அனலைதீவு
இந்து சமுத்திரத்தின் முத்தென மிளிரும் இலங்கைமணித்திருநாட்டில் எழிலோங்கும் தீவுகளில் அருளோங்கும் தெய்வச்சிறப்பு உள்ளது அனலைதீவாகும். இத்தீவின் பரப்பளவு 5 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலமும் உள்ள ஓர் சிறிய தீவாகும். இலங்கயிலேயே பெரிய சித்திரைத்தேர் இங்குள்ளது. இது 1982ல் முதன் முறை வெள்ளோட்டம் ஓடியது. இத்தேர் அனலைதீவின் முதன்மையான ஐயனார் தலத்தில்லுள்ளது. ஊரின் உள்ளே கால் எடுத்து வைத்தால் அப்பப்பா! என்னே அழகு பச்சைப்பசேல் என்று பரத்த பாய் விரித்தாற் போல எங்கு பார்த்தாலும் ஒரே தோட்டமும் காயும் பஞ்சு கருமாக பொன் விளையும் பூமியே. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும் பனை மரங்களும், வாழை மரங்களும் மரமெங்கும் இளநீர் குலைகளும், வருக வருக என ஆடி அசைந்து தலையாட்டி வரவேற்கும். சென்ற முறை ஐயனார் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தபோது கடலலையின் மத்தியில் மக்கள் கூட்டம் அலையடித்தும் தேரிழுக்க போட்டியிட்ட போது நானும் அந்தவடத்தை தொட்டிட வேண்டும் என்று மக்கள் வெள்ளதுள் சென்றுதேரின் வடத்தை ஒரு கணம் தொட்டு இழுத்த காட்ச்சி இன்றும் என் கண்முன்னே கரை பரண்டோடுகின்றது. கற்பூரசட்டிகள்ளும் காவடியாட்டங்களும் அருகருகே தாகம் தீரிக்கவென்றெ தண்ணீர் பந்தல்கரும் எத்தனை வியத்தகு விந்தையானது. இந்த புகழ் பூத்த எழில் நிறைந்த ஊரையும் மக்களயும் மறந்து என்னால் ஒரு நிமிடமேனும் வாழ முடியவில்லை. கடுகு சிறிது காரம் பெரிது இந்த சிறிய ஊரின் பெருமை எத்தனை சிறப்பு.
அனலைதீவின் சிறப்பினாலே அருள்மிகு ஆலையஙளும் சீர்பெரு கல்வி கற்கும் பெரியார் நிரம்பப்பெற்ற வாரி கடல் சூழ்ந்த பூமி என்றுமே வளம் பெறுகவே!போற்றிடுவோம் நாமெல்லாம் அன்லையியம் பதியினை பெற்ற தாயும் பிறந்த பொன் நாடென்றும் ஏற்ற முடனே வீறு நடை போட்டு உயர்ந்திடவே ஆற்றல் மிகு சிறப்புடனே அனைவரும் கூடிவளம் சேர்ப்போம்.
நோர்வே
ஐரோப்பாவின் வடக்குப் பகுதியில் நோர்வே என்னும் ஓர் நாடு உள்ளது. இந் நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவாகும். நோர்வேயின் பரப்பளவு 323 877 சதுரக்கிலோமிட்டர் ஆகும். இந் நாட்டில் 50 இலட்சம் குடிமக்கள் உள்ளனர். இந் நாட்டு மொழியின் பெயர் (நொஸ்க்) ஆகும்.
(கல்ஹோபிக்கன்) என்னும் மலை நோர்வேயில் உயரமான மலையாகும். இதன் உயரம் 2469 மீட்டராகும். நோர்வேக் கடலின் அடியில் எண்ணெய் உள்ளது. எண்ணெய் இந்நட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும். மீனும் இன்னும் ஒரு ஏற்றுமதிப் பொருளாகும். இங்கு பனிக்காலத்தில் நிறைய பனி கொட்டும். இக்காலத்தில் இந்நட்டு மக்கள் பனியில் சறுக்கி விளையடுவார்கள். இங்கு உள்ள மலைகளையும் இயற்கை அழகையும் பார்த்து (இரசிப்பதற்கு) பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
நான் நோர்வேயில் பிறந்தேன். எனது வயது 13 ஆகும். நான் அன்னை பூபதி கலைக்கூடத்தில் தமிழ் கற்று வருகிறேன்.
VAALI - THE END OF AN ERA | LAST RESPECTS TO THE VETERAN PART 2 - BEHIND...
11 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக