கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 31 டிசம்பர், 2015

கலித்தொகை

தொல்காப்பியம் நீண்ட நெடித்த மாந்தனியலைக் கற்பிக்கும் நூல் திருக்குறளும் தொல்காப்பியமும் அறனை முன்னிறுத்தும் தமிழகம் ஈய்ந்த பெட்டகங்கள். முன்னையது வாழ்வை இயம்பிய நூல் இரண்டாவது வாழ்வை நெறிப்படித்திய நூல் இரண்டும் இலக்கண இலக்கிய நூல்களே! இவ்விரண்டும் உலகம் சார்ந்து உலக மக்களை முன்னிறுத்தி தமிழில் அமைக்கப்பட்டவை இவ்விரண்டும் வழிநூல்களே அல்லது தொகுப்பு நூல்களே என்று உற்றறிந்து கொள்க.இவ்விரண்டு நூல்களுக்கும் கருத்தியலில் நிறையவே ஒப்புமை உண்டு."முந்து நூல் முனைவர் கண்டவாறு".நாட்டார் பாடல்கள் உரைகள் கதைகள் பின் இது இப்படித்தான் நிகழும் என்றும் தொன்மைக்காதைகளால் மக்கள் வாழ்கை இலக்கியமாவதை ஆபிக்க குரங்கு காட்டுமிராண்டி மனித விலங்குகளில் இருந்து நாகு(நாகர்) எனப்பட்ட மாந்தர் அறிவு மாந்தராய் வலுப்பெற்றனர் எனலாம். ஓரிலக்கம் - பத்தாயிரம் - ஆயிரம் - நூறு என ஆண்டுகள் வளர்ச்சி பெற்று வள்ளுவருக்குப் பின் கரணத்தில் வாயிலாக வாழ்க்கை நெறிப்பட்டது. வள்ளுவம் - தொல்காபியம் - சிலப்பு என கற்பியல் பேணப்பட்டது தமிழர் குமுகாயத்தில் தான். வாழ்க்கை என்பது பொருண்மியம் அந்த பொருண்மியத்தைக் காக்க போராடும் திண்ணம் அதனால் ஏற்படும் கலி. ஒரு வாழ்க்கைத் திருத்தத்தையே காட்டிநிற்கிறது.

இனி கலிபற்றி தொல் காப்பு இயம் கூறுவதைப் பார்ப்போம்

துள்ளல் ஓசை கலியென மொழிப

கலித்தளை யடிவயின் நேரீற் றியற்சீர்
நிலைக்குரிய தன்றே தெரியு மோர்க்கே

அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி
இருநெடில் அடியுங் கலியிற் குரிய

எழுசீர் இறுதி யாசிரியங் கலியே

ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழோடு கலிநால் வகைத்தே

கலித்தொகையைத் தொகுத்தவர் மதிரை நல்லந்துவனார் . 
இவர் நல்லந்துவனார்  யார்? நல்லந்துவனார்  பிறப்பால் அந்தணர்(அம்+தண்+அர்) வசிட்டர் போன்றவரின் தண்மை போன்றே நீரின் குணத்தை ஒத்தவர்.

 "நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி"


 "கற்றறிந்தார் ஏத்தும் கலி"

மதுரை ஆச்சரியர் நல்லந்துவனார் கலித்தொகையை தொகுப்பதன் நோக்கம் என்ன? ஏன் இந்நூலைத் தொகுக்க வேண்டும். தொகுப்பதனால் ஏற்படும் விளைவுகள் எவை?

கலித்தொகைக்கு உரை எழுத்திவர் பேராசான் நச்சினிக்கினியர்

முனைவர் நல்லந்துவனார் மால் பத்தர். பின்னையவர் சிவபத்தர் அல்லது வேதபத்தர். மால் வழிபாடு ஆகமத்திலும் சிவ வழிபாடு வேதத்திலும் நிறைந்தன. பெண்ணை வழிபடுதல் கங்கைக்கு இப்பாலும் ஆணை வழிபடுதல் கங்கைக்கு அப்பாலும் காணலாம். திரு பெண்ணைக் குறித்ததும் பெரு ஆணைக்குறித்தலும் மரபு. பின்பு உள்ள காலத்தில் திரு ஆணையும் குறித்தது.பெரு, திரு இரண்டும் இணைந்து பெரியோன் திரு என்றாகி திருமான் திருமால் என்றழைக்கப்பட்டான்.வீற்றியிருப்பவன் - வீற்றினன் - விட்ணன் - விஷ்ணன் - விஷ்ணு என்றைக்கப்பட்டான். பாற்கடலில் வீற்றியிருப்பவன் அதாவது பால் மண்டலத்தில் வீற்றினன்.சிவனுக்கும் பெரியோய் சிவனையும் இயக்குபவன். சிவனின்றி சத்தியில்லை சத்தியின்றி சிவனுமல்ல. இதிகாயத்தின் தொடக்கமும் இதுவே!இவையின்றி உலமும் இயங்குவது அரிதே!
அகர முதல எழுத்தெல்லாம் மாதி
பகவன் முதற்றே வுலகு

வள்ளுவருக்கு பரிமேலழகர் நல்லந்துவனாருக்கு நச்சினாக்கினியர்.
வள்ளுவருக்கு நல்லந்துவனார்

கலித்தொகையை  எடுத்தாள்வதற்குரிய கரணியம்
கலியே வாழ்க்கை
1)பெண்ணியம் பாராட்டுதல்
2)தோழமை பாராட்டுதல்
3)மூத்தோரைப் பாராட்டுதல்
3)குடும்பம் பாராட்டுதல்
4)மாந்த நேயம் பாராட்டுதல்
5)உறுதி பாராட்டுதல்
6)சுற்றந்தாழால் பாராட்டுதல்
7)ஆண்மை பாராட்டுதல்
8)தம்மைப் பாராட்டுதல்
9)மரபு பாராட்டுதல்



கடவுள் வழுத்து  1
ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக்
கூறாமல் குறித்ததன் மேல்செல்லும் கடுங்கூளி
மாறப்போர் மணிமிடற்று எண்கையாய் கேளினி

படுபறை பலவியம்ப பல்லுருவம் பெயர்த்துநீ 
கொடுகொட்டி ஆடுங்கால் கோடுய ரகலல்குல்
கொடிபுரை நுசும்பினாள் கொண்டசீர் தருவாளோ
மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்றோள்
வண்டரற்றும் கூந்ததாள் வளர்தூக்குத் தருவாளோ

கொலையுழுவைத் தோலசைஇ கொன்றைத்தார் சுவற்புரள
தலையங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால்
முலையணிந்த முறுவலாள் முன்பாணி தருவாளோ

எனவாங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்றிவை
மாணிழை அரிவை காப்ப
ஆணமில் பொருளெமக்கு அமர்ந்தனை யாடி(1)

தரவு

ஆறறி அந்தணர்க்கு 
இறைவ!
ஆறு உறுப்புகளையும் அறியும் அந்தணர்க்கு,

நிருத்தம், வியாகரணம், கற்பகங்கள், கணிதம், பிரமம், சந்தம் இவ்வாறையும் அறியும் அந்தணர்

அந்தணர்
அழகிய கருணையை உடையவ
நிருத்தம்
உலகியல் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராய்வது.
வியாகரணம்
உலகியல் சொல்லையும் வைதிகச் சொல்லையும் ஆராயும் ஐந்திரம் முதலியவை
கற்பகங்கள்
பாரத்துவாசம், பரமார்த்தம், பரமாத்திரையம் முதலியவை.
கணிதம்
நாராயணீயம்,வராகம் முதலியவை
சந்தம்
எழுத்தாராய்ச்சியாகிய பிரமும் செய்யுள் இலக்கணமும்.


அருமறை பலபகர்ந்து
அரிவையான மறைகள் பலவற்றையும் நீ அருளினாய்.
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக்
தெளிந்த நீரையுடைய கங்கையின் விரைவை அடக்கி அதனைச் சடையின் ஒரு பகுதியில் அடக்கினாய். மூன்று புரங்களில் தீயைச் செலுத்தினாய்
கூறாமல் குறித்ததன் மேல்செல்லும் கடுங்கூளி
மனத்தினால் எண்ணும் பொருளுக்கும் எட்டாமல் நிற்கும் கடிதான கூனியின் முதுகிடாத போரை உடையாய்.
மாறப்போர் மணிமிடற்று எண்கையாய் கேளினி
நீலமணி போன்ற கரிய கழுத்தை உடையாய். எட்டுத்தோள்களை உடையாய்.
இங்ஙனம் கண்ணுக்குப் புலனாய் நின்று இப்போது யான் கூறும் இதனையும் கேட்டருள்வாயாக.

தாழிசை

படுபறை பலவியம்ப பல்லுருவம் பெயர்த்துநீ 
(பேரொலி எழுப்பக்கூடிய நின் திருக்கைகளிலே இருக்கின்ற) பலபறை வாச்சியங்களையும் ஒலிக்கும் நீ கண்ணுக்குப்புலனாய்ப் பல வடிவங்களையும் மீண்டும் நின் திருவுருவிடத்தே அடக்கிக்கொள்கிறாய்

கொடுகொட்டி ஆடுங்கால் கோடுய ரகலல்குல்
கொடுமையான கொட்டி என்ற கூத்தை நீ ஆடினாய். ஆடிம் அக்காலத்தில் பக்கத்தில் இருக்கக் கூடிய மலைகள் போன்று உயந்துள்ள தோள்களையுடைய(அல்குல்-அது)

கொடிபுரை நுசும்பினாள் கொண்டசீர் தருவாளோ
கொடிபோன்ற இடையையுடைய உமையவளோ தாளம் முடித்துவிடும் காலத்தைத் தன்னிடம் பொருந்துய சீரைத் தருவாள்?(அவளே அளித்தருள் வேண்டும் ஏனென்றால் அங்கு வேறு ஒருவர் இல்லையே!)

தொடரும்.........


.





புதன், 30 டிசம்பர், 2015

கச்சிப்பட்டான்

பால் தெளிக்கு பல ஏக்கர் நிலமா? அப்போ செத்தவர் எத்தனை பேர்! பால் படுக்கைக்கு பக்கத்தில் உதிரப்படுகை குருதி ஆறாய் ஓடியது போல !! இதுவெல்லாம் திருப்புறம்பிய கொள்ளிடக்கரை அமைந்த இடம்.
இன்றும் வழிபாட்டுக்கு ஈட்டி,சூலம்,வேலும் நடப்பட்டுள்ள இடங்கள்.என்ன நம்ம ஆளு கொஞ்சம்,கொஞ்சமா சேர்த்துக்கிட்டது போக கும்பிடன்னு கொஞ்சம் விட்டு வைத்திருக்கிறார்கள்.நன்றி சொல்லனும்.ஆயிரம் வருஷ்மா வச்சிருக்கிறார்களே.அதில ஒரு திட்டு தான் அய்யனார் திட்டு.விளைஞ்ச வய காட்டு வரப்புல சாமத்தியமா நடந்தா ஊருக்கு மேற்கே கொண்டுபோய் விடும் இடம் தான் இந்த அய்யனார்த் திட்டு.உயர்நீதிமன்றம் வரை சென்று போராடும் சிங்காரவேலு பத்திரமாக வைத்திருக்கிறார்.அப்படியென்ன இந்த அய்யனார் திட்டுல.,எத்தனையோ மாவீரர்கள் குருதியால் நனைந்த இந்த மண்,கங்கர் மன்னன் முதலாம் பிருதிவிபதியையும் வீழவைத்தது.கருநாடகப்பகுதியை ஆண்டவர் கங்கர்,அவரு ஏன் இங்க வந்தார்? விதி,...அவர்கள் நாட்டிலிருந்து வரும் காவேரி மண்ணியாறாய் கொள்ளிடமாய் பிரிந்து ஓடும் மண்ணில் இதற்கு இடைப்பட்ட மண்ணில் வீழவேண்டும் என்று, அதை நான் எழுத நீங்க படிக்க...விதி.
வயக்காட்டின் நடுவே மூங்கில் தோப்பில் அய்யனாராய் வழிபடும் பள்ளிப்படையாகி அதை சதாசிவபண்டாரத்தார் கண்டு சொல்ல வேண்டும்...விதி.
கிபி 862-ல் அரிசிலாற்றாங்கறையில் (அசலாய் நம்ம இன்றைய அரசலாறு தான்) இவன் அப்பன் பராசக்ர கோலாகலப் பாண்டியனைத் தோற்றோட செய்த பின் அவனும் செத்து போக அவன் மகன் வரகுணபாண்டியனால் 18 ஆண்டுக்குப் பிறகு விழவேண்டிய நிலை இந்த முதலாம் பிருதிவிபதிக்கு வந்தது பல்லவனால் தான்.
என்ன செய்ய சோழப்பேரரசுக்கு அடித்தளம் போட்ட கணக்கு வழக்கு இங்கு தான் தொடங்குகிறது.




கச்சிப்பட்டான்( கச்சி என்பது காஞ்சியை அதாவது பல்லவரைக் குறிக்கும்,பட்டன் என்பது போரில் வீழ்ந்ததைக் குறிக்கும்) 

இவ்வாண்டு 2016

நத்தார் பிறந்த நாள் இவ்வாண்டு வெண்பனியில்லாமல் பிறந்தது. 



நத்தார் பாலனின் பிறந்தநாள் துருவக நாட்டில் எந்த பனித்துகள்களும் இல்லாமல் பிறந்ததின் செய்தி என்னவெனில் காலநிலை மாற்றமே. ஆண்டுகளுக்கு ஒருவிழுக்காடு பனி உருகுவதை உலகம் அறிந்திருக்கும் போழ்தும் அது பற்றிய அக்கறை இல்லாமல் உலக மயமாக்கல் சென்று கொண்டிருக்கிறது.இவாண்டோடு 15% பனி உருகியுள்ளது. முனைவர் அல்கோர் போன்றோர்கள் உலகத்தின் காலநிலை மாற்றம் பற்றி கூறியும் சில தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அமெரிக்கத்தின் வல்லாண்மைகரணியமாக பல மாற்றங்கள் ஏற்படலாம். அன்றியும் தொடர்ந்து வறுமையும் எளிமையுமே தோன்றும். உலகம் 2011 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாற்றத்தையே நகர்த்துகிறது.புவியியல் மானுட சூழல் மாற்றம் இன்னும் நான்காண்டிலேயே நிகழும் என்பது திண்ணம்.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

கோண்மீன்கள்

இரண்டு இலக்கிய மலைகளுக்கு நடுவே கைப்பிடித்து நடக்கும் தமிழாறு போன்ற உணர்வைப்பெற்றேன்.என்னே ஆராய்ச்சிப் பார்வை என்னே இலக்கிய நோக்கு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையே! ஒருவர் சொல்லாய்வறிஞர் மற்றவர் இலக்கியவறிஞர். 


செவ்வாய், 24 நவம்பர், 2015

இவையாவும் கற்பனை

காலை நான்கு இருபத்தொன்பது மணியிருக்கும் நிலவைச் சிவந்த நிலையில் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் கடம்பன் . திடீரென ஏதோ ஒரு நினைவு அவனைத் திரும்பிப்பார்க்க வைத்தது. அது ஒரு இருட்டறை அவனும் இன்னும் சில கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அந்தச்சில கைதிகள் பிலிப்பைன்சு நாட்டைச்சேர்ந்தவர்கள் கடற்கொள்ளையர் என ஐயங்கொண்டு சிறிலங்கா சுங்கத்தினர் கைதுசெய்திருந்தனர். அன்பு அவனும் வெளிநாடு போகவேண்டி திருப்பியனுப்பப்பட்டு தடுக்கவைக்கப்பட்டிருந்தான். தொலை பேசி பேசுவதற்கு எந்தப் பணமும் அவனிடம் இல்லை அந்த நண்பர்கள் வைத்திருந்த பணத்தில் ஆளுக்கொரு அமெரிக்க டொளரைf கொடுத்து உவதியிருந்தார்கள்.நினைவு மீளவும் மீண்டும் நிலவைப் பார்த்தான் வியப்போடு .....!
விகாரையில் வாழ்ந்த பசுமை வாழ்வு நெஞ்சை நெகிழ வைத்தது. அந்த  விகாரையும் அதில் வாழ்ந்த பிக்குமாரும் நினைவுகூறத்தக்கவர்கள். பிக்குக்களின் தலைமைபிக்கு மிகவர் நல்லவர் நல்லவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கொண்டவர். நெருங்கிப்பழகி அன்புகாட்ட வல்லவர். புத்தரின் மறு உருவம் என்றே சொல்லலாம். ஒரு நாள் விகாரையில் அடைக்கலம் புகுந்த காலம் தனியார் கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருந்தேன். காலையில் கல்விகற்கச் செல்வது வழக்கம் அன்று காலை புத்தகுரு வெளியே சென்று திரும்பியிருந்தார் அவர் வந்த வழியில் சோதனைசெய்து கொண்டிருந்தார்கள் சிறிலங்கா காவற்துறையினர். கல்விநிலையத்திற்குச் செல்வது நல்லதல்லவென்று தடுத்து நிறுத்தி மீண்டும் அறைக்குச்செல் என்று கூறியதால் தான் உயிரோடு இருப்பதை நினைத்து நிலவை பார்த்தான் வியப்போடு ......!

சனி, 21 நவம்பர், 2015

யாதும் ஊரே யாவரும் கேளிர் (Unitarian.....)

தள்ளா விளையுளும் தக்கரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு
குறையாத விளைச்சல் தரும் உழவர் பெருமக்களும் தகுதி நிறைந்த நடுநிலை பண்புடைய சான்றோரும் கேடில்லாத செல்வரும் ஒருங்கே பொருந்தியிருப்பது சிறந்த நாடாகும்!
Bøndenes barn er ikke mindre fortjent til å gi etter for den nøytrale karakteren av adelsmannen kompatibel kombinasjonen er bare kjempebra!-Norsk
Coloni pueri non minus dignum Iudæos deprecans, subditusque neutras character de homine nobili compatitur compositum est simpliciter magna!-Latin
Kinders boere is nie minder verdien toegee aan die neutrale karakter van die edelman versoenbaar kombinasie is eenvoudig wonderlik!-Africa
Τα παιδιά των αγροτών δεν είναι λιγότερο άξιοι να αποδώσουν με τον ουδέτερο χαρακτήρα του συνδυασμού συμβατών ευγενής είναι απλά υπέροχο!-Greece
Kinder der Landwirte sind nicht weniger verdient man sich dem neutralen Charakter des Adligen kompatible Kombination ist einfach großartig!-Germany
ليس لديهم أطفال المزارعين أقل استحقاقا للالرضوخ لالطابع المحايد للتركيبة متوافق النبيل هو ببساطة كبيرة! - Arabic
Фермерүүдийн хүүхдүүд нь ямар ч зүгээр л агуу юм язгууртан нийцтэй нэгдлийн төвийг сахисан, зан бууж бага зүй ёсны юм!-mongili
Не дети фермеров не менее заслуживает уступая нейтральный характер дворянина совместимый комбинации просто здорово! -Ruski
Farmers' children are no less deserving of yielding to the neutral character of the nobleman compatible combination is simply great! - English

*
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின்
Verden har blitt kvitt bakvaskelse Ikke strekk barbert


வியாழன், 19 நவம்பர், 2015

தலைமுறை இடைவெளிக்குள்



துப்பாக்கியோடு திரிகின்ற சிறுவனே
பக்கத்தில் வா!
உனக்கு வயது பதின்நான்கா
பதினைந்தா?
எத்தனையாக இருந்தாலும்
மகனே! அருகில் வா
உன் பாதத்தைக் காட்டு
தூசி படிந்த கால்களை
சேவிக்க விரும்புகிறேன்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
காலையில் சத்தியப்பிரமாணம்
செய்யும் போது
இந்த மந்திரச் சொல்லை
விசுவாசிப்பதாகக் கூறுகின்றாயே!
இந்த வேத மந்திரம்
உன்னை மலைபோல் நிமிர்த்துகின்றது.

உனக்கு துப்பாக்கிதூக்கும் வயதல்ல
வாய்ப்பாடு பாடமாக்கும் வயது
என்றாலும் நீ நடக்கும்போது
அட்டதிக்குகளும் அதிர்கின்றதே!

நீ மூச்சு விடும் போது.....
புயலொன்று புறப்படுகிறதே!
உன்னைப் பார்க்கும் போது
எனக்குப் பெருமையாக இருக்கிறது;
பொறாமையாகவும் இருக்கிறதே!

உன் வயதில் நானென்ன சாதித்தேன்
ஒன்றுமில்லை.....
ஒன்றுமேயில்லை
கிட்டி அடித்தேன்
கிளித்தட்டு மறித்தேன்
வெள்ளையப்பாவீட்டு விளாத்திக்குக்
கல்லெறிந்தேன்.

நீயோ
கையில் துவக்கேந்தி
களத்திலே நிற்கிறாய்
கொட்டும் மழையினிலும்
குறிபார்த்து நிற்கின்றாய்
தூங்காத விழியோடு
சென்றிக்கு நிற்கின்றாய்

உன் பாதத்தைக் காட்டு
கால்களை முத்தமிட
கவிஞன் விரும்புகிறேன்

நீயும் உன் போன்ற புலிகளும்
களத்தில் உலாவரும் காலம்வரை
உலகத்துப் பகையெல்லாம்
ஒன்றாய் எதிர்க்கிலும்
வேங்கைகள் பாய்ந்து......
வெற்றி கொள்ளும்

உணர்வு
தை 1990






புதன், 18 நவம்பர், 2015

நோர்வே நாட்டு பறவைகள்

ஈழத்திருநாடு அதில் தமிழீழத்தாயகம் தாயகத்தில் இருபது மாநிலங்கள் மாநிலங்களில் ஆறுகளும் ஓடைகளும் ஏரிகளும் குளங்களும் குட்டைகளுமென நீரின் நேக்கம். ஈச்சம்பழங்களும் பாலப்பழங்களும் பலாவோடு வகைவகையாய் மா வாழைகள் அன்னமுன்னா இலந்தையோடு பப்பாளிப்பழங்களும் முந்திரிகையென பழவகைத் தோட்டம். கற்பகத்தருக்களோடு பாக்கும் தேக்கும் வீரை பாளை முதிரை வாகை வேம்பு வேங்கை கொய்யா பூவரசு கிடக்கைகளும். புறா கிளி காக்கை குயில் மயில் கோழி சேவல் வல்லூறு சிட்டுக்குரிவிகளோடு செண்பகமும். அடவி அருவி தென்றல் திங்கள் நயனங்களும் கொண்ட தண்டலை.சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா என பட்டுக்கட்டிவரும் மாட்டுவண்டி. இவற்றையெல்லம் உவந்து வாழ்த வாழ்வு ஏனோ நோர்வேயிலும் பழக்கப்பட்டுவிட்டது.ஆறோடு நடப்பது அருவியோடு விளையாடுவது பறவைகளோடு பாடுவது என்று நீண்டு நடக்கும் வேளையிலே பறவைகளின் வாழ்வை இரசித்துப்பார்க்கும் பொழுதுபேருவப்பு யாம் பெற்ற இன்பன் பெறுக இவ்வையகம்.நான் அறிந்த பறவைகள் பற்றிய சிறு குறிப்பு
பகம்(Pica)

இதன் பெயர் பிகா தமிழில் பகம். இது கருமை நிறமும் வெண்மை நிலமும் கலந்தது. பகம் 45 - 48 சென்ரிமீற்றரும் வால் 25 சென்ரிமீற்றரும் அளவுடையது. இது சின்ன பறவைக் குஞ்சுகளை பிடித்துண்ணக்கூடியது. பறவைகளின் முட்டைகளையும் குப்பைக்கூழங்களையும் உண்ணவிருப்பமுடையது. இது மனிதர்களை அண்டியே வாழக்கூடியது. இது புலனாயும் திரனைக் கொண்டுள்ளது அத்துடன் வலகரமாகவும் வாழக்கூடியது. அதன் கூட்டை மரக்கூச்சிகளால் நன்றாகக் கட்டக்கூடியது.கூட்டின் அடிப்பகுதியை மக்குகொண்டு பாதுகாக்கும்.பனிகாலத்தில் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டில் ஒம்பியிருக்கும்.பிகாக் பிகாக் வென்று ஒலியெழுப்பக்கூடியது.உச்சில் இருந்து கீழே வருவதாயின் அம்பு வேகத்தில் இறக்கைகளை ஒடுக்கி அலைவடிவில் கண்ணிமைக்கும் நொடியில் வந்துவிடும். உணவைத் தேடும் போழ்து இன்னிசையெழுப்புக் கொண்டு தேடும் அழகே அழகு.நோர்வேயிலேயே வாழும் பறவை. அதிகமாக உள்ள பறவையை எங்கும் காணலாம்.


இதன் கூடுகளை பனிகாலத்தில் பார்த்து மகிழலாம்.

பொன்கண் வாத்து(Kvinand)

இது வாத்து குடும்பத்தில் ஒரு பறவை, இவ்வாத்தின் உடல் செங்குத்தான நெற்றியில் பளிச்சென்றும் பெரிய தலை உள்ளது. உடல் ஒரு பிட் பருமனாக தெரிகிறது. ஆண் சற்றே பெரியது. ஆண் சுமார் 49 செமீ , பெண் சுமார் 39 செ.மீ. உள்ளன. ஆண் கருப்பு பச்சை தலை நிறம் மற்றும் அலகு ஒவ்வொரு பக்கத்தில் ஒரு தனித்துவமான வெள்ளை கன்னத்தில் இணைப்பு. பெண் கருப்பு தலையில் நிறம் மற்றும் கன்னத்தில் கறை குறைவாக வரையறுக்கப்பட்ட மழுப்பு இந்த இனங்களின் கண்களின் பண்பு தங்க மஞ்சள் நிறத்திலிருந்து பெறப்படும்.
இந்தப் பறவைகளை ஆழம் குறைவான மாரியாற்றில்(Maridal) பார்த்து மகிழ்வேன். அவற்றுக்குத் தீனியும் கொடுத்து மகிழ்வேன்.மிகவும் அறிவுடைய பறவை. பெரிய பறவைகளோடு இருப்பதை அதிகம் விருப்புவதில்லை. நான் பார்த்த பறவைகளில் இவை அழகானவை.
thank you
http://oyvindbuljo.blogspot.no/2010/02/mer-kvinand-under-vann.html

பழுப்புவரி வாத்து

இந்தப் பறவையை நாம் அரைப்பங்குதீவில்(snarøya) பார்த்தோம். இறைச்சி வாட்டி உண்டுவிட்டு வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போழ்து அங்கு வந்திருந்தன.என்றும் காண்த இப்பறவையைக் கண்டதும் பேருவப்பாயிற்று.மற்றைய வாத்துகளை விட பெரிதாகக் கானப்பட்டன. அவற்றின் நீளம் 65 - 90செ.மீ செட்டை 140 - 175செ.மீ தலை கடும் மனிணிற நிறத்தைக்கொண்டது. நீண்ட கழுத்தைக் கொண்டது. காலும் அலகும் செம்மஞ்சள் நிறத்தைக் கொண்டது. காண்டிநேவியா காடுகளில் காணப்படுகின்றன. இது வடநோர்நோர்வேயில் தொகையாகக் காணப்படுகின்றன. இது இலைதுளிர் காலத்துக்கும் இலையுதில் காலத்துக்கும் கிழக்கு மாநிலங்களில் வந்துசேரும்.அதன் ஒலி அங்-அங்-அங் ஒலிக்கும்.
 tjank you
http://valterkristensen.blogspot.no/2012/04/sdgas.html


திங்கள், 16 நவம்பர், 2015

அண்ணையின் அன்னை


பாராண்ட இனமொன்று
......பரித்தவித்த வேளையிலே
பாராள வேண்டுமென்று
......பெருமகனைக் கொடுத்தனையே
தானாள வேண்டுமென்று
.......ஒருபோதும் நினைத்ததில்லை
தமிழாள வேண்டுமென்றே
.......தம்பியரும் நினைக்கின்றார்
சீராளன், சீராளன் சினந்தாலோ
.......சிங்களத்தான் படையுடையும்
ஆனாலும் தாயே
.......அவன்வாயால் "அம்மே"
என்றழுதாலோ அவனுக்கும்
.......உயிர்ப் பிச்சை
அளிக்கின்ற வீரம்
.......அவனெல்லவோ மறவன்.

அம்மகனை ஈன்றெடுத்தாய்
.......அதுவே நற்பேறே
வம்பனாய் தும்புக்குப்
......போனதுமில்லை போக்கிரியாய்
சண்டைசச்சரவு செய்ததோயில்லை
.....தமிழர் நோவதைக்
கண்டவுடனே களத்தில்
.....குதித்தான் வீரர்மரபாய்
ஆயினும் இரண்டகன்
.....பஸ்ரியாம் பிள்ளை
கடைக்குட்டி யவனையொருநாள்
..... கம்பியெண்ண வைப்பனென்பான்
முடிந்தால்நீயும் பிடியேன்
........அதற்கு முன்பே உன்னையவனும்
பிளந்து போடுவான் என்பாய்
..........அன்னையேயுன் பேச்சில்
தமிழ்த்தாய் பூரித்தாள்
......நீயின்றிஆரோ தமிழ்த்தாய்

வாசகசாலைக் குற்றியிலே
.....வரிசையாய் இருந்து
நகைச்சுவை சொல்லி
....நாள்கழித்த கூட்டத்திற்குத்
தெரியாது தாயே
.....போராட்டத்தின் வலி
குண்டுக்கும் நடுவில்
......குப்பிக்கும் அருகில்
மண்மூட்டைக்கும் இடையில்
.....பார்வல் இருக்கையில்
இருந்தானுக்குத் தானே
....தெரியும் விழுப்புண்ணின்
வேதனையும் தாகமும்
........விடுதலையின் பண்ணும்
முப்பதாண்டுகள் மண்டையுடைந்து
.......முக்கிமுக்கி முடியாதென்று
முப்பஃது நாடுகளைக்
......கூவி அழைத்து
மக்களை எல்லாம்
.....நரபலி ஆக்கி
இராசபட்சிகள் வென்றோவிட்டன
.....ஒருபோதுமில்லை வெல்வோம்

தழையில் தங்கியிருந்தக்கால்( Hytte Life )

  

தழையைச் சென்றடைந்ததும் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டோம். பண்ணைவளர்ப்பில் முன்னெடுத்துக்காடாக விளங்கினார்கள். மாடுவளர்ப்பு மந்தைவளர்ப்பு கோழிவளர்ப்பு

அவர்கள் பண்ணைவளர்ப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள் அதுமட்டுமல்லாமல் சிறந்த கல்விமான்களாக விலங்கினார்கள். நாங்கள் தழையில் தங்கும் நாளில் அவர்களும் வேறொரு தழைக்குச் செல்வதற்கு அணியமாக இருந்தார்கள். அங்கு அவர்கள் குழந்தைகளை மலை ஏறுவதற்குக் கொண்டு செல்வதாக என்னிடம் கூறியிருந்தார். வேற்று கிரக வாசிகளைப்போன்று எம்மோடு பழகவில்லை தங்களுடைய உறவுகளாகவே பழகினார்கள். வெள்ளையினத்தவர் பண்ணைமுதலாளிகள் பெரும் தேசத்துக்கே சொந்தக்காரர்கள் ஆனால் மனிதர்களோடு எப்படி பழவேண்டும் என்று கற்றிருக்கும் பண்பாளர்கள். எங்கள் தமிழைப்போன்று பேசுவதால் தானோ நல்லவர்களாக உள்ளார்கள்.
  


அடுத்தநாள் நாங்கள் செங்குத்து மலைக்கு செல்ல இருந்ததால் அதைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். பிரட்டிவந்த புலால் துண்டுகளை வாட்டி உண்பதற்கு அணியமானோம். இலையுதிர் காலத்தில் காடுகளிலிலோ அல்லது தீபற்றக்கூடிய இடங்களிலோ வாட்ட முடியாது அப்படிச் சட்டத்தை ,மீறினால் பணம் தண்டமாக கொடுக்கவேண்டி வரும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேலாகத்தான் இருக்கும் சரியாகத் தெரியவில்லை. தழைக்கு முன்னால் நிலவு எறித்துக்கொண்டிருந்தது புத்தம்புதிய நிலவு மஞ்சள்காகக் காட்சியளித்தது. நிறைமதியில் மகன் பாவலன் நிலாச்சோறு கவளமாகத் தரவும் இரட்டிப்புச்சுவை இது போல் போறு எல்லோருக்கும் வாயப்பதில்லை மற்றைய இரு சிறுவர்களும் இறைச்சி வாட்டுவதற்காக காத்திருந்தனர். பாவலனுக்கு புலால் அதிகம் பிடிக்காது.உயிரினங்களைக் கொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பான்.

   

எனக்கும் உயிரினங்களைக் கொல்வது பிடிக்காது. கறியாகிக் கொடுத்தால் நன்றாக சுவைத்துச் சாப்பிடுவேன். மூத்தவனுக்கு பாட்டன் முப்பாட்டன் போல் இறைச்சி வேண்டும்.கடைக்குட்டிக்கு சுவையிருக்கவேண்டும். புலாலை வாட்டுவதற்கு இருவரும் காத்திருந்தனர். நாம் இருவரும் சோறுண்டுவிட்டு புலாலை வாட்டினோம். முதலில் சூட்டில் வைத்துவிட்டு பின் வாட்டினோம். உணவை உண்டுவிட்டு இருந்து கதைக்கத்தொடங்கினோம்.ஓரிரவு என்பதால் நீண்ட நேரம் பேச இயலவில்லை மலை ஏறும் ஆவலில் நால்வரும் உறக்கத்துக்குச்சென்றோம். ஆளுக்கொரு பொத்தகத்தைக் கொடுத்துவிட்டு எனது இயல்பான பொத்தகக்கட்டுடன் படுத்திருந்து வாசிக்கத் தொடங்கினேன். தழையில் தங்குவதற்கு நானும் குழந்தைகளும் எண்ணூறு குரோணர்கள் செலித்தினோம்.ஆ.....மறந்து போனேன் நாங்கள் சென்ற பின்னேரம் மாடுகள் ஆரவாரத்துடன்கானப்பட்டன. மாடுகளை தழையின் சொந்தக்காரரின் தகப்பன் வந்து அடக்கிவிட்டுச்சென்றார்.மாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன் எல்லாம் கடுவன் மாடுகள்.நிற்க ஆழ்ந்த வாசிப்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு இரவெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்தேன்.வாசித்த நூல் சிலப்பதிகாரம் புகார் காண்டம்.பின் அறிதுயில்


காலையில் எழுந்து காலைக்கடனை முடித்து விட்டு நாங்கள் தங்கிய அறைகளை துப்புரவாக்கி குளித்துவிட்டு மலைக்குப் புறப்பட்டோம். அதற்கு முன் கோழிகளோடும் சேவல்களோடும் விளையாடிவிட்டு திறவு கோலை கதவத்தில் கொழுவிட்டுப் புறப்பட்டோம். இப்படியொரு தழைவாழ்வை முன்னர் ஆகூழாக எண்ணியதில்லை. மலையும் மலை சார்ந்த நிலத்தில் கிடைக்கும் உவப்பு நாம் பெற்றபேறு. வடதுருவத்து மலைத்தொடர் அழகோவழகு.
"நீர்சூழ் மலைத்தொடர் நன்னாடு
நீண்டு கிடக்குது ஒளியோடு
பாரில் உதித்த வளநாடு
பார்பார் நோர்வே முதல்நாடு
பார்பார் நோர்வே முதல்நாடு"
 _ச.உதயன்_

சனி, 14 நவம்பர், 2015

தழையை நோக்கியே (hytte tur)

சிற்றூர்தியில் சென்றுகொண்டிருக்கிறோம் இலையுதிர்காலம் நோர்வே நாட்டில் கதிரறுப்புக்காலம் கூலங்களை ஆறுத்தபடி அறுப்பு இயந்திரங்கள் மூலம் கதிர்களை அறுத்துக்கொண்டு சென்றதை செல்பி மூலம் எடுத்துக்கொண்டோம். பின் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். மந்தை மேய்ப்பு மாடுகள் மேய்ப்பு பாற்பண்ணைகளில் இருந்து வெளியாகும் நாற்றம் பழைய பொருள்களை முற்றத்தில் போட்டு விற்றுக்கொண்டிருந்ததையும் பார்வையிட்டுக்கொண்டு பயணித்தோம். சின்னகாமரில் சில மணித்துளிகள் ஓய்வெடுத்துவிட்டு ஒத்தா(Otta)வழியாக உலூமை(Lom) சென்றடைந்தோம். முன்கூட்டிய திட்டத்தின்படி தழையில் ஓரிரவு தங்கினோம்.தழைக்குச் சென்றடைய பிற்பகல் ஆறு எடுத்தது.மூத்தசிறுவன் செல்லும் பாதைகளைப் பாதை அறிவுக்கும் செல்பியுடன் தொடர்புகளைப் போணினான். அதனால் இடையூறுகள் இருக்கவில்லை மிகத்துல்லியமாக அறிவுப்புப்பலகைகள் அப்பணியை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தன. சிறுவர்கள் மிகவும் கெட்டிக்கார்கள்.முதலில் பாதை கரடுமுரடாகத்தான் இருந்தது இரவோடு இரவாக வேறு பாதையைத் தேடினார்கள்.மூவரிலும் மூத்தவன் தாரை அச்சமறியாதவன். இளையவன் பாவலனே அச்சத்தில் உழன்றுகொண்டிருந்தான் கடைக்குட்டி கரிகாலன் கோவேரன் புதினமாக எல்லாவற்றையும் கேட்டறிந்தான். மலைசூழ் மரகதத் திருநாடு நோர்வே என்பது இவ்விடங்கள் தெளிவுபடுத்துகின்றன.
  


 





வெள்ளி, 13 நவம்பர், 2015

செங்குத்துச் சிகரத்தை நோக்கி

அதிகாலை செந்நிலவைப் பார்த்து சற்று அயர்ந்து தூங்கிவிட்டுக் காலை பத்துமணிக்கெல்லாம் வெளிக்கிட்டு பர்வத்தின் செங்குத்துப் பாதைக்குச் செல்ல சிற்றூர்தியில் புறப்பட்டோம். நானும் என் மகன்களும் மிக குதூகலமாகக் காணப்பட்டோம்.சுற்றுலாச் செலவு என்றாலே அலாதிப்பிரியம் அவர்களுக்கு ஓசுலோவில் இருந்து உலூம் என்னும் மாநிலத்துக்கு விரைகிறோம்.நோர்வே நாட்டு அதி உச்சி நெடுவரையின் நாலில் ஒரு பாகிதான்.என்றாலும் எமக்கு அதிஉச்சிதான் 2469 மாத்தல் என்பது.
கீழே அப்பனிமலை(Gald-hø-piggen)  பற்றிய ஆங்கில வடிவத்தின் சாரம்
(The highest mountain in Norway and Northern Europe. Glittertind has traditionally been the highest point with its snow-dune, but in the 2000s was lower than Galdhøpiggen even counting the cornice, 2466 m. Galdhøpiggens summit snow bar in summer.)






கோட்டை செய்த கேடு

நன்றி தினகரன்

நன்றி புலிகள்


ஒற்றைப் பூவரசு
ஒரு முனியப்பர் கோயில்
பூவரசைச் சுரண்டியபடி
பேதையில் பேதை
இலண்டன் சாள்சின்
பிறந்த நாளுக்காய்
கட்டிவைத்த மணிக்கூட்டுக்கோபுரம்
தந்தை செல்லா நினைவுத்தூபி
ஓரிலக்கத்துக்கும் குறைவான
நூல்களை அடைக்கி வைத்த
யாழ் நூலகம்
வேம்படி மகளிர்
மத்திய கல்லூரிகள்
துரோகி துரையப்பா
விளையாட்டரங்கம்
வாடிவீடுகள்
நான்காம் உலக
தமிழாராய்ச்சி நிகழ்வுக்கோலம்
தோட்டாக்களின் வேட்டொலிகள்
திகில் பரபரப்பு
பதினொரொரு பேரின்
இறுதி வணக்க நிகழ்வு
கரிகாலன் வரவு
கைது செய்தல்
காணாமல் போதல்
எடுத்துக்காட்டு இன்பம்
தென்றல் வீசிய
சிறுதீவில் சிறுத்தைகளின்
மோதல் களம்
புதிய புலிகளின் தொடக்கம்
வேங்கையின் முதல்மரிப்பு
தியாகதீபம் திலீபன்
தரித்து வைத்த வண்டி
ஒலிப்பெருக்கியில் ஒலித்தடங்கிய
புலிகளின் தாபக்குரல்கள்
சண்டைக் காட்சி
குண்டுவீச்சு குறிச்சூடு
வீரமரணம்
வீர தீர உக்கிரம்
பசிலன் குண்டில்
பதறியடித்த சிப்பாய்களின்
படகேற்றம் - பின்
கேர்ணல் பானுவின்
புலிக்கொடியேற்றம்
தாலியறுத்த கோட்டை
தாழிட்டு வீந்தது விடிவே!