தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையா சோழர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை சிவன் ஆலயம் புதையல் தோண்டும் போர்வையில் உடைக்கப்பட்டுள்ளது
03 02 2013
சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் பிரதிட்டை
செய்யப்பட்டிருந்த இடத்தில் உள்ள கல் சிலேட்டு அகற்றப்பட்டு புதையல் தோண்ட முட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் புதையல் அகழ்ந்துள்ளனர்
நேற்றிரவு இந்த அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க சிவன்கோயில் பகுதிக்கு இரவில் காவலாளி இல்லாததால் இவ்வாறு புதையல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலன்னறுவை தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட தொலைவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் இருப்பிடங்களையும் ஆளையங்களையும் சிங்கள மயமாக்கும் வந்தேறிகளான சிங்களபௌத்த மதவெறியர்கள் இலங்கையில் உள்ள சைவ ஆலையங்கள் முன்பு புத்த ஆலையங்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்டவை என்று திட்டமிட்டு தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் நோக்கத்தோடு கூறியுள்ளதை நாம் அறிந்ததே
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக