கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 16 பிப்ரவரி, 2013

"ஆங்கிலம் என்பது அறிவல்ல"



வழக்கம் போல் தமிழில் பெயர் பலகை இல்லாத ஒரு கடையின் முன் நின்றேன். அது வண்டிகளுக்கு பசை ஒட்டிகள் விற்பனை செய்யும் கடை. இரு நவீனத்துவ ஆண்களும் ஒரு நவீனத்துவ பெண்ணும் கடையின் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.

'யாருங்க கடை உரிமையாளர்' என்று கேட்டேன். 'நான் தான்' என்றார் அந்த இளைஞர். நம் அமைப்பின் அட்டையை கொடுத்து , 'உங்கள் கடைக்கு தமிழில் பெயர் இல்லை , உடனே மாற்றுங்கள்' என்றேன் . உடனே அருகில் இருந்த பெண் ஏன் மாற்ற வேண்டும் என்று கேட்டார். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது அரசாணை அதனால் மாற்ற வேண்டும் என்றேன்.

உடனே அந்த பெண் , ஏ மேன் ! இங்க எல்லோருக்கும் இங்க்லீஷ் தெரியும் எல்லோரும் படித்தவங்க அதனால் இங்கில்ஷ் மட்டும் இருந்தால் போதும் அது தப்பில்லை என்றார்.

நான் சொன்னேன் இது தமிழ் நாடு, இங்கிலாந்து இல்ல. இங்குள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் இருக்க வேண்டும் . ஜப்பான் போய் பாருங்க தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடு . அங்கு எல்லா பெயர் பலகையும் அவர்கள் தாய் மொழியில் தான் உள்ளது . முதலில் தாய் மொழியை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் . படிப்பிற்கும் ஆங்கிலத்திற்கும் என்ன சம்பந்தம்? 'ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது வெறும் மொழி தான் ' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன். அந்த மூன்று நபர்களும் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தனர் !
நன்றி.
பழனி

கருத்துகள் இல்லை: