கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஆய் அண்டிரன்/ஆய் அந்திரன்

நாசில் நாட்டை ஆண்ட ஆய் மன்னர்களில் ஒருவனை அசோக கல்வெட்டு "ஹிதா ராஜா" என்று குறிப்பிடுகிறது. ஆயர் குலத்துச் சிற்றரசர் காலம் கி.மு 250 துவக்கம் என்கிறது குமரி நிலநீட்சி நூல் பக்கம் 155 (ISBN 81-87477-34-2) நம் ஆய்வுகள் ஆய் அண்டிரன் ஆண்ட நாட்டை நோக்குமானால் தமிழின் பழைமை தென்பட வாய்ப்புகள் உள.

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

‘திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே!


திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
திண்மையான தேரினை இரவலர்க்குத் தந்த குளிர்ந்த மாலையைர் சூடிய
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
(ஆய்)அந்திரன் வருகிறான் என்று ஒளியுடைய தொடியையும்
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
வச்சிரப் படையையும் உடைய அகன்ற கையையும் உடைய வேந்தனின் கோயிலில்
போர்ப்புறு முரசும் கறங்க,
வாரினால் போர்த்தப்பட்ட முரசு முழங்க
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே.
ஓசை வானில் எழுந்ததே!



பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,
‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.

http://www.wikimapia.org/#lat=8.6201017&lon=77.7660372&z=9&l=0&m=b

கருத்துகள் இல்லை: