இன்றைய சமுதாயத்தினர் பலருக்கு MSV என்றால் ,
தாத்தா , அப்பா கேட்கும் பழைய பாடலை தந்தவர்( இந்த பாட்டை ஏன் இப்படி உருகி கேட்குறாய்ங்களோ என்று சலித்தும் கொள்வர் )...... இவர் காதலா காதலா, காதல் மன்னன் படத்துல நடிச்சாரு ... இப்படி தான் தெரியும் ..ஒரு சிலருக்கு - விடை கொடு எங்கள் நாடே , சங்கமம் பாட்டுலாம் நல்லா பாடினார் .. சூப்பர் சிங்கர் ல வந்துருக்காரு ... இப்படி ...
இதை நான் பதிவுக்காக சொல்லலைங்க , இது தான் 35 வயதிற்குள் இருக்கும் பெரும்பாலானோர் MSV பற்றி தெரிந்து வைத்து பேசுவது!
உண்மை என்னவென்றால் ,
MSV... இந்த மாமனிதர்க்கு தமிழ் கூறும் நல்லுலகம் பட்டிருக்கும் கடன் என்றுமே அடைக்க முடியா கடன் .... இன்றும் நம் கேட்கும் ஒவ்வொரு மெல்லிசைக்கும் மூலாதாரம் அவரிடமிருந்து வந்தது என்று சொன்னால் அது மிகையல்ல ..
பாரம்பரிய நாடக இசை , அதன் இலக்கணத்திலேயே வழி வந்த ஆரம்பகால சினிமா பாடல்களை தாண்டி , பாமரன் ரசிக்கும் விதமாக இசையையும் , ஒலியையும் கொடுத்த பிரம்மா இவர் .. இந்தி பாடல்களில் தான் புதுமை இருக்கும் என்று புரியாத மொழியிலும் பாடல்கள் கேட்டு வந்த தமிழர்களை , தமிழுக்கு அழைத்து வந்தவர் இவர் என்பது வரலாறு ...
கண்ணதாசனும் இவரும் கை கோர்த்ததால் , இசையும் தமிழும் சங்கமித்து காதல்க்கொண்டு பெற்றெடுத்த பாடல்கள் போல்,
தமிழனை கடந்த நூற்றாண்டில் எதுவும் பாதித்ததில்லை ..
வேறெதுவும் தமிழும் பண்பும் கற்பித்ததில்லை ,
வேறெதுவும் காயங்களுக்கு மருந்தாகியதில்லை ,
அவைகளை போல் ஒரு பொக்கிஷமும் இல்லை !
" கர்ணன் " என்கிற ஒரு திரைப்படத்தின் பாடல்கள் போதும் ... இன்னும் 1000 ஆண்டுகள் சான்றாக நிற்க !
இன்று இசை தெரியுதோ இல்லையோ தொழில்நுட்பம் தெரிந்தால் இசையமைப்பாளர் என்கிற சூழலில் , எவ்விதமான நவீன தொழில்நுட்பம் இல்லாமல் , அவர் படைத்த அத்தனை முத்துக்களும் live recording, அதாவது பாடகர்களுடன் வாத்தியங்களும் ஒன்றாக இசைக்க பெற்று , பதிவு செய்யப்பட்டவை . யோசிக்க யோசிக்க பிரமிப்பு விலகாது .
இன்று கட்டமைக்கப்பட்டு அழியா ஆலமரமாக வேறூன்றி நிற்கும் திராவிட அரசியல் இவர் பாடல்களை வைத்து தான் வளர்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது ... உலகம் போற்றிய உன்னத கலைஞன் சிவாஜி அவர்கள் இவர் தோள் மீது ஒரு கால் வைத்தே மேலும் வெளிச்சம் பெற்றார் ..
அவர் போட்ட இசையை தான் நான் போட்டேன் என்றார் இசைஞானியார் ...
He's the true original composer, என்று சொன்னார் ரஹ்மான் ..
1200 படங்கள் , பல மொழிகள் , 60 ஆண்டுகள் என்று இசைராஜ்ஜியம் நடத்திய சக்கரவர்த்தியின் உடல் மறைந்து விட்டது ...ஆனால் தமிழ் இருக்கும் வரை இவர் இருப்பார் .. தமிழிசை இருக்கும் வரை இவர் விட்டு சென்ற பொக்கிஷங்கள் இருக்கும் ...
அன்றும் இன்றும் தமிழ் பள்ளிகளில் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தை இசையமைத்தவரும் இவரே ..
"கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை ... மண்ணை விட்டு போனாலும் தமிழர்களை விட்டு போகவும் இல்லை "
இந்திய அரசின் பத்ம விருதுகள் இவருக்கு தர படாததை , இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் எழுதி விட்டு , இந்த மாமன்னரை தலை வணங்கி போற்றுவோம் !!!
போய் வாருங்கள் ஐயா ...
எங்கள் கவலைகளை மறக்க செய்த உங்களுக்கு எதை திருப்பி தந்தாலும் ஈடாகாது .. இப்போதைக்கு எங்கள் கோடானுகோடி நன்றிகள்....வாழ்ந்தவர் கோடி ..மறைந்தவர் கோடி ..மக்களின் மனதில் நிற்பவர் யார் !!!???!!!!
வீடு வரை உறவு ..வீதி வரை மனைவி ..காடு வரை பிள்ளை ..கடைசி வரை MSV
நன்றி
#RipMSV

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக