உண்ணாவிரதம் என்றால் சத்தியாகிரகத்தின் ஒரு போராட்டம் அதுவும் காந்திய வழி போராட்டம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் தமிழரின் தொல் மரபு "வடக்கிருத்தல்" என்ற பழக்கம் உண்டு. உணவை மறுத்து வடக்கிருப்பார்கள். அதை இன்று காந்தியவழி போராட்டம் என்று சொல்வது சரியா?
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதன், கபிலர், மற்றும் பாரி வள்ளல் என்று பலர் வடக்கிருந்து உயிர்விட்டவர்கள் இத்தனை பேரை பற்றியும் படித்த பிறகும் நாம் காந்தியவழி போராட்டம் என்று உண்ணாவிரதத்தை கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும்.
நன்றி - ஹரிஹரன்
நன்றி - தூய தமிழ்ச்சொற்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக