கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2012

திருச்சிராப்பள்ளி


திருச்சிராப்பள்ளி:-
கி.மு. 300ம் ஆண்டு முதல் உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. உறையூர், தற்போதைய திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். கி.பி. 300 முதல் 575 வரை உறையூர் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கி.பி. 590ம் ஆண்டில் உறையூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முதலாம் மகேந்திர வர்ம பல்லவரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. கி.பி. 880ம் ஆண்டு வரை உறையூர் பல்லவர்கள் மற்ற
ும் பாண்டியர்களின் கையில் இருந்தது. கி.பி. 880க்கு பின் ஆதித்ய சோழர் பல்லவர்களை வீழ்த்தி உறையூரை மீட்டார்.



அதன் பின்னர் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற பகுதிகளும் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டது. கி.பி.1225ல் இந்த பகுதி மீண்டும் ஹொய்சாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்ந்து முகலாயர் வருகை வரை பாண்டியர்கள் வசம் இருந்தது.


திருச்சிராபள்ளி சிலகாலம் முகலாயர்கள் வசமும் இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசர்கள் வசம் மாறியது. கி.பி.1736 வரை விஜயநகர பேரரசின் பாதுகாவலர்களான நாயக்கர்கள் இந்த பகுதியை ஆண்டனர். தற்போது திருச்சியில் <உள்ள தெப்பகுளம் மற்றும் கோட்டை விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர்களின் உதவியோடு முஸ்லிம்கள் திருச்சியில் ஆட்சி செலுத்தினர். சந்தா சாகிப், முகமது அலி ஆகியோர் சில காலம் திருச்சியை ஆண்டனர். இறுதியில் திருச்சி முழுமையாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. சுமார் 150 ஆண்டுகள் அதாவது சுதந்திரம் கிடைக்கும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி செலுத்தினர்.


திருச்சி நகரம் சோழர்களின் அரணாக விளங்கியது. திருச்சி பல்லவர்கள் கையில் இருந்த போது அதை தக்க வைக்க கடும் முயற்சி செய்தனர். இருந்தும் பாண்டியர்கள் பலமுறை திருச்சியை கைப்பற்றினர். இறுதியில் 10ம் நூற்றாண்டில் திருச்சி சோழர்கள் வசம் வந்தது. விஜயநகர பேரரசிற்கு பின் திருச்சி, மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து மராட்டியர்கள், கர்நாடக நவாப்கள், பிரெஞ்ச் ஆதிக்கம், மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் நாயக்கர்கள் ஆட்சியின் போது திருச்சி நல்ல முன்னேற்றம் அடைந்தது. திருச்சி மாநகரம் மலை கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. மலை கோட்டையை தவிர சர்ச்கள், கல்லூரிகள், மற்றும் சமுதாய நல அமைப்புகள் பல 1760ம் ஆண்டுகளிலேயே அமைப்பட்டுள்ளது. சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட நகரமான திருச்சி தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது.

கிஷன்

கருத்துகள் இல்லை: