கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 7 நவம்பர், 2012

சாதியின் உணவு விடுதி


பிராமணாள் கபே பற்றி டாக்டர் மு. வரதராசனார் 

சாதியின் உணவு விடுதியின் தலைப்பில் கொட்டை எழுத்துகளில் இருப்பது வேறு எந்த நாகரிக நாட்டிலும் காணமுடியாத மாசு ஆகும். இந்த மாசைப் போக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார் பெரியார் ஈ.வெ.ரா. 'நாகரிகமான மக்கள் வாழும் இந்த நாட்டில், சாதியின் வாலை ஒழித்தது போலவே, உணவு விடுதிகளின் பெயரில் உள்ள "பிராமணாள்" என்ற சொல்லையும் எடுத்து விடுவார்கள் என எதிர்பார்த்தேன். எ
திர்பார்த்தவாறு நடக்கவில்லை' சொல்லாமலேயே செய்ய வேண்டிய சீர்திருத்தக் கடமையை சொல்லியும் செய்யவில்லை தமிழர்.

ஆயினும் ஒரு காலம் வரும். சாதி வேறுபாட்டை ஒழித்தால் அல்லாமல் நாட்டில் அமைதி ஏற்படுத்தமுடியாது என்ற காலம் வந்தால், அப்போது எல்லோரும் சேர்த்து வருந்த நேரும். அன்று பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டு எல்லார் உள்ளத்திலும் வாழும்.
(தந்தை பெரியார் 79-ஆவது பிறந்த நாளையொட்டி மலேசியாவில் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)





கருத்துகள் இல்லை: