தகாத வேலைகளையும் செய்தனர். ஏனெனில் சட்டசபையில் 1921ல் தமிழ்ப் பிரதிநிதிகள் 17ஆகவும் சிங்களப் பிரதிநிதிகள் 16ஆகவும் இருந்ததால் தமிழ்ப் பெரும்பான்மையையிட்டு மிகவும் பயந்தனர். கொடூர குற்றச் செயல்களுக்காகவும், மக்களைத் துன்புறுத்தி அரசனுக்கும் நாட்டுக்கும் எதிராக செயற்பட்ட 700 பேர் அடிமைகளாக இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்து பின்னர் சிங்களவர்களாக மாறினர். இலங்கையிலும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

அவையாவன:

மக்கள் பிரதிநிதிகள் சபையில் -

1 . 1939ல் சிங்கள இனத்தவருக்கு சாதகமாக விதப்புரைகளை மந்திரிசபையில் இரகசியமாகத் தீர்மானித்து மக்கள் சபையில் விவாதித்து ஒப்புதல் பெறாமல் மக்கள் சபைக்கு தெரியாமலே சட்ட ஒழுங்குகளுக்கு முரணாக ஆளுநருக்கு நேரடியாக அனுப்பி வைத்தனர். ஆளுநருக்கு மந்திரிமார் வழங்கிய இரகசிய ஆலோசனைகளினால் ஆளுநர் மக்கள் சபையின் கருத்துக்களைப் பெறாமலே குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு அனுப்பி வைத்தது தமிழர்களுக்குச் செய்த பெரும் துரோகம் என ஜி..ஜ.p பொன்னம்பலம் சாடினார்.

2 . 1944ல் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக சட்டம் இயற்றப்பட்டிருந்தும் அதனை அமுல் படு;த்தவில்லை. இன ஒதுக்கல் ஆகும்.

3 . 1948ல் 150,000 தோட்டத் தொழிலாளர்களைச் சாட்டி கண்டித் தமிழர் 15,00,000 பேரையும நாடற்றவர்களாக்கியது தமிழின ஒழிப்பாகும் சட்டவிரோதமானது.

4 . 1949ல் 18 இலட்சம் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தது. சட்டத்திற்கு முரணான இன ஒதுக்கலாகும்.

5 . கோட்டே அரசின் எல்லைக்கு வெளியே சிஙகை அரசின் எல்லைக்குள் குடியேற்றத் திட்டங்களை செயற்படுத்தி சிங்கைநாட்டின் நிலத்தைப்பறித்தது. ஜக்கிய ராச்சியம் போல தனித்தனியாக பேணப்பட்டிருக்க வேண்டும்.

6 . 1956ல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவந்து தமிழ் அரச கரும மொழி என்றதை நீக்கியது.தமிழையும் தமிழர்களையும் இரண்டாந்தரமாக்கி அழிப்பதற்காகும்.

7 . தமிழருடைய மருத்துவம் 1949ல் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1961 ல் ஆயுர்வேதச் சட்டத்தினால் தமிழ் மருத்துவத்தின் அங்கீகாரம் நீக்கப்பட்டது. ஆதனை அழிப்பதற்கேயாம்.

8 . பிரித்தானிய கோமறைக் கழகத்திற்கு நீதி கேட்டு மேன்முறையீடு செய்யும் உரிமை 1968 ல் நீக்கப்பட்டது தமிழருக்கு அநீதி இழைப்பதற்கும் தண்டனை இன்றி தப்பித்துக் கொள்வதற்குமுரிய முன் ஏற்பாடாகும்.

9 . பிரித்தானியாவின் முடியாட்சியின் கீழிருந்த இலங்கை 1971ல் முடியாட்சியை அரசியல் யாப்புக்கு முரணாக கத்தரித்துக் கொண்டது. பிரித்தானிய அரசியல் அமைப்பை மீறும் செயல் மட்டுமல்ல இலங்கை பாராளுமன்றத்திற்கு அவ்வாறான தீர்மானம் இயற்றும் அதிகாரம் இல்லை.

10. 1972ல் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி இனரீதியான தரப்படுத்தல் இலங்கை இரு வேறு நாடு என்பதையும் இரு வேறு சட்டங்களால் ஆளப்படுகிறது என்பதையும் தெரிவிக்கிறது.

11. 1972ல் பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு முறையற்றது முரணானது பிரித்தானிய அரசியலமைப்பை மீறும் செயல்.

12. பெளத்த மதம் அரசமதமாக்கப்பட்டு பெரும் செலவில் பேணப்பட்டு பிறமதங்கள் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டது.

13. 1970 லிருந்து தொடர்ச்சியாக அவசரகால விதிகளின் கீழ் தமிழர் உரிமைகள் பறிக்கப்படடது.

14. 1976ல் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து குற்றச்சாட்டுக்கள் இன்றியும் பிடியாணை இன்றியும் தமிழர் என்ற ஒரே காரணத்தினால் சந்தேகத்தின் பேரில் இலட்க்கணக்கில் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் விசாரணையின்யும் விடுதலையின்றியும் பத்து வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றனர்.

15. 1996ல் குடிவரவுச் சட்டம் தமிழர்களுக்குப் பாதமான தண்டனைகள் கிடைக்க வழி செய்தது.


சிங்கள அரசாங்கத்தின் தமிழின ஒழிப்பு

பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்களின் சனத்தொகையை குறைத்தது. ஆவர்களை சிறுபான்மையாக காண்பித்தது. தமிழர்களின் உண்மையான சனத்தொகையைக் குறைத்து சிங்களவர்களோடு சேர்த்தும் கணக்கிடப்பட்டுள்ளது பெரும் மோசடியாகும். சிங்களவர் உண்மைக்கு மாறாக தம் எண்ணிக்கையை அதிகமாக காண்பித்து தமது பிரதிநிதித்துவத்தை அதிகரித்தனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 6 வீதமானவர்கள் தமிழ் வேடர்கள் (இயக்கர்) சிங்களவராக கணக்கிடப்பட்டு அவர்களின் பிரதிநிதிகளாக சிங்களவர் தம் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தனர். வேடர்களில் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. வத்தளையிலருந்து கற்பிட்டி வரை வாழ்ந்த தமிழர்களை தமிழ் பேசும் சிங்களவர்களாக சனத்தொகையில் 15 வீதம் பதியப்பட்டனர். தென்னிலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கை சனத்தொகையில் 5 வீதமானவர்கள. ஆகும். கொழும்பிலிருந்து களுத்துறை வரை சனத்தொகையில் 6 வீதம் தமிழர்களாவர். ஆநார்புரி, தம்புள்ள, புலத்தியநகர், கதிர்காமம், காலி போன்ற இடங்களில் இலங்கைச் சனத்தொகையில் 8 வீதம் தமிழர். வடக்கு, கிழக்கில் இலங்கை சனத்தொகையில் 20 வீதம் தமிழர். ஆக இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 75 வீதமானவர்கள் தமிழர்

இவர்களில் தோட்டத்தொழிலாளர் என்ற பெயரில் கண்டி கோட்டை அரசுகளில் வசித்த 18 வீதமான தமிழர் 1948ல் நாடற்றவர்களாக்கப்பட்டனர். பின்னர் 1949 ல் வாக்குரிமையும பறித்தனர். சனத்தொகையில் 6 வீதமான தென்னிலங்கைத் தமிழர் சிங்களவருடன் கலந்தனர். இன அழிப்பினால் கொல்லப்பட்டவர்கள் 4 வீதமாவர். இனப் படுகொலையினால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டவர் 6 வீதமாவர். உள்நாட்டில் தடுப்பு முகாம்களில் 4 வீதம் வசிக்கிறார்கள். இடம் பெயர்ந்து வேறு இடங்களில் 4 வீதம் வாழ்கிறார்கள். இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட தமிழர் 5 வீதமாவர். இன்று இலங்கையில் மொத்தச் சனத்தொகையில் 53 வீதமானவர்கள் தமிழர் ஆவர். சிங்களவர் அல்லாத நடுநிலையான அமைப்பு கணக்கெடுப்பை நடத்தினால் உண்மையை அறிந்து கொள்ளலாம். கதிர்காமம், திரிகோணமலை, ஆனார்புரி ஆகிய நகரங்களில் பெருந்தொகையான தமிழர் வசித்துவந்தனர். ஆவற்றை புனித நகராக அறிவித்து அங்கிருந்த தமிழர் அதிகார இராணுவ ஆயதபலத்தால் வெளியேற்றப்பட்டு சிங்களவர் குடியேற்றப்பட்டனர். 1954ல் கொழும்பு மேயராக உருத்திரா, ஆனார்புரி தலைவராக கந்தசாமி தமிழர்களே இருந்தனர். சிறுபான்மைச் சிங்களவர் கபடமாக கைப்பற்றிய அதிகாரத்தினை தக்க வைக்கவே தமிழர்களை அழித்து ஒழித்து வாக்காளர் பதிவுகளில் மோசடி செய்து, நாட்டைவிட்டு துரத்தி, அகதிகளாக்கி வாக்களிக்காது தடுத்து வருகின்றனர். தமிழர்களின் வாக்குகள் மோசடியாகப் பயன்படுத்துகின்றனர்.

இதுவரை கொல்லப்பட்ட தமிழர்கள் ஆறு லட்சத்திற்கு மேலாகும். சிங்கள பயங்கரவாதிவிகளின் தாக்குதல், சிங்கள இராணுவத்தால் படுகொலை, சிங்கள அதிரடிப்படையின் படுகொலை, சிங்கள ஊர்காவல்படை சுட்டுக்கொன்றது, பல்குழல் பீரங்கித்தாக்குதல், விமானக்குண்டுவீச்சு தாக்குதல், கடற்படைத்தாக்குதல், கடற்பீரங்கித்தாக்குதல், உணவுத்தடை மருந்துதடை, வீதித்தடை, சுற்றிவளைப்பு முதலியவற்றால் கொல்லப்பட்டனர்.

துரத்தப்பட்டு வெளிநாடுகளில் 12 லட்சம் தமிழர் உள்ளனர். இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர்கள் ஆறுலட்சம் தமிழர். உள்நாட்டில் முகாம்களில் 4 லட்சம் தமிழர். உள்நாட்டில் சொந்த நிலங்கள் இராணுவத்தால் பறிக்கப்பட்டு விரட்டப்பட்ட தமிழர் 4 லட்சம் உள்ளனர்.

--தொடரும்--
 


கருத்துகள் இல்லை: