கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 நவம்பர், 2012

சேலம்



சேலம் வரலாறு:-

சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட காலத்தின்போது, சேலம் வளர்ச்சியடைந்த கிராமமாக இருந்தது. 1801ல் சேலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரம். சேலத்தின் சுகாதார பணிகளை கவனிக்க
, ஆங்கிலேயர்களால் 1857ல் சுகாதார சபை என்ற 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த அமைப்பின் மூலம் சுகாதார பணிகள் மட்டும் கவனிக்கப்பட்டன.

அதன்பின் 1886 நவ., முதல் தேதியன்று நகராட்சியாக, சேலம் அறிவிக்கப்பட்டது. சேலம் நகராட்சியின் முதல் கூட்டம், ஆங்கிலேயே கலெக்டர் அர்பத்நட் தலைமையில் நடந்தது. அவர் உட்பட 12 பேர் கலந்து கொண்ட நகராட்சி கூட்டம், 'கமிஷனர்கள் கூட்டம்' எனப்பட்டது. நகராட்சியின் முதல் தலைவராக, கலெக்டர் அர்பத்நட் இருந்தார். அப்போது சேலம் நகராட்சி ஒன்பது வார்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. சுதந்திர போராட்ட தலைவர்களில் முக்கியமானவரான ராஜாஜி, 1917- 1919ல் சேலம் நகராட்சி தலைவராக இருந்தார்.

கிஷன்

கருத்துகள் இல்லை: