தஞ்சை
தஞ்சாவூர் பழம் பெருமை வாய்ந்த பகுதி ஆகும். தஞ்சையை சோழர்கள் முதல் நூற்றாண்டில் இருந்து 12ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் 90 கோயில்களை கட்டியுள்ளனர். அதன் பின் முத்தரையர்கள், 16ம் நூற்றாண்டில் நாயக்கர்களும், 17,18ம் நூற்றாண்டுகளில் மராத்தியர்களும் ஆட்சி புரிந்த போதிலும் சோழர்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. எல்லாருடைய ஆட்சி காலத்திலும் தஞ்சையே த
லைநகராக இருந்துள்ளது. பழங்காலத்தில் தஞ்சாவூர், தஞ்சபுரி என முத்தரையர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் விஜயாலய சோழனால் கைப்பற்றப்பட்டது. விஜயாலயன் அங்கு தன் இஷ்ட தெய்வமான நிசும்பசுதனி கோயிலை நிறுவினான். காஞ்சிபுரத்தை துணை தலைநகரமாகவும், தஞ்சையை முக்கிய தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்தான். பிரகதீஸ்வரர் கோயில் ராஜராஜ சோழனால் கி.பி.1010ம் ஆண்டு கட்டப்பட்டது. பல ஆண்டுகள் இவர்களின் நிர்வாக மையமாக இருந்து வந்துள்ளது. கோயிலின் கல்வெட்டுகளை வைத்து பார்க்கும் போது நகரின் செல்வ செழிப்பு மற்றும் முன்னேற்றம் இந்த கோயிலை சார்ந்தே இருந்துள்ளது தெரிய வருகிறது. கல்வெட்டுகளின் படி தஞ்சையில் பல்வேறு அரண்மனைகள் இருந்துள்ளது. அவைகள் ஊழியர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டதாகும். ராஜராஜ சோழனின் ஆட்சியில் நகரம் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. உள்ளலை, புறம்பாடி அதாவது உள்நகரம், புறநகரம் என பிரிக்கப்பட்டது. கோயிலில் முன்னால் கிழக்கிலிருந்து மேற்காக சென்ற சாலைகள் வடக்கு மற்றும் தெற்கு தலைச்சேரி என அழைக்கப்பட்டது. இங்கு கோயிலில் பணிபுரிபவர்கள் தங்கியிருந்தனர். சோழர்களுக்குப் பின் பாண்டியர்கள் சோழநாட்டை கைப்பற்றினர். மதுரையையே தலைநகராக கொண்டாலும் விஜயநகரத்தின் முக்கிய நகராக தஞ்சையை கருதினர். கி.பி. 1535ம் ஆண்டில் விஜயநகர பேரரசர் தஞ்சையை தஞ்சை நாயக்கர்கள் வசம் அளித்தார். அவர்கள் 17ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை ஆட்சி செய்தனர். பின் மதுரை நாயக்கர்கள் போர் தொடுத்து அதை கைப்பற்றினர். அடுத்து மராத்தியர்கள் ஆட்சி செய்தனர். கி.பி. 1674ம் ஆண்டில் தஞ்சை மராத்தியர்கள் வசம் வந்தது. வெங்காஜி மற்றும் அவரது சகோதரர் சிவாஜி தஞ்சையை ஆண்டனர். 1749ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையை ஆக்கிரமித்தனர். 1799ம் ஆண்டு வரை தஞ்சையில் மராத்தியர்கள் இருந்தனர்.
கிஷன்
கிஷன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக