கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

காரைக்கால் பொட்டி சோறு

காரைக்கால் பொட்டி சோறு' அழைப்புக் கொடுத்து வீட்டில் நடத்தப்படும் விருந்துகள் அல்லாமல் ஏதாவது மற்ற தேவைகளை முன்னிட்டோ, நேர்ச்சை/வேண்டுதல் அல்லது இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டோ சாப்பாடு தயாரித்து ஏழைகளுக்கும், வேண்டிய மற்ற வீடுகளுக்கும் கொடுத்தனுப்ப பனை ஓலையினால் நேர்த்தியாக செய்யப்பட்ட ('குறப்பெட்டி' என்று சொல்லப்படும்) பெட்டிகளில் 'பொட்டி சோறு' அனுப்புவார்கள். அதில் சூடான நெய் சோற்றினைப் போட்டு, அதன் மேல் தால்ச்சாவும், 'தனி கறி (or) களரி கறி' என்று சொல்லப்படும் கறி குழம்பும் ஊற்றிக் கொடுத்தால் பனை ஓலையின் வாசனையுடன் கூடிய‌ அதன் மணமே தனி மணம்தான் :) அதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.




எனது ஊர் பரங்கிப்பேட்டை யில் இதற்கு சற்று மாற்றமாக மண் சட்டி(சிக்லா)சானக் என அழைப்பார்கள் மண்ணினால்லான குடுவை போன்ற பாத்திரம் இதற்காகவே பிரதியோகமகவே தயார் செய்வார்கள் நம் அதை சானக் சோறு என அழைப்போம் ஆனால் இப்போது அது மறைந்து விட்டது


உண்மைதான். இதன் ருசிக்காக நாகூரில் இதை வாங்கி வரும் பிச்சைகாரர்களிடமே காசு கொடுத்து வாங்குவார்கள்.



தேடல் பதிவுக்கும் படத்துக்கும்:
நன்றி.

1 கருத்து:

அஸ்மா சொன்னது…

தளத்தினைக் குறிப்பிடாவிட்டாலும் ப்ரொஃபைல் தொடுப்பினை கொடுத்தமைக்கு நன்றி சகோ.