கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

விடுமுறைக் காலம்


நோர்வே நாட்டைக் குறிஞ்சித்திணை எனலாம் மலையும் மலை சார்ந்த நிலனும் குறிஞ்சியாகும் என்றே நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். குறிஞ்சிநிலத்துப் பூவைக்கொண்டே பெயரையும் சூட்டியுள்ளனரா தெரியவில்லை நாம் சுற்றிவரும் மலையின் உயரம் 1026 மாத்தல்.அழகுச்சூழல் நிறைந்த குறிஞ்சியில் எம் விடுமுறைக் காலம்.
ஓசுலோவில் இருந்து புறப்பட்டு துருண்வீட்டை அடைந்தோம்.துருண் வீட்டிலிருந்து வெளிக்கிட்டு ஓசுலோவை வந்தடைந்தோம்.கிட்ட மட்ட ஒன்பது மணிநேரத்தைப் பயன்படுத்தினோம்.பத்து மணிநேரத்தில் ஐந்நூற்று இருபது சதுரக்கல் சேய்மை. பயணக்கணக்கின்படி ஒரு நாள் என்று வைத்துக்கொள்வோம் ஏன் இதைக் கூறுகிறேன் எனில் நம் முன்னவரான தென்புலத்தார் வகுத்த கணக்கின் படி அமெரிக்காவில் வாழும் மாயன்கள் 13மணித்துளிகள் ஒருநாள் என்ரே வகுப்பர். . அந்த மணித்துளிகளில் ஆத்துமீன் பிடிக்கலாம். நாம் பயணித்துக் கொண்டிருந்த போது சிலர் மலை ஏறச்செல்வதையும் மீன்பிடிப்பதையும் கண்டு மகிழ்ந்தோம். அதை மகிழ்வென்று மட்டும் கூறிவிட இயலாது. உவப்பு அல்லது பேரானந்தம். மலையின் உச்சியில் நின்று கொண்டு தெற்கே தெரிவது தமிழல்லவோ என்று கூறுவதில் உவப்பல்லவோ.
 


  



ஆம் தமிழுக்கும் நோர்வேநாட்டு மொழிக்கும் உள்ள ஒற்றுமையைச் சற்று பார்ப்போமா. வாருங்கள் விளக்குகிறேன்.
கதிரவன்(sol),ஆறு(dal),அம்மை(amme),வீடு(hjem),மாத்தல்(metter),கொத்து(hogg),ஊரும்(orm), அரிசி(ris), மொழி(mål), குழி(hull), கறுமம்(karma) இன்னும் பலவும் உளதென அறிக....
இவை மட்டுமல்ல நம் ஒலிக் குறியீடுகளையே பயன்படுத்துகின்றனர்.
ஆ(A), ஈ(I), ஊ(O-U),ஏ(E) ஓ(O), ஒ(Å), ஆஏ(Æ)

நிற்க,
பன்முறை இப்பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் இம்முறை அமைந்த பயணம் சற்று வேறுபாடானது என்பதை வளக்கவியலும்.கோடைக்கலங்களில் இங்கு வெள்ளப்பெருக்குகள் நிகழும். வெள்ளபெருக்கானது பெரும் அச்சத்தைக் கொடுக்கவல்லது. ஆறுகள் சூழ்ந்திருப்பதும் கரணியமுமாம். சிறிய காடுகளையே நோர்வே நாடு கொண்டுள்ளது.அதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் பேரிடரைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. 2015 - 2050 - 2100 இன்னும் எண்பத்தைந்து ஆண்டுகளும் அதற்குப்பின்னும் விளையும் பாதிப்பிகளுக்கு இன்றே முடிவெடுத்து செயலாற்றவும் வேண்டும்.,

மலைகளில் அவ்வளவாக பனித்துகள் இல்லை. ஒருகாலம் பனிமண்டலாக இருந்த நிலப்பகுதி இன்று பனியற்று இருப்பது இக்காலத்துக்கு மகிழ்வாயினும் அச்சமே!
மிருதுவாக ஓடிக்கொண்டிருக்கும் ஆறு அதைத் தாலாட்டியபடி ஊசிக்குளிர் காற்று இயக்கத்தைப் பாத்துக்கொண்டு புன்னகைத்துக் கொண்டிருக்கும் சேயோன் வேலி போட்டிருக்கும் மலைகளிடையே ஒளிந்து ஒளிந்து விளையாடுவது போல் இருந்தது.