இப்பொழுதெல்லாம் வானில் விண்மீன்களைமட்டுமல்ல வெண்மீன்களையும் காணக்கூடியதாக உள்ளது.நிலவு சிவப்பாகும் நிகழ்வைப் பார்த்த பொழுது மனம் தித்திப்பாய் இருந்தது.அத்காலை ஒரு மூன்றுமணி இருபது நிமையங்களிலில் அந்த மாற்றத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.அரைப்பங்கிற்கும் சற்று குறைவாக நிலவு சிவப்பாக மாறியிருந்தது அதன் மகிமையை அறியாத யான் சிறிது நாழிகழிந்து பார்த்தேன் என்ன வியப்பு சிவப்பாக மாறிக்கொண்டே வந்தது நிலவு. ஒருநாள் கேள்விப்பட்டிருக்கிறேன் இயேசுகாவியத்தில் பழைய ஏற்பாட்டில் நிலவு சிவப்பாவது பற்றி அதை உணர்ந்தபோது.இசுலாம் மார்க்கம் தான் நினைவுக்கு வந்தது.நாலரை மணிவரை சிவப்பாகவே தெரிந்தது நிலவு "செந்நிலவு"
என உவமை கொள்ளுதல் தகும்.(பின்னிரவு வேளையில் எனது கைப்பேசியில் எடுத்த அரிய படம் தான் இங்கு காட்டப்பட்டுள்ளது.)
இன்னொரு காலை வெண்மீன்,செவ்வாய்,வியாழன் அருகிருப்பதை பார்த்து மாகிழ்ந்தேன் காலை ஏழு இருபது இருக்கும் இம்மூன்றும் வானில் மிளிர்வதைக்கண்டு மனமுவந்து கொண்டேன்.அப்பொழுது ஒருவரை அழைத்துக் காட்டினேன் அவர் அவசர அவசரமாக வேலைக்குச்சென்றுகொண்டிருந்தார்.தாங்கள் இசுலாமியரா எனவும் வினவினேன்.ஆம் என்றவாறே சென்றார்.தங்களையே கவனிக்காத மனிதனிடம் வானிலை பற்றி வினவ முடியுமா என்ன?இவற்றைக் கண்ணூடே காணும் போழ்து
பட்டினப்பாலைதான் நினைவுக்கு வரும்.....!
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசைதிரிந்து தெற்கே ஏகினும்
தற்பாடிய தனியுணவிற்
புட்டேம்பி புயல் மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்"
என உவமை கொள்ளுதல் தகும்.(பின்னிரவு வேளையில் எனது கைப்பேசியில் எடுத்த அரிய படம் தான் இங்கு காட்டப்பட்டுள்ளது.)
பட்டினப்பாலைதான் நினைவுக்கு வரும்.....!
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசைதிரிந்து தெற்கே ஏகினும்
தற்பாடிய தனியுணவிற்
புட்டேம்பி புயல் மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக