கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கோவலன் பொட்டல்



கோவலன் பொட்டல்:
கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையை சேர்ந்த பழங்கனாதம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர். அப்பொழுது அவர்கள் அங்கு மூன்று பெரிய 
முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்.
நன்றி : தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 





கருத்துகள் இல்லை: