நல்ல குருவை நாம் அடைய...?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைய நல்ல குரு தேவை, அத்தகைய நல்ல குருவை கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவாக நாம் நமது சந்தேகங்களுக்கு நமது கேள்விகளுக்கு பதிசொல்பவர்களை விளக்கம் கொடுப்பவர்களை குரு என்று நினைக்கிறோம் உண்மையில் பதில் சொல்பவர் குரு அல்ல யாரை பார்த்தவுடன் நமக்கு சந்தேகமே எழாமல் கேள்விகள் பிறக்காமல் பெறவேண்டியது அனைத்தையும் பெற்றுவிட்டதாக திருப்
தியும் நிறைவும் ஏற்படுகிறதோ எவர் முன்னால் நமது ஆத்மா அமைதி அடைகிறதோ அவரே நமது குரு.
இத்தகைய குருவை நாம் தேடிபோகவேண்டிய அவசியமில்லை அவரும் நம்மை தேடி வரவேண்டிய தேவையில்லை காரணம் அவர்தேடினால் கிடைக்க மாட்டார் தானாகவும் கண்ணுக்கு அகபட்டமாட்டார் கடவுளால் நமக்கு கிடைக்கும் அவர் தனது ஞானத்தாலும் அருளாலும் அன்பாலும் நம்மை முழுமையாக அரவணைத்து கொள்வார்.
கடவுளால் அனுப்பபட்ட அவரை கண்டுபிடிப்பது கடினமல்ல மிக சுலபம் கண்களையும் காதுகளையும் விசாலமாக திறந்து வையுங்கள் பாலை நிரப்புவதற்கு பானை எப்படி எப்போதுமே வாய்திறந்து கொண்டு இருக்குமோ அப்படியே உங்கள் மனமென்னும் பானையை திறந்து வையுங்கள் எவர் முன்னால் சரணடைய வேண்டுமென்ற கையெடுத்து கும்பிட வேண்டுமென்ற எண்ணம் தானாக உதிக்கிறதோ அப்போதே அவரை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.

2 கருத்துகள்:
அருமை... மிக்க நன்றி...
சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification -யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)
(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...
கருத்துரையிடுக