கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

புறநானூறு கண்ட புலி நானூறே



புறநானூறு கண்ட புலி நானூறே !!!

அய்ம்பத்தேழு அகவை காணும் தமி(ழ)கமே
அகிலமே அகம் வணங்கும் அற்புதமே
புறநானூறு கண்ட புலிப் படையே
வள்ளுவநெறி கண்ட வான் புகழே
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் உனையே!

ஒழுக்க படையமைத்து ஒழுக்கநெறி நீபடைத்தாய்
வெஞ்சமர் புரிந்து வஞ்சகரை நீஅழித்தாய்
சிங்கமென்ற சிங்களவனை நீசிறு நரியாக்கினாய்
தடைகளை தகர்த்தெறிந்து தமிழீழம் நீ கண்டாய்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் உனையே!

தமிழனுக்கோர் தனிநாடா எனதரணியே படையமைக்க
அகிலமே திரண்டாலும் அஞ்சுமோ புலிப்படையென
அஞ்சாத புலியென அறநெறி போர்புரிந்தாய்
வஞ்சகர் வஞ்சகத்தால் வீழ்த்தினர் உனையே
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் எம்தலையே


மரணம் நின்னுடலை மரணித்தாலும் மன்னவா
உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் நின்புகழே
உனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
உன் வழியில் நாங்கள் தமிழர்கள்!

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 மூச்சு, நிமிடத்திற்கு 360 மூச்சு வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. 

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

நன்றி

மதன் எல்லைத் தமிழன்

படத்துக்கும் பதிவுக்கும்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பிற்கு சிறப்பு வரிகள்... வாழ்த்துக்கள்...