இரண்டு இலக்கிய மலைகளுக்கு நடுவே கைப்பிடித்து நடக்கும் தமிழாறு போன்ற உணர்வைப்பெற்றேன்.என்னே ஆராய்ச்சிப் பார்வை என்னே இலக்கிய நோக்கு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையே! ஒருவர் சொல்லாய்வறிஞர் மற்றவர் இலக்கியவறிஞர்.
நோர்வே இலக்கிய மன்றத்தின் கூடல் சுறவத்தில் நிகழும். காலநேரம் பின்னர் அறியத்தரப்படும்.நிகழ்வில் மலேசியாவில் வெளியாகும் தமிழ்நாள் காட்டி வெளியிடப்படும்.தமிழ்மண் பதிப்பகத்தின் தமிழ்த்தொண்டு பற்றியும் தூயதமிழ் முன்னெடுப்புக்கான ஏடல்களும் வழங்கப்படும். தமிழ்க்குழந்தைகள் சிறார் மற்றும் இளையோர் பிறந்த நாளை தமிழ்த்தாய் வழுத்தோடு தமிழுக்கு விளக்கேற்றித் தொடங்குதல் பற்றிய கலந்துரையால்கள் மற்றும் தூயதமிழ் நூல்களைப் பெற்றுக்கொடுத்தல்.ஆகியவை பேசு பொருளாக அமையும் என்பதனை அறியத்தருகிறேன். தேவநேயத்தோடு ச.உதயன்
தமிழழகன்
கும்பம்
அகரம்
துளசி திருவள்ளுவர்
தூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
ஏ > ஏல் > எல் > என் > என்று > என்டு > எண்டு > ஏண்டு > யாண்டு > ஆண்டு
வள்ளுவராண்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. உழவே மக்களுக்கு மேன்மையான தொழில் என்று வள்ளுவரும் வலியுறுத்தி கூறியதாலும், வள்ளுவராண்டையும் சுறவத்திங்களிலே குறித்தார்கள் தமிழறிஞர்கள். அதுவே தமிழர் புத்தாண்டென தமிழ்மாந்தர் பின்பற்றுதல் சிறப்பானது. திருவள்ளுவராண்டு ௨0௫0 (2050).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக