இது. வேட்டையில் பல வேட்டைகள் உள.தாரா வேட்டை,முயல் வேட்டை,நரி வேட்டை,பன்றி வேட்டை மான் வேட்டை என்று வேட்டையை வகைப்படுத்தலாம். வேட்டையில் ஒன்று பறவை வேட்டை ,
பறவைக்கு வெடி வைப்பது பற்றிய கூற்று பாரதத்தில் காணலாம். மிகப்பழைய காலத்தில் கண்ணால் கூட கொக்கை வீழ்த்தியுள்ளனர். அவர்களே பெண்களையும் மயக்கித் தம் பாலியலை மேற்கொள்வர்.
இப்படித்தான் ஒருநாள் வள்ளுவரின் வீட்டுக்கு கொங்ணவன் சென்றிருந்தான். வந்தோரை வரவேற்பது தமிழர் சால்பு. அப்படியே வள்ளுவரின் இல்லாள் நாகியார் வந்தவருக்கு வாழையிலை போட்டுப் பரிமாறினார்.கொங்கணவன் கொக்கு சுடுபவன்.தன் நோக்கு பலிக்குமென்று நினைத்தான். அவன் நோட்டத்தை குறிப்பால் அறிந்து கொண்ட அம்மையார்
"எனைக் கொக்கென்று
நினைத்தனையோ கொங்கணவா"என்று
அவர் சொன்னதை கோட்ட கெட்டவன் ஏதும் கூறாமல் எழுந்து சென்றானாம்.வள்ளுவன் தன் மனையாட்டியின் இல்லறத்தைப் புகழ்ந்து ஒரு குறள் எழுதியுள்ளான் .அதில் தன் மனையாளைப் போற்றியும் உள்ளான்.
தமிழர் நம் பண்பாட்டைப் பேணுபவள் பெண் என்பதனாலோ பெண் என்பவள் தலைவனால் பேணப்பட்டாள்.பேண் - பெண்/ பேடு என்று முன்னோர் அழைத்திருந்தனர்.இந்தப் பேடு என்ற சொல்லைத்தான் ஆங்கிலேயர் BIRD என்று அழைத்தனர் அதாவது பெண்பறவையை என்று முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் பேசும் போழ்து கூறியிருந்தார்.
நிற்க,
வேட்டை தமிழருக்குப் புதிதல்ல. திருவிழாக்களில் வேட்டைத் திருவிழாவென்றாலே களைகட்டிவிடும். அந்தக் காலத்தில் பகைவேட்டையாடுவது மறவருக்குப் பிடித்தவொன்று நறவம் குடித்துவிட்டுச் சென்று போர்வெறி பிடித்துக் களமாடிய காட்சிகளைப் புறநாநூற்றில் காணலாம்.அந்த மரபில் பிறந்ததனாலோ என்னவோ வேட்டைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பிருந்தது. அதால் நாம் நாளுலாச் சென்றோம்.அது எங்கேயென்றால் நோர்வேயில் உள்ள மவுரா என்ற இயற்கை வளம் நிறைந்த வாப்பிட்டி ஓடித்திரியும் ஊர்.
மலையும் காடும் வயலும் நிறைந்த வளம் மிக்க மவுரா
மவுரா நோர்வே நாட்டு பெரிய விண்ணூர்தி நிலையம் அமைந்த இடத்திலிருந்து சிற்றூர்தியிற் சென்றால் கால் மணிநேர எடுக்கும் மவுராவை அடைய; குதிரைச் சவாரியும் நடக்கும் வழியாதலால் அளவான வேகத்தில் ஓட வேண்டும். நாம் இளமாலை நேரம் சென்றிருந்தோம். தனி வீட்டில் இருக்கும் எம் நண்பர் தன் குடும்பதினரோடு வாழ்ந்து வருகிறார். துமுக்கியை வைத்திருக்கும் அடையாள அட்டை அவரிடம் இருப்பதால் அவரோடு தாரா வேட்டைக்குச் சென்றிருந்தோம்.ஆற்றில் மீன் பிடிக்க வரும் தாராக்கள் கிட்டமட்ட இருபது தாராக்களைப் பார்த்தோம். இருமுறை வெடிவைத்தார் ஆனால் படவில்லை.அவை சற்று விலகியே பறந்ததால் சுடும் தூரத்தில் எட்டவில்லை.வேட்டையின் குதுகலத்துக்காகச் சென்றிடுந்தோம்;உயிரைப் பறிப்பதுதான் முக்கியமல்ல என்பதால் மகிழ்வு. சற்று இருளும் நேரமாகியதும் மீண்டும் திரும்பிவிட்டோம்.
மீண்டும் வேறொருநாள் சென்ற போது பழங்களையும் பறிதுண்டோம்.
இவற்றோடு நில்லாது மீன்பிடிக்கவும் சென்று சின்ன ஓரத்து என்ற மீனைப்பிடித்து மீண்டும் ஆற்றில் விட்டோம். மீனுக்கு வலியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் மனிதர்களாகிய நாம் எம் மகிழ்வை மட்டுமல்லவா எண்ணுகிறோம்.
வேட்டைக்கு சென்ற அந்த நாள் சிறப்பானது. உயிர்களைக் கொல்லுதல் தவறு ஆயினும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது தமிழர் சால்பல்லவா!அதனால் மனித உயிர்களையும் காவு கொள்ளாது வாழ்ந்தால் உயிர்கள் உம்மை வணங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக