கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2012

இராமநாதபுரம்


ராமநாதபுரம்:-
15ம் நூற்றாண்டில் தற்போதைய ராமநாதபுரம், திருவாடானை, பரமகுடி, கமுதி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் கி.பி 1063ல் சோழ மன்னரான ராஜேந்திரசோழன் தனது பேரரசில் இணைத்தார். பின்னர் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த ராமநாதபுரம் 1520ம் ஆண்டில் விஜயநகர பேரரசன் நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இரண்டு நூற்றாண்டுகள
் இவர்கள் ஆட்சி புரிந்தனர். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் குடும்ப சண்டை காரணமாக ராமநாதபுரம் பிரிக்கப்பட்டது. தஞ்சாவூர் மன்னனின் உதவியுடன் 1730ம் ஆண்டு சேதுபதி சிவகங்கையின் மன்னரானார். நாயக்க மன்னர்களின் ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைய துவங்கியது. இதனால் பாளையக்காரர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். இதில் சிவகங்கை மன்னரும், ராமநாதபுரம் சேதுபதியும் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்தனர். 1741ம் ஆண்டு ராமநாதபுரம் மராட்டியர்கள் வசமும், 1744ம் ஆண்டில் நிஜாம்கள் வசமும் இருந்தது. 1795ம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதியை பதவியிறக்கம் செய்து விட்டு ராமநாதபுரத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் கொண்டு வந்தனர். 1803ம் ஆண்டு சிவகங்கை மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். 1892ம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார். 1910ம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: