கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 22 அக்டோபர், 2012

தமிழினி


"வறுமையிலும் சாதித்த ஈழச் சிறுமி"


கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறாள் தமிழினி என்ற சிறுமி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வரும் தமிழினி கடந்த புலமை பரீட்சையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருக்கிறார்.

மாவட்டத்தில் இந்த பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பலர் இருக்க வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகள
ை பெற்ற இந்த தம்ழினியை பற்றி ஏன் எழுதவேண்டும்? தமிழினியின் வாழ்க்கை பெரும் துயரத்தில் மிதக்கிறது. அவளது வாழ்வில் இந்தப் புள்ளிகள் ஒரு சாதனையாகின்றன.

தமிழினியின் தந்தை தனபாலளை யுத்தம் இந்த உலகை விட்டு அழித்துவிட்டது. தாய் புவனேஸ்வரி வறுமையினால் வெளிநாட்டில் உழைப்பதற்காக இந்த நாட்டை விட்டே சென்று விட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு கொடிய இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை உடையார்கட்டு இருட்டுமடு என்ற இடத்தில் நடந்த செல் தாக்குதல் ஒன்றில் தந்தையார் இறந்துபோக தாய் மூன்று குழந்தைகளுடன் மெனிக்பாம் சென்று பின்னர் மீண்டும் கிளிநொச்சியில் மீள்குடியேறியவர்

ஆனால் தமிழினியின் தாயார் இப்பொழுது மலேசியாவில் வீட்டுப்பணிப்பெண்னாக இருக்கிறார். தனது மகள் தமிழ்நிலாவுக்கு (வயது 03) இதயநோய் காரணமாக அவருக்கு சிகிசை அளிப்பதற்கு நான்கு இலட்சம் ரூபா தேவைப்படுகிறகு என மருத்துவர்கள் தெரிவிக்க அந்த பணத்தினை சம்பாதிக்க அவர் வீட்டுப்பணிப்பெண்ணாக மலேசியா சென்று இப்பொழுது ஆறு மாதங்கள் ஆகின்றன.

கணவனை இழந்த அந்த இளம் பெண் தனது மகளை எப்படியென்றாலும் நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மூத்த பிள்ளை பத்து வயதான தமிழினியுடன் ஏழு வயதான தமிழ்ராஜ், மூன்று வயதான தமிழ்நிலா ஆகிய மூன்று குழந்தைகளையும் தனது சகோதிரியின் பராமரிப்பில் விட்டுவிட்டு சென்றுள்ளார் அவரது சகோதரி ஆதாவது தமிழினியின் சித்தி கிளிநொச்சி நகரிலுள்ள உள்ள ஒரு தனியார் புத்தக கடையில் வேலை செய்கின்றார் அந்த வருமானத்தில்தான் இந்த மூன்று குழந்தைகளும் தமிழினியின் சித்தி மற்றும் அம்மம்மா ஆகியோர் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசின் எந்த உதவிகளும் கிடைக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் குடியிருக்கும் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு பின்புறமாக உள்ள அரச காணிகளில் வசிக்கிறார்கள்.

இவர்கள் குடியிருக்கும் குடிசையிலிருந்து 25 மீற்றர் தொலைவில் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களால் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மின்சார நிலையம் உள்ளது. இவர்களது குடிசைக்கு மேலாக உயர்வலு, குறைவலு என மின்கம்பிகளும் மின்கம்பங்களும் செல்கிறது. ஆனால் இவர்களது வீட்டுக்கு இதுவரை மின்சாரம் இல்லை என்பதே சோகம்.

சொந்த காணி இல்லை. சொந்த வீடு இல்லை. வீட்டில் கிணறு இல்லை, இருக்கு என்று சொல்வதனை விட இல்லை என்று சொல்வதற்கே ஏராளாம் துயரங்கள் உள்ளன. அப்பா உழைத்து சிறுக சிறுக சேகரித்த சொத்துக்களும் அப்பாவோடு உடையார்கட்டோடு யுத்த்தில் அழிந்துவிட்டன. இப்படியான சோகமான வரலாற்று பின்னணியை கொண்ட ஏதுவுமற்ற வீட்டில் வசிக்கும் இடிந்த குடும்பததின் மூத்த பிள்ளையே தமிழினி,

இப்படி ஒரு சூழலில்தான் தமிழினியின் கதை முக்கியமாகிறது. தமிழினி நெருக்கடியான நிலைமையிலேயே தனது கல்வியினை தொடர்ந்துள்ளார் தொடர்கிறாள். ஒரு பிள்ளைக்கு படிப்பதற்கு என்ன அடிப்படை வசதிகள் தேவையோ அவை அனைத்தும் அற்ற நிலையிலேயே தம்ழினி படிக்கிறாள்.

ஒழுங்கான வீடு இல்லை. வீட்டில் கதிரை மேசைகள் இல்லை. மின்விளக்குகள் இல்லை. இப்படி ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இல்லை ஏதுவுமில்லாத ஒரு சூழலிலேயே தமிழினி தனது தரம் ஜந்து பரீட்சையில் தோற்றி மாவட்ட வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துளாள்.

பெருபாலான நேரங்களில் தமிழினியே வீட்டு வேலைகளையும் கவனிக்கவேண்டிய நிலைமையும் உண்டு. அயல் வீட்டுக்குச் சென்று குடிப்பதற்கு, குளிப்பதற்கு துவைப்பதற்கு என தண்ணீர் பெற்றுவருவது முதல் தனது ஆடைகளை துவைத்து சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளுடன் இதய நோயினால் பாதிக்கப்பட்ட தங்கையின் தேவைகள், தம்பியின் தேவைகளையும் கவனிக்க வேண்டும்.

பத்து வயதிலேயே பக்குவமாய் எல்லாப் பணிகளையும் செய்து தானும் தனது கல்வியினை தொடர்ந்து சித்தியடைந்த இந்தப் பிள்ளை உண்மையிலேயே பாராட்டுக்குரியவள். தந்தை இல்லாத சோகம் தாயின் அரவணைப்பு இல்லாத ஏக்கம் வறுமையின் தாக்கம் இவற்றுக்கு மத்தியில் தமிழினி இந்த வெற்றியைச் சாதித்திருகிறாள்.

எனவே உதவிகள் என்பது இவர்களை போன்றவர்களுக்கே தேவைப்படுகின்றது. தந்தை இல்லாத குடும்பம். இதய நோயினால் பாதிக்கப்பட்ட தங்கை. அதற்காக நான்கு இலட்சம் ரூபாவுக்கு தாய் நாட்டை விட்டுச் சென்ற தாய். இப்படியான குடும்பத்தில் கல்வியை இறுக்கமாகப் பிடித்த தமிழினி நம்பிக்கை தரும் சிறுமி.





கருத்துகள் இல்லை: