கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 20 மே, 2007

கண்ணீர்

'எரியும் கொள்ளிகள் எல்லாமே நெருப்புக் கொள்ளிகள்'

நம்பி ஏம்மாந்தார் தமிழ்க்குடிகள். தெரிந்து ஏமாறினார் தமிழ் தலைவர்கள். நம்பவைத்து கழுத்தறுத்தார் சிங்களத்தார்.

1955 ஆம் ஆண்டுக்குப்பின் கருப்பு 'சூளை ' எரிப்பும் மண் இழப்பும்.

சேகரித்த செய்தித் திரட்டு

  1. யாழ். கிளாலி நீரேரியில் 50ற்கும் மேற்பட்ட பயணிகள் சிங்களப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நாள். ( 1993)
  2. முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை 1987 (ஜனவரி) 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  3. மணலாறு பிரதேசத்தை தடைவலயமாக்கி சிங்கள அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டிய நாள். ( 1984)
  4. யாழ் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தின் ( ரொக்கற்) தாக்குதலுக்கு உள்ளான நாள் ( 1984)
  5. பண்டா- செல்வா ஒப்பத்தம் கிழிக்கப்பட்ட நாள். ( 1958)
  6. மட்டு - பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் ( 1981)
  7. சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழத்தின் மொத்த நிலப்பரப்பான 20.369.1 சதுர கிலோமீற்றரில் (6500 ) ற்கும் மேற்பட்ட (சதுர கிலோமீற்றர்) நிலப்பரப்பு தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
  8. யாழ். வல்வை நூல் நிலைத்தில் சிங்களப்படை நிகழ்த்திய படுகொலையில் 50 - ற்கும் மேற்பட்ட மக்கள் பலி ( 1985)
  9. நெடுந்தீவு - குறிகட்டுவான் கடற்பாதையில் சென்ற 30 -ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடற்படையால் குமுதினிப் படகில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாள். ( 1985)
  10. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ( 31.05.1981)
  11. 150 தமிழர்களைப் பலிகொண்ட அம்பாறை பலிகொலை.
  12. சுதந்திரபுரப் பகுதியில் விமானத்தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
  13. மண்டதீவில் 31 குருநகர் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  14. 2-வது கொக்கட்டிச்சோலைப் படுகொலையில் 65 தமிழர்கள் சிங்களப் படையால் கொல்லப் பட்டனர். ( 12.06.1991 )
  15. நவாலி தேவலயத்தில் சிங்களஅரச விமானத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 141 தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
  16. தமிழருக்கு எதிராக, மிகவும் கொடுரமான பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலான நாள் 1979.
  17. 1- ஆம் கட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலை 35 பேர் இந்நாள் கொல்லப்பட்டனர்.
  18. அமைதியாக ஈழத்துக்கு வந்த இந்திய படை 8000 தமிழரை கொன்றுவிட்டு மீண்டும் அமைதியாக இந்தியா சென்றது.
  19. முல்லைத்தீவில் வள்ளிபுனம் செஞ்சோலை சிங்கள விமனக்குண்டு வீச்சில் 52 மாணவிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பின்னர் இறந்தார்.
  20. 1977 இனப்படுகொலை 400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 10 000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
  21. சிங்கள படையால் 600க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று செம்மணியில் புதைக்கப்பட்டனர்.
  22. 2- ஆம் கட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலை 19 பேர் கொல்லப்பட்டனர்.

புதன், 16 மே, 2007

அரியகலையூரின் (அரியாலை) பேரன்

சிவகுமார் சத்தியா னந்தனெனும் ஈழத்
தவப்புதல்வன் ஐப்பசித் திங்கள் - அவதரித்தான்
அப்பன் எதிர்பார்த்த வீரன் தமிழரசன்
ஐப்பசியே வீழ்ந்தான் மடிந்து

மடிந்ததம் சேயவன் நாட்டுப் பணியை
முடிப்பேனெ னத்தானு மொருவனாய்ப் - பொட்டு
படையணியிற் சேர்ந்து வெடிவிபத்தின் போதே
யுடல்சரித்தான் தந்தை அரசன்

மன்னனுக்கு மந்திரிபோல் மானத் தலைவனுக்
கண்ணன் மதியுரைஞர் போரிடும் - மண்ணாம்
தமிழீழ நம்நாட்டுத் தேசக் குரலோனே
மாமணியாய் வந்த திரு

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினாள் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

கரும்புலி வான்புலி எல்லைப் படையுமா
வாரிக் கடற்புலி காலால் தரைப்புலி
வேவுப்புலி வேங்கைப் புலனாய்வும் பெண்புலியும்
சாவுக்கு மஞ்சாப் படை

மூவிலக்க மக்களை முள்வேலிக் கம்பிக்குள்
ஈவிரக்க மின்றியே இலங்கையின் - தீவிலே
சாவடிக்கும் சிங்கள னாணவம் தூளாகத்
தீவிரமாய்ப் போரிடுவோம் நாம்

உலக வலமும் வடமலை நோர்வே
வலமும் தமிழீழ மக்கள் - நிலையும்
கூறி யுலகத் தமிழரை யொன்றிணைக்கும்
பேரிகையே நம்வான் முரசு

ஞாயிறு செவ்வாய் வியாழன் தினங்களில்
நேயமிக்க நல்லோ(ர்) ரொலிவிளம்பி யென்றே
முழங்குக சங்கே முழங்கு

அன்னைநம் பூபதிநல் கல்விக் கலைக்கூடம்
சென்று பயிலடா தம்பீஇ - நன்றாய்
மொழியூறும் தெள்ளு தமிழ்ப்புலமை கொண்டு
செழும்பா செயலாமே நீ

கொக்குப்போல் கூகையை வெல்லும் வலகரக்
காக்கைபோல் பாயும் வரிப்புலிபோன்ம் - திக்கெட்டும்
வாழும் தமிழரே நாம் வலிமையானால்
ஈழம் மலரும் விரைந்து

எரிபொருளு(ம்) மேவுமெரி குண்டும் வடக்கே
யுருகும் பனிமலையும் காட்டு – மரத்தீயும்
ஓட்டை விழுமோசோன் மண்டலமும் வெய்யிலின்
சூடும் கடற்கோளும் கேடு

நிலமிசை நீள்வான் கடலிசை சோலை
மலர்மிசை மூச்சுக் குழலிடை – விலிமையுந்
தாழா வுறுதியும் தந்தவரே நம்தமிழ்
ஈழமா வீரர் நிறைந்து

செந்தமிழ் மண்ணைப் புடைசூழ்ந்து சூறையாடி
கந்தகமும் வெந்தணலும் தூவித் தமிழீழ
மாந்தரை கொன்றழித்த கொல்மகிந்த
குந்தகச் சிங்களத்தைக் கொல்

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்க
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க(ள்) அவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

வீரனாய் தீரனாய் ஈழநாட் டரசனாய்
கீரனாய் சூரிய தேவனாய்ப் - பிரபா
கரன் வாழ்ந்தாரே காண்

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினால் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்கச்
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க ளவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

ஈழமண் மீட்புப்போ ரில்கள மாடி
விழுந்தனன் சங்கரும் வித்தாய் - எழுந்தது
மீண்டும் நடுகல் வழிபாடு போற்றிப்
பணிந்து தொழுவோமே நாம்

அரியாலை யூரிலே யமர்ந்திருப்பா ளம்பாள்
அருள்மிகு தெய்வ முமவளே - பிரப்பங்
குளமுத்து மாரியம்மன் நல்கு மருள்வேண்டி
யுள்ளம் தொழுதேன் நினைந்து.

ஊரெழு மண்ணிற் பிறந்து திறமைகள்
தீரமாய்க் கற்றுக் கரிகாலன் - போரியல்
வீரனாய்த் தேர்ந்து மதியுரைஞ் மாணவனாய்ப்
பேராள னாய்த்திகழ்த் தான்

முடியுமென் போர்க்கவர் மூச்சே தடையன்று
முட்டிமோ தியேனுந் தாய்மண் - விடிவு
வருமென யெண்ணி முடி

ஊரெழு மண்ணிற் பிறந்து திறங்கள்
தீரமா யமைந்து மருத்துவத் தேர்விலுந்
தேர்ந்து தமிழீழ நாட்டுக்காய் திலீபன்
ஆற்றிய தொண்டே சிறப்பு

ஆழிப்பேய் வந்தூழித் தாண்டவ மாடி
யுழித்ததே யெம்மழகு நாட்டை – மழலையர்
தாய்மார் சிறுவர் பெரியோ ரெனவங்கு
மாய்ந்தனரே பாழ்பாடு நாள்

மேலைத் துருவத்தின் நோர்வே நிலத்திலே
ஆல்போ லிலங்கு மருந்தமிழைச் - சாலவும்
ஆய்ந்தப் புலமையிற் சொல்பொருள் நற்சுவையிற்
தோய வமைத்த களம்

கத்தியும் கதறியும் காப்பாற்ற வாரின்றி
யேதிலியாய்ச் சென்று சிறைபட்டோம் - புத்தாண்டோ
புத்தாண்டாய் இந்நாட்டில் வந்துமென்ன பாரும்
புதைகுழியிற் தானேநம் வாழ்வு

தலைவன் பிரபா கரனியக் கத்தில்
தறைமுறை காக்க விணைந்து – புலியாய்
செருக்கள மாடிவீழ்ந்த நம்மாவீ ரர்தம்
பெருமையோ டெண்ணிப் பணித்து

ஒற்றைச் சிறகிழந்து மோயாத வீரனவன்
சற்று முறுதி குலையா – மறவன்
கரிகாலன் தூது வனாயுல கெங்குங்
குரலெழுப்பி னான்தமிழ்ச் செல்வன்

புனித வுடைக்குள்ளே பேயாவி வாழுவதோ
புன்செயலால் ஈழத்தில் புத்தனெறி ஊன்றிடுமோ
புண்ணியன் சித்தார்த்தன் சொல்காக்கு மெப்போதும்
நன்மணி மேகலையே காண்

உயிரை நினைந்து விடுதலை நாள்மறந்து
மாய்தல் மறவர் சிறப்பல்ல – வயிரம் போல்
தாய்மானங் காக்கும் பிரபா கரன்வழியே
பாயும் புலியாகி வா

பாமாலை

அகர மமுதா எழுதி வழங்கும்
முகனை எதுகை மரபியல் - பாக்கள்
இணைவலையில் காணலாம் கற்கலாம் நீயிர்
வெண்பாவும் வடிக்கலாம் போய்

பங்குனித் திங்கள் பதினொராம் நாளன்று
எங்களது வீடும் இலங்கிற்று – கங்குலுஞ்
ஞாயிறுங் கைசேர்த்த போதுநம் சாமந்தி
சேயாய் கிடைத்ததே பேறு


அந்திப் பகல்காரி கார்த்திகைத் திங்களிலே
செந்நாப் புலவோர் அருந்தமிழ்ப் - பந்தலிலே
செய்யுளுஞ் சித்திரமுஞ் சேர்த்தே குணதாசன்
பயிற்றிய பாடமோ நன்று

உதயா வசியு மிணைந்தால் போதும்
இதமாய் வருடு மிசைவரி ரெண்டும்
புதமாய்ச் சுரத்தில் கதைகளுஞ் சொல்லும்
புதிய யிசை வார்ப்பு

கட்டளை கலித்துறை

செவ்வையும் மஞ்சளும் வண்ணங்கள் வீரத்தோ டமைதியாய்
செவ்வக் கொடியிற் சீறும்வரி புல்இ வலிமையதாய்
மாவலி வேந்தன் கரிகாலன் தந்த படைஞருமாய்க்
காவியஞ் செய்தே யெழுந்தாரே ஈழ நிலந்தனிலே

**

கதிரவேலு.பொன்னம்பலம்.சத்தியானந்தன்
முப்பாட்டன்,பாட்டன்,ஐயா
ச.உதயன்

செவ்வாய், 15 மே, 2007

செந்தமிழ்ப்பாட்டு

1
கடவுள் வணக்கம் ( படர்க்கைப் பரவல் )
' பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு
இசைத்த பண்ணிற் பாடுக தாளம் - முன்னை/ ஆதி
ப.
காலையிலே விழித்தெழுவோம் - முதற்
கடவுளின் அழகிய கழலிணை விழுவோம்
கைகுவித்தே தொழுவோம் ( நாளும்) ( காலை)
அ.
வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி
வினைகளை முறையே நிறைவேற்றி
மாலையில் நல்ல மனவமைதியுடன்
மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்) ( காலை)
*
நூல்>இசைத்தமிழ் கலம்பம்
ஆசிரியர்>'மொழி ஞாயிறு' ஞா.தேவநேயப்பாவாணர்
*
2
*
தமிழின் பதினாறு தன்மை
ப.
தொன்மையொடு முன்மை
தென்மையொடு நன்மை
தாய்மையொடு தூய்மை
தழுவிளமை வ்ளமை
அ.
எண்மையொடும் ஒண்மை
இனிமையொடும் தனிமை
செம்மையொடு மும்மை
திருமையொடும் அருமை
அ.
இங்ஙன்பதி னாறு
இலகுந் தமிழ்க் கூறு
எங்குமேயிவ் வாறு
எடுத்துமிகக் கூறு
*
நூல்> இசைத்தமிழ் கலம்பகம்
ஆசிரியர்> 'மொழி ஞாயிறு' ஞா.தேவநேயப்பாவாணர்
*
3
*
இதுவும் அது ( தமிழ நாகரிக முன்மை )
*
' கப்பற்பாட்டு' மெட்டு அல்லது வேறிசைந்த மெட்டு
*
மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே
மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!
*
மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே
மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே!
*
பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழே
பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே!
*
பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழே
பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே!
*
அரசியலை முதன்முதலாய் அமைத்தவனும் தமிழனே
அறம்வளர நடுநிலையாய் ஆண்டவனும் தமிழனே!
*
அரிசியினாற் சோறுமுதல் ஆக்கியவன் தமிழனே
அறுசுவையாய் உண்டிகளை அருந்தியவன் தமிழனே!
*
பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே
பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!
*
கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே
கலப்படையால் குணத்தீவும் காவல்பூண்டான் தமிழனே!
*
வடிவேலால் எறிகடலை வணக்கியவன் தமிழனே
வடிம்பலம்ப நின்றபெரு வழுதியொரு தமிழனே!
*
துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே
பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே!
*
இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே
ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே!
*
கடவுளென்று முழுமுதலைக் கண்டவனும் தமிழனே
கரையிலின்பம் நுகரவழி காட்டியவன் தமிழனே!
*
ஆசிரியர்>' மொழிஞாயிறு'

திங்கள், 14 மே, 2007

தோப்பு

அணியியற் சொற்கள்

"பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிடனாக வுணர்வினின்
வல்லோர் அணிபெறச் செவ்வன செய்யுள்" ( நன்.268)

என்று பவணந்தி முனிவர் கூறினாரேனும், அணி செய்யுட்கே சிறப்பாக வுரியது என்பது அவர் கருத்தன்று. சில உடம்புகளில் இயற்கையாய் அழகு அமைந்து கிடப்பது போல , வல்லோர் செய்யுள்களிலும் இயல்பாக அணி அமைந்திருக்கும் என்பதே அவர் கருத்தாகும். அஃதாயின், அல்லோர் செய்யுளில் அணி இயல்பாய் அமைந்திராது என்பதும் பெறப்படும். இனி , வல்லோர் செயயுளில் மட்டுமன்றி அவர் உரைநடையிலும் அணி அமைந்திருப்பது இயல்பே, ஆகவே, அணியானது செய்யுள், உரைநடை ஆகிய இரண்டற்கும் பொதுவாம்.

பொருளை விளக்குவதும் அழகுபடுத்துவதுமே அணியின் நோக்கமாதலானும், செய்யுளிற் போன்றே உரைநடையியிலுமழகிய கருத்துகள் அமையுமாதலானும், கருத்தின் அழகே அணியாதலானும், உரைநடைக்கும் அணி உரித்தென்னும் கூற்றில் யாதொரு வியப்புமின்று. இதனாலேயே, தொல்காப்பியத்தில் செய்யுளிற்கு முன்னர், அணியியற்பாற்பட்ட உவமவியல் கூறப்பட்டதென்க.

ஒரு கருத்தைத் தெரிவிக்க ஒரு சொற்றொடரே வேண்டும் என்னும் யாப்புறவில்லை. ஒரு சொல்லாலும் ஒரு கருத்தைத் தெரிவிக்கலாம். ஆகவே, தனிச்சொற்களிலும் அணி அமைதற்கிடனுண்டு.

அணிகட்கெல்லாம் தாயானதும் தலைமையானதும் உவமையே யாதலானும், தொல்காப்பியத்துள்ளும் அஃதொன்றே கூறப்படுதலானும், இக் கட்டுரையில் பெரும்பாலும் உவமையணிச் சொற்களே, அவற்றுள்ளும் கவனிகத்தக்க ஒரு சிலவே, கூறப்படும்.

1.உயர்திணைப் பொருளுக்கு அஃறிணையுவமம் பெண்ணியல்
2. மக்கள் உறவும் தொடர்ச்சியும்
3.அரசனும் குடிகளும்
4.வாழ்க்கையியல்பு
5.சில குணமும் செயலும்
6.நூலும் செய்யுளும்
7.கருமநிலை
8.வறுமை
9.நோய்
10.இறப்பு
11.அஃறிணைப் பொருளுக்கு உயர்திணை யுவமம்
12.உயர்திணை வினைக்கு உயர்திணை யுவமம்
13.அஃறிப் பொருளுக்கு அஃறியுவமம்
14.இருதிணைப் பொதுப்பொருளும் உவம்மும்

1.உயர்திணைப் பொருளுக்கு அஃறிணைவமம் பெண்ணியல்

பசுந்தமிழ்

வணக்கம்!

வாருங்கள் தமிழ் கற்போம்.

எண் - எண்ணுவது ( மனதால் எண்ணுவது எண் எனப்படுகிறது. எண்ணம் )

ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணப்பழகிய பின்னரே கணக்கில் மேம்பட்டார்கள் நம் முன்னோர் . கணிதம் - கண் + இதம் = கணிதம்

கண்ணும் எண்ணமும் கணிப்பு

1

ஒன்று : ஒல் - ஒ. ஒல்லுதல்(பொருந்துதல்). ஒத்தல் பொருந்தல்.

ஒல்+ து = ஒன்று= பொருந்தினது, ஒன்றானது.

2

இரண்டு : (இரள்) + து = இரண்டு. ஈரள் - ஈருள் - இருள் - இரவு
ஈரள் = ஈர்ப்பது(அறுப்பது)
இரவு இரண்டாக அறுக்கப்படுக்கப்படுகிறது
( முன்னிரவு/ பின்னிரவு)

3

மூன்று = ஒன்றுக்கு எதுகையாய் அமைந்தது.

மூன்று மூக்கைக் குறித்தது. மூக்கில் உள்ள மூன்று துளைகளை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மூசு(மூசுதல்) > மூஞ்சு >மூக்கு>மூ>மூன்று.

4

நான்கு = நால்+ கு ( நாலும் திக்குகள்)

நாலு>நாலுதல்>ஞாலுதல்( தொங்குதல்)

நால்>நாலம்>ஞாலம். ந - ஞ, போலி

5

ஐந்து = ஐ+ து= ஐது - ஐந்து

ஐ ( கை)

கையில் விரல்கள் ஐந்து

6

ஆறு = வழி, ஒழுக்கநெறி, சமயம். மார்க்கம் என்னும் வடசொல் இப் பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் ( நாஸ்திக) மதமுஞ் சேர்ந்து ஆறாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுசமயம் என்னும் தொகை வழக்கு மிகத் தொன்மை வாய்ந்தது.

7

ஏழு = ஏழ் - ஏழு - எழு.

ஏழ்= இசை

யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையையெழுப்புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்ப்டுவது ஏழ்.' ஏழிசைச் சூழல்' 'ஏழிசை வல்லபி' என்னும் வழக்குகளை நோக்குக.

8

எட்டு = எண் + து

எண் = எள். இப் பெயர் ஆகுபெயராய் உணவைக்குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும்; எள்ளைக்குறிப்பின், அதன் காயிலிலுள்ள பக்கங்களின் தொகைபற்றியதாயிருக்கலாம்.

நெல், புல்( கம்பு ) , சோளம், வரகு, திணை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்ற எட்டே முதலாவது எண்கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின்வகையா யடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையாயிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்ப்ட்டிருக்கலாம்.

9

ஒன்பது

இந்த எண் தொளைகளைக் குறித்தது.

தொள் + து = தொண்டு. தொள் = தொளை. உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்த்லின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.

தொண்டு - தொண்டி = தொளை. ஒ.நோ: தொண்டை = தொளையுள்ளது

10

பத்து

இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு.

பல் + து = பஃது = பத்து

******************************************************************************

*

திக்குகள்

*

திகை - திக்கு - திசை

திக்குகள் இரண்டாகி, நான்காகி, எட்டாக அழைக்கப்படுகின்றது.

*

எல்லைகள் இரண்டு

எல்லை என்பது கதிரவன் எழுந்த கரையில் இருந்து விழுகின்ற கரை வரை உள்ள திக்கு.

எல் + ஐ = எல்லை ( ஐ இரண்டாம் வேற்றுமை )

*

கிழக்கு , மேற்கு

கிழக்கு - கதிரவன் கீழே இருந்து மேலே எழுவதால் கிழக்கு எனப்பட்டது.

கீழ் + கு = கீழ்க்கு - கிழக்கு

மேற்கு - அதே கதிரவன் மேலே இருந்து கீழே விழுவதால் மேற்கு எனப்பட்டது.

மேல் + கு = மேல்கு - மேற்கு

*

வடக்கு , தெற்கு , கிழக்கு , மேற்கு

வடக்கு - வடமரங்கள் (ஆலமரம்) நிறைந்து காணப்பட்டமையால் வடக்கு எனப்பட்டது.

வடம் + கு = வடம்கு - வடக்கு { ( அக்கு என்ற ஒலி சேர்ந்து கொண்டது) , ( வடம் - கயிறு ) }

தெற்கு - தென்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டமையால் தெற்கு எனப்பட்டது.

தென் + கு = தெற்கு

( கு என்பது நான்காம் வேற்றுமை)

வடக்கு , வடமேற்கு , மேற்கு , வடகிழக்கு , கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , தென்கிழக்கு

*********************************************************************

அவை

1

தாய் மொழி என்கிறார் தமிழ் மொழியை
தன் குழந்தைக்கு அப்பனை காட்டுகிறாள்
dady என்று

அவை சிரிக்கிறது

ஆ...... ஆ........ ஆ........ ஆ.......

தமிழ்த்தூவல்> அரசன். தமிழரசன்


2


ஆசிரியர் : சிறுவன் ஒருவனை பார்த்து,
"உயிர் எழுத்து எத்தனையடா குழந்தாய் " என்று கேட்டார்.

மாணவன் :) " பன்னிரண்டு " என்றான்

ஆசிரியர் :) " எப்படி நினைவுபடுத்திக்கொண்டாய் " என்றார் .

மாணவன் :)" திலீபன் அண்னை உண்ணா நோம்பிருந்த நாட்களை நினைவுபடுத்திக் கொண்டேன் " என்றான் அவன்.

ஆசிரியர் :) " நன்றடா நன்று , நீ தமிழையும் காப்பாற்றுவாய் மண்ணையும் காப்பாற்றுவாய் " என்று அந்த மாணவனை உவந்து புகழ்ந்தார் ஆசிரியர்.

அவையில் தமிழ்ச்சேய் என்ற அறிஞன் கூறவும். அவை வியந்து நோக்கியது.

தூவல்> அரசன்.தமிழரசன்

3

திருமணத்தின் பின் கலந்த பிற்பாடு அடுத்த நாள் காலை.

கணவன் :) " மைவிழி, பெண்ணுக்கு அழகைக் கொடுப்பது கண் மை என்பார்.

நீ ஏன் இன்னும் மை பூசவில்லை.

மனைவி :) " எனது கண்ணில் நீங்கள் இருக்கின்றீர்க்ள். உங்களுக்கு கரியைப் பூச விரும்ப வில்லை. என்றாள் அவள்.

தன் மனைவியின் காதலைக் கண்ட கணவன் அமைதியானான்.

அவையில் பகல்வன் என்ற அறிஞர் கூறவும். தமிழ்ப் பெண்ணின் காதலைக்கண்ட அவையு சற்று நாழி அமைதியானது.

தூவல்> அரசன். தமிழரசன்

4

காதலன் :) "நிலா! நான் உன்னை பார்க்கும் போழ்து

நீ மண்ணைப் பார்க்கிறாயே கோபமா? நாணமா?"

காதலி :) "இந்த மண்ணுகாக என்ன செய்து விட்டோம்; இப்பொழுது நாம் காதலிப்பதற்கு" என்றாள் அவள்.

ஆணாக இருந்தும் மண்ணை எண்ண மறந்து விட்டேனே என நினைத்து வெட்கி நின்றான்.

அவையில் தாமரை என்ற அறிஞை கூறவும் பெண்ணின் பொது நலம் கண்டு உவகை கொண்டது அவை.

பதிவு> அரசன். தமிழரசன்

5

சிறுவன் :) " ஐயா! பெரியவரே கையில் தேங்காயை வைத்திருக்கிறீர்கள். இந்த கோயில் கல்லில் அடிக்கப்போகிறீர்களா?"

பெரியவர் :) "ஓம், தம்பி."

சிறுவன் :) "ஏன்? ஐயா தேங்காயை கல்லில் சிதறி அடிக்கிறார்கள்."

பெரியவர் :) "அது வந்து தம்பி. இந்த சிறட்டை போன்று மனதைச் சுற்றி தீய குணங்கள் மூடியுள்ளன. சிறட்டை போன்று அவை சிதறி உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் வெள்ளை மனத்தை அடையாளம் கண்டுவிடலாம்." என்றார் பெரியவர்

சிறுவன் :) "அதுதான் பொருள் தெரிந்து விட்டதே அதற்குப் பிறகு ஏன் உடைக்கிறீர்கள்." என்று கேட்டான்.

பெரியவர் தனது அறியாமையை எண்ணி மனம் கூனி நின்றார்.

' சிறியவரும் பெரியவராவார் நல்ல எண்ணம் இருந்தால், பெரியவரும் சிறியவராவார் அறியாமை குடியிருந்தால்'

தூவல்>அரசன்.தமிழரசன்

சனி, 12 மே, 2007

சமயம்

முருகக் கடவுள் யார் ?

முருகன் என்ற வடிவமே கற்பனை வடிவம் தான் என்பதை முதலில் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

முருகன்

முள்-முரு-முருகு-முருகன்(அழகு,எழில்)
முள்-முளை-முளைத்தல்

முருகனின் கையில் வேல்
(முன்னை காலத்து மக்கள் பயன்படுத்திய கருவிகளில் ஒன்று வேல்)

முருகனின் ஊர்தி மயில்
(குறிஞ்சி நிலத்தில் வாழும் பறவை மயில்)

முருகனின் கொடி சேவல்
(சண்டைக் களத்தில் இறங்கினால் சாகும் வரை சண்டையிட்டுக் கொண்டே சாகும் பறவை சேவல் ) . இது மறத்தின் அடையாளம்.

எம் தமிழ் முன்னோர் தாம் கொண்ட அடையாளமே தான் அவை. முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றவும் இல்லை. அவன் மயில் ஏறி உலகை
சுற்றவும் இல்லை. சூரனை கொல்லவும் இல்லை எல்லாம் பொய்.


தமிழ் நிலத்தை ஆண்ட பாண்டியனை முருகன் என்று முன்னோர் அழைத்திருக்கலாம். அவன் தமிழ் வளர்த்திருக்கலாம்.

தமிழ்த்தூவல்>அரசன்.தமிழரசன்

சிவனார் யார் ?

சுள்>செள்>செவ>சிவ>சிவம்>சிவன் ( நெருப்பு ).

நெருப்பை வணங்கும் பத்தியில் தமிழ் முன்னோர்களால் நெருப்புக்கு வழங்கிய பெயர் தான் சிவம் சிவன் என்ற பெயர்கள்.நெருப்பை வணங்கும் வழிபாடு கிட்டத்தட்ட 3000 ஆண்டு காலத்துக்கு முந்தியதை சிந்துவெளி அகழ்வாய்வுகள் வெளிப்படையாக காட்டுகின்றன. அதாவது சில சிற்பக்கலைகள் கொண்டுள்ள அமைவுகளைக் கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. சிவன் தனாக தோன்றவுமில்லை அவன் முருகனை உருவாக்கவும் இல்லை சிவனும் முருகனும் ஒன்றுதான் இரண்டும் நெருப்பைத் தான் குறிக்கிறது.

திருமால் வழிபாடு
திருமால் வழிபாடும் சிவனார் வழிபாட்டைப்போல காலத்துக்கு முந்தியது இவ்வழிபாடு மழையை வணங்கும் வழிபாடு அதாவது மால்-மழை ( மால் என்பது கருமையைக் குறிக்கின்ற சொல். கரிய முகில்கள் ஒடுங்கி மழையைத்தருகின்றது. அதையே மால் வழிபாடு என்றனர் ந்ம் முன்னோர். 'திரு' என்பது சிறப்பாகவும் தெய்வத்தன்மை கொண்டவைகளுக்கும் திரு என்ற சிறப்பு அடை கொடுப்பது உண்டு. எடுத்துக்காட்டாக திருநீறு, திருச்சோறு( பிரஷாதம்), திருமணம், திருவாளன்,...........திருமால் என்று அழைத்தனர் மால் வழிபாட்டை.