கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 27 டிசம்பர், 2012

இரண்டு தூண்கள்


நன்றி


காளையார்கோயிலில், அன்னை அருள்மிகு சொர்ணவல்லியின் சந்நிதி மண்டபத்திலே இடத்தில் ஒன்றாகவும், வலத்தில் ஒன்றாகவும் இரண்டு தூண்கள் இருக்கும்.‘

இத்தூண்களில் மிகவும் நுணுக்கமான சிற்பங்கள் ஏதும் இருக்காது.
ஆனால், அதில் சிற்பியின் நுணுக்கமான அரிய வேலைப்பாடு ஒன்று இருக்கும்.

அதாவது இந்தத் தூணைக் குடைந்து அதன் நடுவே ஒரு உருண்டைவடிவிலான (பந்து போன்ற) கல்லைச் செதுக்கியிருப்பர்.

இவ்வாறு கல்லினால் ஆன பந்தை இத்தூண்களை விட்டு வெளியே எடுக்க முடியாது.
பந்துபோன்று உருண்டையாக உள்ள கல்லை உள்ளேயே உருட்டி விளையாடலாம்.

இதுபோன்று பிரான்மலைக் கோயிலில் சிங்கத்தின் வாய்க்குள் பந்துபோன்ற கல்லைக் காணலாம்.
இது மிகவும் நுணுக்கமாக எப்படித்தான் இப்படிச் செய்தனரோ? என்று எண்ணியெண்ணி வியப்படையச் செய்யும்.

காளையார்கோயிலில் இப்போது இந்த இரண்டு தூண்களிலும் இந்த பந்துபோன்ற கல்லைக் காணோம்.

யாரோ எவரோ அந்தக் கற்குண்டுகளை உடைத்துவிட்டனர்.

இனி கோடிகோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும், இதுபோன்ற கலை நுணுக்கமான சிற்பத் தூணை உருவாக்கிட முடியுமா?

வரகுண பாண்டியன் காலத்தில் கட்டப்பெற்ற மண்டபத்தில் உள்ள இத்தூணின் கலைநுணுக்கம், எத்தனை எத்தனையோ ஆண்டுகளாகப் பாதுகாக்கப் பெற்று வந்துள்ளது.
ஆனால், தற்போது கேட்பதற்கு ஆள் இல்லாததாலும்,
சிற்பங்களின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளாததாலும்,
தனது சிறப்பினை இழந்து வெரும் கல்தூணாகக் காட்சியளிக்கிறது.

வருந்துவதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை: