கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 14 மே, 2007

தோப்பு

அணியியற் சொற்கள்

"பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிடனாக வுணர்வினின்
வல்லோர் அணிபெறச் செவ்வன செய்யுள்" ( நன்.268)

என்று பவணந்தி முனிவர் கூறினாரேனும், அணி செய்யுட்கே சிறப்பாக வுரியது என்பது அவர் கருத்தன்று. சில உடம்புகளில் இயற்கையாய் அழகு அமைந்து கிடப்பது போல , வல்லோர் செய்யுள்களிலும் இயல்பாக அணி அமைந்திருக்கும் என்பதே அவர் கருத்தாகும். அஃதாயின், அல்லோர் செய்யுளில் அணி இயல்பாய் அமைந்திராது என்பதும் பெறப்படும். இனி , வல்லோர் செயயுளில் மட்டுமன்றி அவர் உரைநடையிலும் அணி அமைந்திருப்பது இயல்பே, ஆகவே, அணியானது செய்யுள், உரைநடை ஆகிய இரண்டற்கும் பொதுவாம்.

பொருளை விளக்குவதும் அழகுபடுத்துவதுமே அணியின் நோக்கமாதலானும், செய்யுளிற் போன்றே உரைநடையியிலுமழகிய கருத்துகள் அமையுமாதலானும், கருத்தின் அழகே அணியாதலானும், உரைநடைக்கும் அணி உரித்தென்னும் கூற்றில் யாதொரு வியப்புமின்று. இதனாலேயே, தொல்காப்பியத்தில் செய்யுளிற்கு முன்னர், அணியியற்பாற்பட்ட உவமவியல் கூறப்பட்டதென்க.

ஒரு கருத்தைத் தெரிவிக்க ஒரு சொற்றொடரே வேண்டும் என்னும் யாப்புறவில்லை. ஒரு சொல்லாலும் ஒரு கருத்தைத் தெரிவிக்கலாம். ஆகவே, தனிச்சொற்களிலும் அணி அமைதற்கிடனுண்டு.

அணிகட்கெல்லாம் தாயானதும் தலைமையானதும் உவமையே யாதலானும், தொல்காப்பியத்துள்ளும் அஃதொன்றே கூறப்படுதலானும், இக் கட்டுரையில் பெரும்பாலும் உவமையணிச் சொற்களே, அவற்றுள்ளும் கவனிகத்தக்க ஒரு சிலவே, கூறப்படும்.

1.உயர்திணைப் பொருளுக்கு அஃறிணையுவமம் பெண்ணியல்
2. மக்கள் உறவும் தொடர்ச்சியும்
3.அரசனும் குடிகளும்
4.வாழ்க்கையியல்பு
5.சில குணமும் செயலும்
6.நூலும் செய்யுளும்
7.கருமநிலை
8.வறுமை
9.நோய்
10.இறப்பு
11.அஃறிணைப் பொருளுக்கு உயர்திணை யுவமம்
12.உயர்திணை வினைக்கு உயர்திணை யுவமம்
13.அஃறிப் பொருளுக்கு அஃறியுவமம்
14.இருதிணைப் பொதுப்பொருளும் உவம்மும்

1.உயர்திணைப் பொருளுக்கு அஃறிணைவமம் பெண்ணியல்

கருத்துகள் இல்லை: