கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 30 டிசம்பர், 2015

கச்சிப்பட்டான்

பால் தெளிக்கு பல ஏக்கர் நிலமா? அப்போ செத்தவர் எத்தனை பேர்! பால் படுக்கைக்கு பக்கத்தில் உதிரப்படுகை குருதி ஆறாய் ஓடியது போல !! இதுவெல்லாம் திருப்புறம்பிய கொள்ளிடக்கரை அமைந்த இடம்.
இன்றும் வழிபாட்டுக்கு ஈட்டி,சூலம்,வேலும் நடப்பட்டுள்ள இடங்கள்.என்ன நம்ம ஆளு கொஞ்சம்,கொஞ்சமா சேர்த்துக்கிட்டது போக கும்பிடன்னு கொஞ்சம் விட்டு வைத்திருக்கிறார்கள்.நன்றி சொல்லனும்.ஆயிரம் வருஷ்மா வச்சிருக்கிறார்களே.அதில ஒரு திட்டு தான் அய்யனார் திட்டு.விளைஞ்ச வய காட்டு வரப்புல சாமத்தியமா நடந்தா ஊருக்கு மேற்கே கொண்டுபோய் விடும் இடம் தான் இந்த அய்யனார்த் திட்டு.உயர்நீதிமன்றம் வரை சென்று போராடும் சிங்காரவேலு பத்திரமாக வைத்திருக்கிறார்.அப்படியென்ன இந்த அய்யனார் திட்டுல.,எத்தனையோ மாவீரர்கள் குருதியால் நனைந்த இந்த மண்,கங்கர் மன்னன் முதலாம் பிருதிவிபதியையும் வீழவைத்தது.கருநாடகப்பகுதியை ஆண்டவர் கங்கர்,அவரு ஏன் இங்க வந்தார்? விதி,...அவர்கள் நாட்டிலிருந்து வரும் காவேரி மண்ணியாறாய் கொள்ளிடமாய் பிரிந்து ஓடும் மண்ணில் இதற்கு இடைப்பட்ட மண்ணில் வீழவேண்டும் என்று, அதை நான் எழுத நீங்க படிக்க...விதி.
வயக்காட்டின் நடுவே மூங்கில் தோப்பில் அய்யனாராய் வழிபடும் பள்ளிப்படையாகி அதை சதாசிவபண்டாரத்தார் கண்டு சொல்ல வேண்டும்...விதி.
கிபி 862-ல் அரிசிலாற்றாங்கறையில் (அசலாய் நம்ம இன்றைய அரசலாறு தான்) இவன் அப்பன் பராசக்ர கோலாகலப் பாண்டியனைத் தோற்றோட செய்த பின் அவனும் செத்து போக அவன் மகன் வரகுணபாண்டியனால் 18 ஆண்டுக்குப் பிறகு விழவேண்டிய நிலை இந்த முதலாம் பிருதிவிபதிக்கு வந்தது பல்லவனால் தான்.
என்ன செய்ய சோழப்பேரரசுக்கு அடித்தளம் போட்ட கணக்கு வழக்கு இங்கு தான் தொடங்குகிறது.




கச்சிப்பட்டான்( கச்சி என்பது காஞ்சியை அதாவது பல்லவரைக் குறிக்கும்,பட்டன் என்பது போரில் வீழ்ந்ததைக் குறிக்கும்) 

கருத்துகள் இல்லை: