கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

திருப்பூர்


திருப்பூர்:-
திருப்பூர் மாவட்டம் அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய பிரிவுகளையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய பிரிவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகு வரலாற்று ஆராய்ச்சியின் படி திருப்பூர் என்பது தோட்டம் என பொருள் பெற்றதாகும். திருப்பூர் 
நகரம் விவசாய நிலங்கள் நிறைந்து இருந்துள்ளது. திருப்பூரில் இருக்கும் தொழில் அதிபர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களே.


விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வேறு தொழில் துவங்க விவசாயிகள்முடிவு செய்தனர். பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து தொழில் கற்று சிறு முதலீட்டாளர்களாக உருவெடுத்தனர். பழைய வடிவிலான பனியன் தயாரிப்புகளில் இருந்து புதிய பனியன் தயாரிப்பு முறைகளை 1970களில் புகுத்தினர். முதல் தலைமுறையினர் சிறு முதலாளிகளாக உருவெடுத்து பல துணை நிறுவனங்களை நகரம் முழுவதும் உருவாக்கினர். இவ்வாறு திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் உலகின் முக்கிய பனியன் உற்பத்தி நகராமாக உருவெடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: