இயற்கையிலேயே செம்மண் பூமி. அதில் நெல்கட்டான் என்கின்ற ஒரு செடி அதிகமாக இருந்தது என்றும் அந்த நெல்கட்டான் செடியை நினைவூட்டி நெல்கட்டும்செவல் என்று பெயர் வந்தது. நெற்கட்டுஞ் செவல் பாளையத்துக்கு எல்லை
கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத்தில் வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் பூலித்தேவர் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்
தது.
வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என்றும் பரங்கியர்

சொன்னார்கள். இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட்டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக்குள்ளே நிலவறைகளைப்போல வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன. வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது. அதில் அமைக்கப்பட்டு இருந்த துவாரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது. சுண்ணாம்பும், பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வேறு பொருட்களையும் கொண்டு அமைத்த பீரங்கிக் குண்டுகள் கூட துளைக்க முடியாத மிகச்சிறந்த கோட்டை.
1755 ஆம் ஆண்டு பரங்கிப்படையின் கர்னல் ஹீரான், ஆர்க்காடு நவாப்பின் துணையோடும், மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு வீழ்ந்ததன் காரணத்தை அறியவும், மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும் நினைத்தார். களக்காடு கோட்டையை கைப்பற்றுவது மட்டுமல்ல, கும்பினிபடைக்கு எதிராகவும், ஆற்காடு நவாபிற்கு எதிராகவும் எப்போதும் வெற்றி பெறும் வகையில் முதன் முதலாக ஒரு கூட்டமைப்பை உருவாக்குகினார்.
வெள்ளையர்களை எதிரியாக கொண்டு கூட்டமைப்பை உருவாக்க நினைத்த பூலித் தேவர், அதுவரை தனக்கு எதிரியாக இருந்த திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் கொடுத்து திருவிதாங்கூர் மன்னரை நண்பராக்கி கொண்டு உடன் சேர்த்துக்கொண்டார். அவர் அமைத்த அந்தக் கூட்டமைப்பில் சேத்தூர், கொல்ல கொண்டான், தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சொக்கம்பட்டி என்று அழைக்கப்படுகின்ற வடகரை, சுரண்டை, ஊர்க்காடு, ஊத்துமலை என பல சிற்றரசுகளை சேர்த்து ஒரு கூட்டமைப்பை மன்னர் பூலித்தேவர் ஏற்படுத்தினார்.
ஆறடி உயரமும், இரும்புபோன்ற தேகமும், ஒளிவீசும் கண்களும், பகைவருக்கு அஞ்சாத உள்ளமும், நட்புக்குத் தலை வணங்குகின்ற பண்புமும், அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதியும், குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மகத்தான மாவீரனாக பூலித்தேவன் இருந்தார். பூலித்தேவர் நடந்தால் உடன் வரும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
காந்தசக்தி கொண்ட அவரது ஆளுமை காரணமாக ஆர்க்காடு நவாப்பின் படையில் வந்த தளபதிகளில் மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூவரும் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து பூலித்தேவருக்காக வீரப்போர் புரிந்தார்கள்.
1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார் மன்னர் பூலித்தேவன். அந்தப் போரில் முடேமியா என்கின்ற இஸ்லாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவருக்குத் தகவல் கிடைத்து, ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்த போரில் வீரத்தின் விளை நிலமாக திகழ்ந்து உன் ஆவி பிரிகிற வேளையில் உன்மேனியில் இருந்து இரத்தம் என் மடியில் பாய்கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து நவாப் படையில் வளர்ந்து, தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரிலே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன்.
மைசூர் புலி ஹைதர் அலியைப் போர்க்களத்தில் தோற்கடித்த மருதநாயகம் என்கிற கம்மந்தான் கான்சாகிப் தெற்கே நவாபிற்காக படை நடத்தி வந்தான். வாசுதேவநல்லூரில் ஒரு மன்னன் இருக்கிறான். அவன் பெயர் பூலித்தேவன். அவனை எவராலும் வெற்றிகொள்ள முடியவில்லை என்று பிரிட்டிஷ்காரன் அவனுக்குத் துணையாக நாகப்பட்டினம், திருச்சி, தூத்துக்குடி, பாளையங் கோட்டை, மதுரை, திருவனந்தபுரம் மன்னன் அஞ்செங்கோவின் படை என பல முனைகளில் இருந்து அனுப்ப படைகள் வாசுதேவநல்லூரை நோக்கி வந்தது.
1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக்கவேண்டும் என்று வந்த கான்சாகிப், 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடந்தது. ஹைதர் அலியையேத் தோற்கடித்த சூராதி சூரனான கான்சாகிப், பூலித்தேவனை எளிதில் வெற்றி கொள்வான் என்று கும்பினியர்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான். பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் கொண்ட இத்தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றிபெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான்.
இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார்.கான்சாகிப் தோற்றான்.
மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மே மாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன.

2 கருத்துகள்:
nice blogspot.. update more post... Distance Education Institutions madras
Thanks a lot for sharing this with us, was a really interesting post.
B.Tech Distance Learning programs
கருத்துரையிடுக