கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 26 டிசம்பர், 2012

ஆழிப் பேரலை

சுனாமி என்று சப்பானிய மொழியில் அழைக்கப்படும் ஆழிப் பேரலை, சூறாவளி அல்லது கடலின் மேற்பரப்பில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எனப்படும் புயல்/காற்று இவைகளால் ஏற்படுவதில்லை. சப்பானிய மொழியில் *சு* என்றால் துறைமுகம், *னாமி* என்றால் அலை. கடலின் அடித்தரையில் ஏற்படும் மாற்றங்களால் மேலுள்ள கடல்நீர் அழுத்தத்துக்கு உள்ளாகி விசையுடன் மேலெழும்பி அதிபயங்கரமாக மணிக்கு அறுநூறு கி.மீ விசையுடன் கரையை நோக்கி பயணிக்கிறது. கரையின் அருகில் நிலத்தின் தடுப்பால் அதன் விசையானது ஏறக்குறைய மணிக்கு அறுபது கி.மீ. விசையாகக் குறைந்தாலும், அழுத்தத்தால் அதே விசையுடன் பதினைந்து அல்லது இருபது மீட்டர் உயரம் மேலெழும்பி, ஊரழிக்கும் ஆழிப் பேரலையாக நிலத்தில் விழுந்து சேதம் ஏற்படுத்துகிறது.

இப்பூமிக் கோளானது முதலில் வளி மண்டலத்தால் சுழப்பட்டிருக்கிறது. அவுட்டர் கிரஸ்ட் எனப்படும் மேல் உறையின் மீது நில/ நீர்ப் பரப்புகளும், அதனுள் முதலில் மேண்ட்டில் எனப்படும் உருகிய நெருப்புக் குழம்பான பகுதியும், பின்னர் அவுட்டர் கோர் எனப்படும் வெளி உள்பகுதியும், கடைசியாக இன்னர் கோர் எனப்படும் நடுப்பகுதியும் இருக்கின்றன. நில/ நீர்ப் பரப்புகளைச் சுமக்கும் மேல் உறையின் மீதே அனைத்து உயிரினங்களும் வசிக்கின்றன.

நெருப்புக் குழம்பான மேண்டில் மீது மிதக்கின்ற மேல் உறையானது டெக்டொனிக் தட்டுகள் எனப்படும் கண்டத் தட்டுகளாக பிரிந்திருப்பதோடு, நெருப்புக் குழம்பின் சுழற்சிகளால் ஆண்டுக்கு பத்து செண்டிமீட்டர் வேகத்தில் நகர்ந்துக் கொண்டும் இருக்கின்றன. இரண்டு கண்டத்தட்டுகள் நெருங்கி, நெருக்கத்தால் உராயும் போது (movements/friction of continental tectonic plates) நில அதிர்வுகளோ/ நடுக்கமோ/ கிழிசல்களோ/ எரிமலை குழம்பு பீறிடுதலோ உண்டாகிறது. பொதுவாக நில நடுக்கங்கள் இந்த கண்டத்தட்டுகளின் முனைகளிலேயே ஏற்படுகின்றன. ஆக கண்டத்தட்டுகள் என்பவை நிலம்/ நீர் இரண்டும் சேர்ந்த பரப்புகளாதலால், மேற்கூறிய மாற்றங்கள் கடலின் அடித்தரையில் கூட ஏற்படலாம்.

ஆழியின் அடித் தரையில், தரைக் கிழிசல்கள் (sea bed ruptures), நிலநடுக்கம்/ நில மாறுதல்கள் (sesmic activities/ earth quakes), தரை வெடித்து எரிமலை குழம்பு வெளிப்பாடு (volconic activity in the sea floor) போன்றவைகள் ஏற்படும் போது மேலுள்ள கடல் நீர் அதிக விசையோடு அழுத்தப்பட்டு கரை நோக்கிப் பாயும் ஊரழிக்கும் ஆழிப் பேரலைகளை உருவாக்குகின்றன.

நன்றி
Karthe Keyan.

கருத்துகள் இல்லை: