கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நபீஸாவுக்காக



வழிக்கின்றது நெஞ்சம்

அழுகின்றது கண்கள் 

நபீஸாவுக்காக,

என்னை ஏழ்மையில் பிறக்கவைத்த சமூகம் குற்றவாளி இல்லை
என்னை வேலைக்கு அனுப்பிய பெற்றோரும் குற்றவாளி இல்லை
சிறுமியாகிய என்னை வயது மாற்றி அனுப்பிய ஏஜண்டும் குற்றவாளி அல்ல
தன் பிள்ளையை என்னை விட்டு பாலூட்ட சொன்ன தாயும் குற்றவாளி அல்ல
என் கையில் மூச்சுவிட மறுத்த அந்த குழந்தையும் குற்றவாளி அல்ல
எனது தரப்பை சொல்ல தடையாய் இருந்த நாடும் ,மொழியும் குற்றவாளி அல்ல
விபத்துக்கும் மரணத்துக்கு வித்யாசம் தெரியாத மத சட்டமும் குற்றவாளி அல்ல
என்னை மண்ணிக்காத அந்த பெற்றோர்ர்களும் குற்றவாளி அல்ல
என்னை சாவிலிருந்து தடுக்காத இந்த உலகமும் குற்றவாளி அல்லை
என் கொலையை நியாயபடுத்தும் இரக்கத்தின் காவலர்களும் குற்றவாளி அல்ல
இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் குற்றவாளி அல்ல(ர்)
ஆம்.........................நான் தான் குற்றவாளி!
ஏனென்றால் இந்த கொடுமையான சாவிற்கான தவறை
இதுவரை யாரும் செய்த்தில்லை.
என்னை கொலை செய்த்து அவர்கள் மட்டுமில்லை
வேடிக்கை பார்த்த நீங்களும்தான்

என் தலை உருண்ட இட்த்தில் நாளை
உங்கள் மகள்,சகோதரி,தாய்,நன்பர்,மனைவி
தலைகள் இருந்தாலும்
வேடிக்கை மட்டும் பாருங்கள்!
நபீஸா

பதிவு:மனிதம் மட்டும்
நன்றி.
உன் தாய்மை உள்ளத்தை எல்லாம் வல்ல இறைவன் ஏற்றுக்கொள்வான்.

கருத்துகள் இல்லை: