கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 16 நவம்பர், 2015

அண்ணையின் அன்னை


பாராண்ட இனமொன்று
......பரித்தவித்த வேளையிலே
பாராள வேண்டுமென்று
......பெருமகனைக் கொடுத்தனையே
தானாள வேண்டுமென்று
.......ஒருபோதும் நினைத்ததில்லை
தமிழாள வேண்டுமென்றே
.......தம்பியரும் நினைக்கின்றார்
சீராளன், சீராளன் சினந்தாலோ
.......சிங்களத்தான் படையுடையும்
ஆனாலும் தாயே
.......அவன்வாயால் "அம்மே"
என்றழுதாலோ அவனுக்கும்
.......உயிர்ப் பிச்சை
அளிக்கின்ற வீரம்
.......அவனெல்லவோ மறவன்.

அம்மகனை ஈன்றெடுத்தாய்
.......அதுவே நற்பேறே
வம்பனாய் தும்புக்குப்
......போனதுமில்லை போக்கிரியாய்
சண்டைசச்சரவு செய்ததோயில்லை
.....தமிழர் நோவதைக்
கண்டவுடனே களத்தில்
.....குதித்தான் வீரர்மரபாய்
ஆயினும் இரண்டகன்
.....பஸ்ரியாம் பிள்ளை
கடைக்குட்டி யவனையொருநாள்
..... கம்பியெண்ண வைப்பனென்பான்
முடிந்தால்நீயும் பிடியேன்
........அதற்கு முன்பே உன்னையவனும்
பிளந்து போடுவான் என்பாய்
..........அன்னையேயுன் பேச்சில்
தமிழ்த்தாய் பூரித்தாள்
......நீயின்றிஆரோ தமிழ்த்தாய்

வாசகசாலைக் குற்றியிலே
.....வரிசையாய் இருந்து
நகைச்சுவை சொல்லி
....நாள்கழித்த கூட்டத்திற்குத்
தெரியாது தாயே
.....போராட்டத்தின் வலி
குண்டுக்கும் நடுவில்
......குப்பிக்கும் அருகில்
மண்மூட்டைக்கும் இடையில்
.....பார்வல் இருக்கையில்
இருந்தானுக்குத் தானே
....தெரியும் விழுப்புண்ணின்
வேதனையும் தாகமும்
........விடுதலையின் பண்ணும்
முப்பதாண்டுகள் மண்டையுடைந்து
.......முக்கிமுக்கி முடியாதென்று
முப்பஃது நாடுகளைக்
......கூவி அழைத்து
மக்களை எல்லாம்
.....நரபலி ஆக்கி
இராசபட்சிகள் வென்றோவிட்டன
.....ஒருபோதுமில்லை வெல்வோம்

தழையில் தங்கியிருந்தக்கால்( Hytte Life )

  

தழையைச் சென்றடைந்ததும் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டோம். பண்ணைவளர்ப்பில் முன்னெடுத்துக்காடாக விளங்கினார்கள். மாடுவளர்ப்பு மந்தைவளர்ப்பு கோழிவளர்ப்பு

அவர்கள் பண்ணைவளர்ப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள் அதுமட்டுமல்லாமல் சிறந்த கல்விமான்களாக விலங்கினார்கள். நாங்கள் தழையில் தங்கும் நாளில் அவர்களும் வேறொரு தழைக்குச் செல்வதற்கு அணியமாக இருந்தார்கள். அங்கு அவர்கள் குழந்தைகளை மலை ஏறுவதற்குக் கொண்டு செல்வதாக என்னிடம் கூறியிருந்தார். வேற்று கிரக வாசிகளைப்போன்று எம்மோடு பழகவில்லை தங்களுடைய உறவுகளாகவே பழகினார்கள். வெள்ளையினத்தவர் பண்ணைமுதலாளிகள் பெரும் தேசத்துக்கே சொந்தக்காரர்கள் ஆனால் மனிதர்களோடு எப்படி பழவேண்டும் என்று கற்றிருக்கும் பண்பாளர்கள். எங்கள் தமிழைப்போன்று பேசுவதால் தானோ நல்லவர்களாக உள்ளார்கள்.
  


அடுத்தநாள் நாங்கள் செங்குத்து மலைக்கு செல்ல இருந்ததால் அதைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். பிரட்டிவந்த புலால் துண்டுகளை வாட்டி உண்பதற்கு அணியமானோம். இலையுதிர் காலத்தில் காடுகளிலிலோ அல்லது தீபற்றக்கூடிய இடங்களிலோ வாட்ட முடியாது அப்படிச் சட்டத்தை ,மீறினால் பணம் தண்டமாக கொடுக்கவேண்டி வரும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேலாகத்தான் இருக்கும் சரியாகத் தெரியவில்லை. தழைக்கு முன்னால் நிலவு எறித்துக்கொண்டிருந்தது புத்தம்புதிய நிலவு மஞ்சள்காகக் காட்சியளித்தது. நிறைமதியில் மகன் பாவலன் நிலாச்சோறு கவளமாகத் தரவும் இரட்டிப்புச்சுவை இது போல் போறு எல்லோருக்கும் வாயப்பதில்லை மற்றைய இரு சிறுவர்களும் இறைச்சி வாட்டுவதற்காக காத்திருந்தனர். பாவலனுக்கு புலால் அதிகம் பிடிக்காது.உயிரினங்களைக் கொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பான்.

   

எனக்கும் உயிரினங்களைக் கொல்வது பிடிக்காது. கறியாகிக் கொடுத்தால் நன்றாக சுவைத்துச் சாப்பிடுவேன். மூத்தவனுக்கு பாட்டன் முப்பாட்டன் போல் இறைச்சி வேண்டும்.கடைக்குட்டிக்கு சுவையிருக்கவேண்டும். புலாலை வாட்டுவதற்கு இருவரும் காத்திருந்தனர். நாம் இருவரும் சோறுண்டுவிட்டு புலாலை வாட்டினோம். முதலில் சூட்டில் வைத்துவிட்டு பின் வாட்டினோம். உணவை உண்டுவிட்டு இருந்து கதைக்கத்தொடங்கினோம்.ஓரிரவு என்பதால் நீண்ட நேரம் பேச இயலவில்லை மலை ஏறும் ஆவலில் நால்வரும் உறக்கத்துக்குச்சென்றோம். ஆளுக்கொரு பொத்தகத்தைக் கொடுத்துவிட்டு எனது இயல்பான பொத்தகக்கட்டுடன் படுத்திருந்து வாசிக்கத் தொடங்கினேன். தழையில் தங்குவதற்கு நானும் குழந்தைகளும் எண்ணூறு குரோணர்கள் செலித்தினோம்.ஆ.....மறந்து போனேன் நாங்கள் சென்ற பின்னேரம் மாடுகள் ஆரவாரத்துடன்கானப்பட்டன. மாடுகளை தழையின் சொந்தக்காரரின் தகப்பன் வந்து அடக்கிவிட்டுச்சென்றார்.மாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன் எல்லாம் கடுவன் மாடுகள்.நிற்க ஆழ்ந்த வாசிப்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு இரவெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்தேன்.வாசித்த நூல் சிலப்பதிகாரம் புகார் காண்டம்.பின் அறிதுயில்


காலையில் எழுந்து காலைக்கடனை முடித்து விட்டு நாங்கள் தங்கிய அறைகளை துப்புரவாக்கி குளித்துவிட்டு மலைக்குப் புறப்பட்டோம். அதற்கு முன் கோழிகளோடும் சேவல்களோடும் விளையாடிவிட்டு திறவு கோலை கதவத்தில் கொழுவிட்டுப் புறப்பட்டோம். இப்படியொரு தழைவாழ்வை முன்னர் ஆகூழாக எண்ணியதில்லை. மலையும் மலை சார்ந்த நிலத்தில் கிடைக்கும் உவப்பு நாம் பெற்றபேறு. வடதுருவத்து மலைத்தொடர் அழகோவழகு.
"நீர்சூழ் மலைத்தொடர் நன்னாடு
நீண்டு கிடக்குது ஒளியோடு
பாரில் உதித்த வளநாடு
பார்பார் நோர்வே முதல்நாடு
பார்பார் நோர்வே முதல்நாடு"
 _ச.உதயன்_

சனி, 14 நவம்பர், 2015

தழையை நோக்கியே (hytte tur)

சிற்றூர்தியில் சென்றுகொண்டிருக்கிறோம் இலையுதிர்காலம் நோர்வே நாட்டில் கதிரறுப்புக்காலம் கூலங்களை ஆறுத்தபடி அறுப்பு இயந்திரங்கள் மூலம் கதிர்களை அறுத்துக்கொண்டு சென்றதை செல்பி மூலம் எடுத்துக்கொண்டோம். பின் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். மந்தை மேய்ப்பு மாடுகள் மேய்ப்பு பாற்பண்ணைகளில் இருந்து வெளியாகும் நாற்றம் பழைய பொருள்களை முற்றத்தில் போட்டு விற்றுக்கொண்டிருந்ததையும் பார்வையிட்டுக்கொண்டு பயணித்தோம். சின்னகாமரில் சில மணித்துளிகள் ஓய்வெடுத்துவிட்டு ஒத்தா(Otta)வழியாக உலூமை(Lom) சென்றடைந்தோம். முன்கூட்டிய திட்டத்தின்படி தழையில் ஓரிரவு தங்கினோம்.தழைக்குச் சென்றடைய பிற்பகல் ஆறு எடுத்தது.மூத்தசிறுவன் செல்லும் பாதைகளைப் பாதை அறிவுக்கும் செல்பியுடன் தொடர்புகளைப் போணினான். அதனால் இடையூறுகள் இருக்கவில்லை மிகத்துல்லியமாக அறிவுப்புப்பலகைகள் அப்பணியை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தன. சிறுவர்கள் மிகவும் கெட்டிக்கார்கள்.முதலில் பாதை கரடுமுரடாகத்தான் இருந்தது இரவோடு இரவாக வேறு பாதையைத் தேடினார்கள்.மூவரிலும் மூத்தவன் தாரை அச்சமறியாதவன். இளையவன் பாவலனே அச்சத்தில் உழன்றுகொண்டிருந்தான் கடைக்குட்டி கரிகாலன் கோவேரன் புதினமாக எல்லாவற்றையும் கேட்டறிந்தான். மலைசூழ் மரகதத் திருநாடு நோர்வே என்பது இவ்விடங்கள் தெளிவுபடுத்துகின்றன.
  


 





வெள்ளி, 13 நவம்பர், 2015

செங்குத்துச் சிகரத்தை நோக்கி

அதிகாலை செந்நிலவைப் பார்த்து சற்று அயர்ந்து தூங்கிவிட்டுக் காலை பத்துமணிக்கெல்லாம் வெளிக்கிட்டு பர்வத்தின் செங்குத்துப் பாதைக்குச் செல்ல சிற்றூர்தியில் புறப்பட்டோம். நானும் என் மகன்களும் மிக குதூகலமாகக் காணப்பட்டோம்.சுற்றுலாச் செலவு என்றாலே அலாதிப்பிரியம் அவர்களுக்கு ஓசுலோவில் இருந்து உலூம் என்னும் மாநிலத்துக்கு விரைகிறோம்.நோர்வே நாட்டு அதி உச்சி நெடுவரையின் நாலில் ஒரு பாகிதான்.என்றாலும் எமக்கு அதிஉச்சிதான் 2469 மாத்தல் என்பது.
கீழே அப்பனிமலை(Gald-hø-piggen)  பற்றிய ஆங்கில வடிவத்தின் சாரம்
(The highest mountain in Norway and Northern Europe. Glittertind has traditionally been the highest point with its snow-dune, but in the 2000s was lower than Galdhøpiggen even counting the cornice, 2466 m. Galdhøpiggens summit snow bar in summer.)






கோட்டை செய்த கேடு

நன்றி தினகரன்

நன்றி புலிகள்


ஒற்றைப் பூவரசு
ஒரு முனியப்பர் கோயில்
பூவரசைச் சுரண்டியபடி
பேதையில் பேதை
இலண்டன் சாள்சின்
பிறந்த நாளுக்காய்
கட்டிவைத்த மணிக்கூட்டுக்கோபுரம்
தந்தை செல்லா நினைவுத்தூபி
ஓரிலக்கத்துக்கும் குறைவான
நூல்களை அடைக்கி வைத்த
யாழ் நூலகம்
வேம்படி மகளிர்
மத்திய கல்லூரிகள்
துரோகி துரையப்பா
விளையாட்டரங்கம்
வாடிவீடுகள்
நான்காம் உலக
தமிழாராய்ச்சி நிகழ்வுக்கோலம்
தோட்டாக்களின் வேட்டொலிகள்
திகில் பரபரப்பு
பதினொரொரு பேரின்
இறுதி வணக்க நிகழ்வு
கரிகாலன் வரவு
கைது செய்தல்
காணாமல் போதல்
எடுத்துக்காட்டு இன்பம்
தென்றல் வீசிய
சிறுதீவில் சிறுத்தைகளின்
மோதல் களம்
புதிய புலிகளின் தொடக்கம்
வேங்கையின் முதல்மரிப்பு
தியாகதீபம் திலீபன்
தரித்து வைத்த வண்டி
ஒலிப்பெருக்கியில் ஒலித்தடங்கிய
புலிகளின் தாபக்குரல்கள்
சண்டைக் காட்சி
குண்டுவீச்சு குறிச்சூடு
வீரமரணம்
வீர தீர உக்கிரம்
பசிலன் குண்டில்
பதறியடித்த சிப்பாய்களின்
படகேற்றம் - பின்
கேர்ணல் பானுவின்
புலிக்கொடியேற்றம்
தாலியறுத்த கோட்டை
தாழிட்டு வீந்தது விடிவே!