வணக்கம்!
வாருங்கள் தமிழ் கற்போம்.
எண் - எண்ணுவது ( மனதால் எண்ணுவது எண் எனப்படுகிறது. எண்ணம் )
ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணப்பழகிய பின்னரே கணக்கில் மேம்பட்டார்கள் நம் முன்னோர் . கணிதம் - கண் + இதம் = கணிதம்
கண்ணும் எண்ணமும் கணிப்பு
1
ஒன்று : ஒல் - ஒ. ஒல்லுதல்(பொருந்துதல்). ஒத்தல் பொருந்தல்.
ஒல்+ து = ஒன்று= பொருந்தினது, ஒன்றானது.
2
இரண்டு : (இரள்) + து = இரண்டு. ஈரள் - ஈருள் - இருள் - இரவு
ஈரள் = ஈர்ப்பது(அறுப்பது)
இரவு இரண்டாக அறுக்கப்படுக்கப்படுகிறது
( முன்னிரவு/ பின்னிரவு)
3
மூன்று = ஒன்றுக்கு எதுகையாய் அமைந்தது.
மூன்று மூக்கைக் குறித்தது. மூக்கில் உள்ள மூன்று துளைகளை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மூசு(மூசுதல்) > மூஞ்சு >மூக்கு>மூ>மூன்று.
4
நான்கு = நால்+ கு ( நாலும் திக்குகள்)
நாலு>நாலுதல்>ஞாலுதல்( தொங்குதல்)
நால்>நாலம்>ஞாலம். ந - ஞ, போலி
5
ஐந்து = ஐ+ து= ஐது - ஐந்து
ஐ ( கை)
கையில் விரல்கள் ஐந்து
6
ஆறு = வழி, ஒழுக்கநெறி, சமயம். மார்க்கம் என்னும் வடசொல் இப் பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் ( நாஸ்திக) மதமுஞ் சேர்ந்து ஆறாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுசமயம் என்னும் தொகை வழக்கு மிகத் தொன்மை வாய்ந்தது.
7
ஏழு = ஏழ் - ஏழு - எழு.
ஏழ்= இசை
யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையையெழுப்புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்ப்டுவது ஏழ்.' ஏழிசைச் சூழல்' 'ஏழிசை வல்லபி' என்னும் வழக்குகளை நோக்குக.
8
எட்டு = எண் + து
எண் = எள். இப் பெயர் ஆகுபெயராய் உணவைக்குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும்; எள்ளைக்குறிப்பின், அதன் காயிலிலுள்ள பக்கங்களின் தொகைபற்றியதாயிருக்கலாம்.
நெல், புல்( கம்பு ) , சோளம், வரகு, திணை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்ற எட்டே முதலாவது எண்கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின்வகையா யடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையாயிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்ப்ட்டிருக்கலாம்.
9
ஒன்பது
இந்த எண் தொளைகளைக் குறித்தது.
தொள் + து = தொண்டு. தொள் = தொளை. உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்த்லின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.
தொண்டு - தொண்டி = தொளை. ஒ.நோ: தொண்டை = தொளையுள்ளது
10
பத்து
இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு.
பல் + து = பஃது = பத்து
******************************************************************************
*
திக்குகள்
*
திகை - திக்கு - திசை
திக்குகள் இரண்டாகி, நான்காகி, எட்டாக அழைக்கப்படுகின்றது.
*
எல்லைகள் இரண்டு
எல்லை என்பது கதிரவன் எழுந்த கரையில் இருந்து விழுகின்ற கரை வரை உள்ள திக்கு.
எல் + ஐ = எல்லை ( ஐ இரண்டாம் வேற்றுமை )
*
கிழக்கு , மேற்கு
கிழக்கு - கதிரவன் கீழே இருந்து மேலே எழுவதால் கிழக்கு எனப்பட்டது.
கீழ் + கு = கீழ்க்கு - கிழக்கு
மேற்கு - அதே கதிரவன் மேலே இருந்து கீழே விழுவதால் மேற்கு எனப்பட்டது.
மேல் + கு = மேல்கு - மேற்கு
*
வடக்கு , தெற்கு , கிழக்கு , மேற்கு
வடக்கு - வடமரங்கள் (ஆலமரம்) நிறைந்து காணப்பட்டமையால் வடக்கு எனப்பட்டது.
வடம் + கு = வடம்கு - வடக்கு { ( அக்கு என்ற ஒலி சேர்ந்து கொண்டது) , ( வடம் - கயிறு ) }
தெற்கு - தென்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டமையால் தெற்கு எனப்பட்டது.
தென் + கு = தெற்கு
( கு என்பது நான்காம் வேற்றுமை)
வடக்கு , வடமேற்கு , மேற்கு , வடகிழக்கு , கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , தென்கிழக்கு
*********************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக