கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2012

திண்டுக்கல்



திண்டுக்கல் வரலாறு:-

திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு அங்குள்ள கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் திண்டுக்கல் கோட்டை மராட்டியர்கள் மற்றும் ஹைதர் அலியின் படைகளமாக விளங்கியது. 1767, 1783, 1790 வருடங்களில் 3 முறை ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர். பின்னர் ஹைதர் அலியிடம் கோட்டையை ஆங்கிலேயர்கள் திருப்பி தந்தனர். இங்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் தொகை அதிகமாகவே இருந்தது.

அமைப்பு : கடல் மட்டத்தில் இருந்து 268மீ உயரத்தில் அமைந்துள்ளது.மக்கள் தொகை : 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 196619 ஆகும். ஆண்களும் பெண்களும் சம விகிதத்தில் உள்ளனர். கல்வியறிவு பெற்றவர்கள் 79 சதவீதம் ஆகும். கல்வியறிவு பெற்ற ஆண்கள் - 84%, பெண்கள் - 74%.