கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 24 அக்டோபர், 2012

செல்வம்

ஒரு சமூக சிந்தனை, அறிவுரை சங்க காலத்திலே நமக்காகவே எழுதப்பட்டவை. இதையெல்லாம் படிக்க தவறிய நாம் காலப்போக்கில் இழந்தது கொஞ்ச நஞ்சமில்லை. நமது வரலாற்றை புரட்டுங்கள், பாடல்களும் அதன் கருத்துக்களும் படியுங்கள் அதை பிறருக்கு சொல்லுங்கள்.


" தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே "


பாடல் விளக்கம்

உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆட்சி செய்பவருக்கும், இரவு முழுவதும் உறங்காது விழித்திருந்து பணிசெய்வோருக்கும், அடிப்படைத் தேவையாக இருப்பது நாழி அளவுள்ள உணவும், இரண்டு உடைகள் மட்டுமே. இவையல்லாது மற்றவை பெருமை கருதியதே. செல்வம் மிகுதியாக இருப்பின் அதனைப் பிறருக்குக் கொடுத்தலே நன்மை தருவது. அதைவிடுத்துத் தாமே அனுபவிப்போம் என யாருக்கும் கொடுக்காது சேர்த்து வைக்க நினைப்பாரேயானால் அந்த செல்வம் அவரை விட்டு நீங்கிவிடும்.








1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதைப் போல் பலவற்றை மறந்ததை ஞாபகப்படுத்தி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...