கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 21 நவம்பர், 2012

உடல்


விளக்கம்:

வெங்காயம் - வெம் - காயம், சுக்கானால்,வெந்தயதால் வெந்த - இதயத்தால், ஆவதென்ன, இங்கார் சுமப்பார் இச்சரக்கை - இங்கு யாரு சுமப்பார் இந்த உடலை, ஏரகத்து செட்டியாரே - திருவேகரத்தில் குடியிருக்கும் ஆண்டவனே, மங்காத சீரகம் - ஒளி பொருந்திய சீர்-அகம். தந்தீரல், வேண்டேன், பெருங்காயம்-பெரும்-காயம், தந்காயம்-தம்-காயம் தங்கம் என ஆக்குவதற்கு..

இப்பாடலின் பொருள் திருவேகரத்தில் அமர்ந்திருக்கும் இறைவனே என்
 உடலை தங்கமென மாற்றுவதற்கு எனக்கு ஒளி பொருந்திய உன் சீர் ஆகிய கண்ணை தா என்கிறார். அப்போது என் வெம்மையான காயம் சுக்குபோல் வற்றும் வெந்த இதயத்தால் எனக்கு கேடு ஒன்றும் இல்லை. எனக்கு பெரிய பருத்த உடல் வேண்டாம் என கூறுவதாக உள்ள மிக அருமையான பாடல்.

எனவே ஆன்மாக்களே, உடலை பெருகாதீர்கள், மனதை விரிவடையச் செய்யுங்கள்.

உங்கள் பணியால் மாக்கள் மக்களாக உயர வேண்டும். மக்களோடு ஐக்கியமாகி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென பணிபுரியுங்கள் இறைவன் அருள்வான். எதையும் மறைக்காதீர்கள். நீங்கள் மக்கள் மனதை விட்டு மறைந்து போய்விடுவீர்கள். நல்வழிபடுங்கள் நல்வழிபடுத்துங்கள். இங்கு நாம் தெரிந்து கொண்டதை எல்லோரும் அறியட்டுமே என எண்ணியதால் தான் இக்கருத்தை எல்லாம் வல்ல இறை அருளாலும் குரு அருளாலும் முன்வைக்கிறேன், வைத்துக்கொண்டு இருப்பேன்.

அன்னதானத்திற்கு அடுத்த மேலான அரிதான தானம் ஞான தானம் ஆன்ம தாகங் கொண்டோருக்கெல்லாம் வாரி வாரி வழங்க வேண்டும்! ஒரு ஜீவன் கடைத்தேற வழிகாட்டுதல்லவா? எவ்வளவு புண்ணியம்! இதைவிட பெருன்செயயல் வேறென்ன இருக்க முடியும்? ஆனால் ஆன்ம தாகம் கொண்டவர்கள் உலகில் மிகவும் குறைவு. அதை தானம் செய்பவர்களோ மிக மிகக் குறைவு - விற்பவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். பலர் தவறான வழிகாடிகலகவே இருக்கிறார்கள் என்ன செய்வது? இறைவன் தான் அருள்புரிய வேண்டும்.

இன்றைக்கும் மகான்கள் நம்மிடையே இருகிறார்கள். உலகத்திற்காக பற்பல சேவைகளில் தன பக்தர்களை ஈடுபடுத்துகிறார்கள். அவர்களையும் பக்குவபடுதுகிறார்கள் ஆனால் ஞான சாதனையை ரகசியமாகவே காக்கிறார்கள். அது ஏன் ? பக்குவபடுத்தி கொடுக்கலாம் என்றால் எத்தனை பேர் பக்குவம் பெறுவார்? நீச்சல் படிக்க வேண்டுமென்றால் தண்ணீரில் இறங்கியே தீர வேண்டும். ஒரு சில முறை மூழ்கி தண்ணீரும் குடித்து விடுவது இயற்கைதானே. கரையிலிருந்து கொண்டு நீச்சலைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள் போதுமா? அனைவரையும் தண்ணீரில் இறக்கி விடுங்கள். எல்லோரும் நீச்சல் படிக்கட்டும். சிலர் சிறிது சிரமப்படாமல் கைதூக்கி விடுங்கள் உங்கள் அருளால்! எனவே அடியேன் மகான்களை பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் அறிந்ததை எதுவும் மறைக்காமல் எல்லோருக்கும் சொல்லி எல்லோரையும் மேன்மையடையச் செய்யுங்கள் என்பதே.

- அய்யா சிவ செல்வராஜ்.





கருத்துகள் இல்லை: