கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

நூத்தாங்குச்சி



நூத்தாங்குச்சி:

கிராமத்து விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று.. நிறைய நேரங்களில் அதிகம் அனைவராலும் ஈர்க்கப்பட்ட விளையாட்டுக்களிர் இதற்கும் இடம் உண்டு... இன்று இந்த விளையாட்டை விளையாடும் சிறுவர்கள் மிக மிக குறைவு... இந்த விளையாட்டு விளையாடுவதன் மூலம் ஒரு இடத்தில் அதிக கவனத்தை குவிக்கமுடியும்.. அதற்கான சிறந்த பயிற்சி இவ்விளையாட்டு..

இதற்கு தேவையானவை: 10 சின்ன ஈக்குமாத்து குச்சிகள் (பாதாங்கை நீளம்), ஒர
ு பெரிய ஈக்குமாத்துக்குச்சி (சின்னத விட ஒரு மடங்கு நீளம்)
ஆட்கள்: 2 அல்லது மேல்

மொதல்ல சின்னக்குச்சியெல்லாம் ஒட்டுக்கா சேத்து புடிச்சுக்கிட்டு, பெரிய குச்சிய நடுவால சொருகொணும். அப்புறம் எல்லாத்தயும் கீழ போடனும். மொதல்ல தனியாக் கிடக்கற சின்னக் குச்சிய எடுத்துட்டு, அந்தக் குச்சிய வெச்சு எல்லாக் குச்சியயும் அலுங்காம எடுக்கணும். அலுங்கிருச்சுன்னா ஆட்டம் முடிச்சது. சின்னக் குச்சிகெல்லாம் 10 புள்ளிகள். பெரிய குச்சிக்கு 100 புள்ளிகள். அதிக புள்ளிகள் எடுக்கரவங்க ஜெயிச்சவங்க..





கருத்துகள் இல்லை: