கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

தமிழீழம் அழியவில்லைநன்றி

படத்துக்கும் பதிவுக்கும்தமிழீழம் அழியவில்லை. அது அங்குதான் உள்ளது. அது தற்போது இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும் இப்போதும் தமிழ் மக்கள் தமிழீழக் கனவோடுதான் இன்னமும் வாழ்கின்றனர் என சிங்களவராக இருந்துகொண்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான சுய உரிமையோடு ஒன்றி வாழலாம் என்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் விருப்பப்பட்டார். ஆனால் சிங்கள இனவெறியர்கள் அதனை ஏற்கவில்லை. வருங்காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்து வாழலாம் என்று தமிழ் மக்கள் எண்ணினால் வாழலாம். இல்லாவிட்டால் அவர்களுக்கான சுய உரிமை கொண்ட தேசத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தமிழ் மக்களுக்கான விடுதலையில் ஐ.நாவால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் நினைத்தால் தமிழ் மக்களுக்கான தீர்வை உடனே கொண்டு வரலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபாகரன் சிறந்த போராளி. மாவீரன். ஆனால்; அவர் ஓர் நல்ல அரசியல்வாதியல்ல. அவர் தன் மண் மீதும் மக்கள் மீதும் பாசம் கொண்டவர். ராஜபக்சே இனவெறியர். அவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வை ஏற்படுத்தும் நன்மை செய்யமாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: