கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 29 அக்டோபர், 2012

நிலம் புரண்டி


மனிதரைக் கண்டால் மறையும் மூலிகை..!

மனிதர்களாகிய அனைவருக்குமே பணத்தின் மீது எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டு, அதுவும் உழைக்காமல் திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் கிடைக்கின்ற பணம் என்றால் யாருமே அதை வேண்டாம் என்று ஒதுக்குவதில்லை, புதையலைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்ட சரித்திர வீரர்கள் எத்தனைப் பேரையோ நாம் படித்து இருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம், முதலில் புதையலுக்காக போட்டியிட்டு புதைந்து போன சாம்ராஜ்ஜியங்க
ளும் உண்டு, அப்படிப்பட்ட புதையல் எங்கு இருக்கிறது, எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு, புதையல் எங்கு இருக்கிறது என்று காட்டி தரும் ஒரு மூலிகை இருக்கிறது, அதன் பெயர் நிலம் புரண்டி என்பது, புதையல் என்பது அக்கால மன்னர்கள். நிலப் பிரபுக்கள். மிகப் பெரும் கருமித்தனம் கொண்டவர்கள் மற்றும் சேமிப்பில் அக்கறை கொண்டவர்கள் தங்களது செல்வத்தை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க பூமியில் புதைத்து வைப்பதாகும், அவர்கள் அப்படி செய்யும் போது வெறும் நிலத்தை தோண்டி மண்ணைப்போட்டு காசுகளை மூடி விடுவது இல்லை,

அப்பொருளை பாதுகாக்க பல அமானுஷ்ய சக்திகளை மந்திர உச்சாடனம் மூலம் அவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்துவிடுவார்கள், பூதம் புதையலை பாதுகாக்கும் கதையெல்லாம் வெறும் கற்பனைகளஞ்சியங்கள் அல்ல அதிலும் ஓரளவு உண்மைகள் உண்டு என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,

அமானுஷ்ய சக்திகளின் பாதுகாப்பில் புதையல் இருப்பதால் தான் அதை எல்லோரும் எடுத்து விடுவது கடினமாக இருக்கிறது, இந்த சக்திகளின் பாதுகாப்பில் இருக்கும் புதையல்கள் ஒரே இடத்தில் இருப்பதும் இல்லை, இந்த சக்திகளால் பல இடங்களுக்கு நகர்த்தப்படுவதும் உண்டு, புதையல்களை பாதுகாக்கும் அமானுஷ்ய சக்திகளை அதற்குரிய முறையில் திருப்தி படுத்தினால் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்,

நிலம் புரண்டி மூலிகைச் செடி புதையல் எங்கே இருக்கிறது என்பதை நமக்கு காட்டும் ஒரு கருவியே ஆகும், இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள், இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான் கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,

இத்தகைய நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்து குழித்தைலம் இறக்க வேண்டும், அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும், அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும், தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிக துல்லியமாக காட்டும், மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும், காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்

புதையல் மிக ஆழமாக பல நூற்று அடிகளுக்கு கீழே இருந்தால் அந்த இடத்தில் ஸ்ரீலேகா என்ற மூலிகையை புதைத்து விட்டால் குறைந்தது 6 மாதத்தில் நாம் தோண்டி எடுக்கும் சொற்ப ஆழத்தில் புதையல் மேலே வந்துவிடும், ஸ்ரீ லேகா என்பது 16 வகை மூலிகைகளின் கூட்டு வடிவமாகும், இது இமயமலை சாரல்களில் மட்டுமே கிடைக்கிறது, மூலிகை சாஸ்திரத்திலும். மந்திர சாஸ்திரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அரிய பொக்கிஷத்தை பாதுகாக்க வைத்து இருப்பார்கள்.





1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத தகவல்...

விளக்கமான பகிர்வுக்கு நன்றி...