கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

அனிச்சம்பூ


நன்றி
படத்துக்கும் பதிவுக்கும்



அனிச்சம்பூ..

அனிச்சம்பூ என்றவுடனே எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மை யான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு.

தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம் பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக இந்த அனிச்சம் பூவின் இயல்பை அழகாகக் கையாண்டுள்ளார்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”. – விருந்தோம்பல்

பொருள்: முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூ அதுபோல எமது முகத்தில் சிறுமாறுபாடும் நோக்கிய உடனே விருந்தினரின் உள்ளமும் வாடி விடுவிடும்.

“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவன்”

– நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: அனிச்ச மலரின் மென்மையைக் காட்டிலும் என் காதலி மென்மையானவள்.

“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.”

பொருள்: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.

கருத்துகள் இல்லை: