கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 24 நவம்பர், 2012

புலவர் இறைக்குருவனார்


நன்றி
பதிவுக்கும் படத்துக்கும்



வீரவணக்கம்! வீரவணக்கம்!!
****************************
தன்னுடைய மாணவர் பருவத்தில் மொழிப்போர் தொடங்கி இறுதி நாள் வரையிலும் தமிழுக்காகவும், தமிழ்த்தேச விடுதலைக்காகவும், ஈழ மக்களின்
உரிமைக்காகவும் தன் உழைப்பை செலுத்திவந்த புலவர் இறைக்குருவனார் அவர்கள் நேற்று காலமானார்கள்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்களுடன் இணைந்தும்,பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்தும் தமிழுக்கும், தமிழ்த்தேச விடுதலைக்கும் அரும்பாடுபட்டவர்கள்.

அய்யா பாவலரேறு அவர்களின் மறைவிற்குப் பிறகு தென்மொழி இதழின் ஆசிரியராக இருந்து தன் கடமையை நிறைவேற்றி வந்தார்கள்.

வாழந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ்வேன், வளைந்தாலும் நெளிந்தாலும் த்மிழ் பொருட்டே ஆவேன் என தன் வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்து மறைந்த புலவர் இறைக்குருவனார் அவர்களுக்கு தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

அன்னாரின் குடும்பத்தாரின் வருத்தத்தை தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பகிர்ந்துகொள்கிறது!!

நாளை காலை சென்னை மேடவாக்கத்தில் நடைபெரும் இறுதி நிகழ்விற்கு தமிழக மக்களை கலந்துகொள்ளும்படி அழைக்கிறது........
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்!!!

கருத்துகள் இல்லை: