கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 16 மே, 2022

இலை அரும்பும் காலம்

 பெரும்பாலும் நோர்வே நாட்டில் சித்திரை கடந்ததுமே மே மாதம் தமிழுக்கு மேழம் அல்லது மேடம் இலை அரும்பத்தொடங்கிவிடும். மழைத்தூறல்கள் மரங்களின் மீதி துளிகளைத் தூவவில்லை என்றால் பலருக்கு இடரைக் கொடுத்துவிடும். கண், தோல் நோய்கள் ஏற்பட்டுவிடும். இவ்வாண்டு எல்லோருக்கும் மிகவும் சிறப்பு எனலாம்.

ஆம்,2022

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

புலம்பெயந்த புல்லாங்குழல்கள்

 நான் சொல்லவருவது என்னவென்றால்:)

தமீழப்போராட்டம்  பதினொரு ஆண்டுக்ளுக்குப்பின் பின்னடையக கரணியம் புலம்பெயர் குமுகச்செயற்பாட்டாளரிடம் இருக்கும் உண்மையற்ற நிலையே!!!

புல்லாங்குழலின் வஞ்சகம்

தமிழரின் பாரம்பரியத்தில் உருவான புல்லாங்குழல் காடும் காடுசார்ந்த கண்ணனிடம் மிகவும் கவரக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது. அப்புல்லாங்குழல் பாரதப்போரில் பலரைப் பிரிக்கவும் அழிக்கவும் பயன்பட்டது.

வன்முழவுகள் வல்லாயுதங்கள் சிறந்த போர்த்தபதிகள் சிங்கம் போன்ற அற்புதச்செய்லோன் புலிபோன்ற கன்னன் இத்தனைபேர் இருந்தும் சகுனியால் எப்படி எப்படி வெல்ல முடிந்தது கண்ணனால் எப்படி வெல்லமுடிந்தது. ஆம் இசைக்கு மயங்காதவர் யாருமிலர் அதனால் கண்ணன் தன் புல்லாங்குழலால் அனைத்தையும் வென்றான்.

தம்மினத்தை அழிப்பதற்கு சிங்களவர் தமிழரின் ஆசையைத்தான் தெரிவு செய்தார். புலிப்ப்டை வீரர் விதிவிலக்கா என்ன. முதலில் தெரிவு செய்த இடம் நோர்வேயும் தெரிவுசெய்யப்பட்டோர் நோர்வேத் தமிழ் அரசியல் அன்னக்காவடிகளும் தான்

தொடரும்.....

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

இலைகொட்டும் காலம்

 Spiterstulen Turisthytte

அனுசரணை வழங்கியவர் சாந்தக்குமார்

நன்றி.

மதியம் நண்பகல் நான்காம்திகதி கன்னி மாதம் ஐப்பசி எனது பயணம் தொடங்கியது. 

Gjerdrum - Holter - Maura  - Nannestad  - Gjøvik  - Lillehammer - Hammer - Oyer - Otta og Lom 

எனது மின்னிவசந்தம் தோட்டத்திலிருந்து தொடங்கி இயற்கையின் உச்சி மலைவரை இலை அர்ப்பணிப்புக் காலத்தின் அழகை அளப்பதே நோக்கு.


காக்கை குருவி 

    எங்கள் ஜாதி

நீள்கடலும் மலையும் 

    எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெலாம் 

     நாமன்றி வேறில்லை

நோக்க நோக்க களியாட்டம்


என

வெற்றிப்பேரிகை எழுப்புகிறான் ஞானச்சித்தன் பாரதி. அவனைத்தொடர்ந்து நானும் நானும் கூத்தாடினேன்

சக்தியின் கூத்து ஒளியாவது போல் பாரதியின் கூத்து மொழியாவது போல் எனது கூத்தும் எண்ணங்களின் இழைகளாக எண்ணற்ற மின்கம்பிகளை இணைத்தபடி மின்சாரம் பாய்கிறது. என் எண்ணத்திலிருந்தும் ஓட்டத்திலிருந்தும் ஒரு புதிய மின்கலத்தை நானே எனக்காக உருவாக்குகிறேன் அதுவுமே பராசத்தியின் கூத்தல்லவா

இருளாற்றலை ஒளியாற்றல் கவ்விச்சிறு காதல் செய்யலாமே அன்றி இருள்பருப்பொருளாற்றலை அடைவதென்பது இயலாதது. 


ஒன்று 

இன்னுமொன்றை 

அடைவதற்குள் 

அது 

வேறு ஒன்றை 

அடைந்திருக்கும்.

இப்படியாகத்தான் 

அவனும் நானும் 

அவளும் நானும் 

அவனும் அவளும்

ஒளியும் இருளும்

     'தமிழ்ச்சுடர்'

    - கடம்பதாசன் -


தொடர்ந்து நிற்காமல் அறிவுமூப்பன் ஞானக்கலியின் தலைச்சன்


வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானில் வளரும் மரமெலாம் நான்,

காற்றும் புனலும் கடலுமே நான்


விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,

வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;

மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,

வாரியினுள் உயிரெலாம் நான்,


கம்பனிசைத்த கவியெலாம் நான்,

காருகர் தீட்டும் உரவெலாம் நான்;

இம்பர் வியக்கின்ற மாட கூடம்

எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,


இன்னிசை மாதரிசையுளேன் நான்,

இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;

புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,

பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.


மந்திரங்கோடி இயக்குவோன் நான்,

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;

தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.

சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.


அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,

அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,

கண்டல் சக்திக் கணமெலாம் நான்

காரணமாகிக் கதித்துளோன் நான்.


நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,

ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;

ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

அறிவாய் விளங்குமுதற்சோதி நான்


தொடர்ந்து வருக, இப்படியாக


இரவுப்பொழுதாகிறது Otta அல்லது ஒத்தாவை அடைய இரவாகிவிட்டது தோராயமாக ஒன்பது மணி

சூரியனை விட்டு புவி ஆண்டுக்கு ஆறுமாதம் தள்ளி விலகிச் சுற்றுகிறாள் போலும். அவளும் பெரியாரின் சுயமரியாதைக்காரியோ! சூரியனின் காலடி என்றதும் தொழமறுத்த காரணத்தாலோ ஊடலில்  அவளின் உடையே சிவப்பும் மஞ்சளுமாய் ஒளியின் வாட்டத்தி்ல் மாறிவிட்டது. ஒளிக்கு ஒளியூட்டும் காலம்  ஒளிக்குச்சத்தி ஊட்டும் காலம் இதுவே சத்தியானந்தம்  ஆனந்த சக்தி


அடைமழைக்காலம் 

 மழையைப் போற்றுதூஉம்; மழையைப் போற்றுதூஉம்

ஒத்தாவிலிருந்து உலூமை அடைய இரவு  பத்துமணி

இரவு+இ

இரவியின் வரவுக்கு மலைகள் காத்துக்கிடக்கின்றன

இங்கு

மலைகள் இருளாக இருளும் மலைகளாக வெளிச்சம் வாடியதால் மலைகளும் வாடிக்கிடக்கிறது இருளில் இருந்து   விடுதலையை பெற்றுக்கொடுக்க. கிரேக்கருக்கும் யூதருக்கும் ஈராக்கியருக்கும் அகத்தியர் கலத்துக்கும் சக்தி போதவில்லை. தெசுலாவும் சக்தி ஊட்டத்தில் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டாலும் முதலாளித்துவம் இருளாக்கியே வைத்திருக்கிறது. 


ஆற்றின் கரையோரம் அலாதியாகத் தூங்கியெழுந்து காலை ஆறுமணிக்கெல்லாம் மலையடிவாரத்திலிருந்து ஒருமணிநேரம் ஊர்தியில் செலவளித்து தங்குமிடத்தை அடைந்து ஆனந்தமாக சத்தியை ஊட்டினேன்.


கூடாரப்படுக்கையில் உறங்கி தீவளர்த்துச்  சூடாக்கி ஏணைகட்டியாடித் தூங்கி பயண அலுப்புக்குத் தீர்வுகண்டேன். பின் கட்டுச்சோற்றைச் சூடாக்கி உண்டு களித்துவிட்டு நண்பகல் ஒரு மணியளவில் பொடி நடைக்கு ஆயத்தமாகி காலாற அருவிகளோடு அளவளாவி ஆற்றோடும் அத்திணைகளோடும் உறவாடிவிட்டு இருப்பிடம் திரும்பினேன்


......தொடரும்

கடம்பதாசன் நினைவலைகள்