கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு. இதுகுறித்துப் பெரிதும் முயன்று ஆராய்ந்துள்ளனர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன் ஆகியோர்கள் இணைந்து இந்த ஆய்வுத்திட்டத்தினை மேற்கொண்டனர். காலந்தோ
றும் வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர்.




கி.மு. 250லிருந்து கி.பி. 250 வரையுள்ள (தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து) காலத்தில் நம்முடைய தமிழ் எழுத்து வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும்? "ஊடலுவகை" அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களை அவ்வெழுத்து வடிவில் இதோ காணுங்கள். அன்றைய வரி வடிவத்திலும் இன்றைய வரி வடிவத்திலும் அக்குறள்கள்:


133. ஊடல் உவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு.

ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
உள்ளம் உடைக்கும் படை.

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

இவர்களின் முயற்சி பாராடத்தருகுரியது.

Tamil History and Culture
வாழ்த்துகள் கிஷன்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிந்தேன்... மிக்க நன்றி...