கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 12 மே, 2007

சமயம்

முருகக் கடவுள் யார் ?

முருகன் என்ற வடிவமே கற்பனை வடிவம் தான் என்பதை முதலில் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

முருகன்

முள்-முரு-முருகு-முருகன்(அழகு,எழில்)
முள்-முளை-முளைத்தல்

முருகனின் கையில் வேல்
(முன்னை காலத்து மக்கள் பயன்படுத்திய கருவிகளில் ஒன்று வேல்)

முருகனின் ஊர்தி மயில்
(குறிஞ்சி நிலத்தில் வாழும் பறவை மயில்)

முருகனின் கொடி சேவல்
(சண்டைக் களத்தில் இறங்கினால் சாகும் வரை சண்டையிட்டுக் கொண்டே சாகும் பறவை சேவல் ) . இது மறத்தின் அடையாளம்.

எம் தமிழ் முன்னோர் தாம் கொண்ட அடையாளமே தான் அவை. முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றவும் இல்லை. அவன் மயில் ஏறி உலகை
சுற்றவும் இல்லை. சூரனை கொல்லவும் இல்லை எல்லாம் பொய்.


தமிழ் நிலத்தை ஆண்ட பாண்டியனை முருகன் என்று முன்னோர் அழைத்திருக்கலாம். அவன் தமிழ் வளர்த்திருக்கலாம்.

தமிழ்த்தூவல்>அரசன்.தமிழரசன்

சிவனார் யார் ?

சுள்>செள்>செவ>சிவ>சிவம்>சிவன் ( நெருப்பு ).

நெருப்பை வணங்கும் பத்தியில் தமிழ் முன்னோர்களால் நெருப்புக்கு வழங்கிய பெயர் தான் சிவம் சிவன் என்ற பெயர்கள்.நெருப்பை வணங்கும் வழிபாடு கிட்டத்தட்ட 3000 ஆண்டு காலத்துக்கு முந்தியதை சிந்துவெளி அகழ்வாய்வுகள் வெளிப்படையாக காட்டுகின்றன. அதாவது சில சிற்பக்கலைகள் கொண்டுள்ள அமைவுகளைக் கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. சிவன் தனாக தோன்றவுமில்லை அவன் முருகனை உருவாக்கவும் இல்லை சிவனும் முருகனும் ஒன்றுதான் இரண்டும் நெருப்பைத் தான் குறிக்கிறது.

திருமால் வழிபாடு
திருமால் வழிபாடும் சிவனார் வழிபாட்டைப்போல காலத்துக்கு முந்தியது இவ்வழிபாடு மழையை வணங்கும் வழிபாடு அதாவது மால்-மழை ( மால் என்பது கருமையைக் குறிக்கின்ற சொல். கரிய முகில்கள் ஒடுங்கி மழையைத்தருகின்றது. அதையே மால் வழிபாடு என்றனர் ந்ம் முன்னோர். 'திரு' என்பது சிறப்பாகவும் தெய்வத்தன்மை கொண்டவைகளுக்கும் திரு என்ற சிறப்பு அடை கொடுப்பது உண்டு. எடுத்துக்காட்டாக திருநீறு, திருச்சோறு( பிரஷாதம்), திருமணம், திருவாளன்,...........திருமால் என்று அழைத்தனர் மால் வழிபாட்டை.








கருத்துகள் இல்லை: