கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நாராயண் கிருஷ்ணன்


பசித்த வயிறுக்கு உணவு தரும் அட்சய பாத்திரம்…. நாராயண் கிருஷ்ணன்!!!!!!!

கை நிறைய சம்பளம்... வெளிநாட்டு வேலை... மகிழ்ச்சியான வாழ்க்கை. மதுரையில் பிறந்து வளர்ந்து வெளிநாடு போகப் போகிறோம் என்ற எண்ணத்தில் மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் போது கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. வயதான ஒரு மனிதன் பசியில் மனித கழிவை எடுத்து உண்பதை பார்த்த காட்சி என்னை உறைய வைத்தது.

அந்த நிமிடத்தில் உடனே நான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கி அளித்தேன். சில நொடிகளில் அந்த உணவை அவர் உண்டுவிட்டு கண்ணீரின் மூலம் நன்றி தெரிவித்தார்.
எதற்காக நாம் வெளிநாடு போகப்போகிறோம்? பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழவே நான் அப்பொழுது முடிவு செய்தேன். பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் என் வேலை என்று என் மனதில் தோன்றியது. இது அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் என்பவரின் பேச்சு.

கடந்த 10 ஆண்டுகளாக 49 லட்சம் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு தன் கைகளால் சமைத்து வழங்கியிருக்கிறார். இவர் ஒரு சமையல்கலைஞர். வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு பசித்தவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே 2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.
நன்றி.
தமிழ் -கருத்துக்களம்-

கருத்துகள் இல்லை: