கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

முழங்கு முரசே!



தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள் 
போம் போம் போமென முழங்கு முரசே! 
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு! 

தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
செவ்விழி உடையோம் செருமாண் தமிழர் 
யாம் யாம் யாமென முழங்கு முரசே! 
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு! 

தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா? 
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே! 
அரசொடு தமிழன் ஆளமுழங்கு! 

தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு! 
தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
தேச விடுதலை பாட முழங்கு!

புதன், 26 செப்டம்பர், 2012

வன்னியன்

இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன் பண்டாரவவவுனியன் !!


இலங்கையில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன்,பண்டாரவவவுனியன்வவுனியன்" .தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டியகட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் 'பாயும் புலி' பண்டாரவவவுனியன்வவுனியன்.முழுப்பெயர் குலசேகர வை
ரமுத்து பண்டாரகவன்னியன்.

தமிழர் ஆட்சி

யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரவவவுனியன்வவுனியன் ஆண்டு வந்தான்.
வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும்,கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம். வன்னி மண் இன்று வடபுலத்தேஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும்எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கிவிட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடுஎன வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ளபுத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில்வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கியவன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக்கொண்டுள்ளது.

பண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள்,பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.

தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரவவவுனியன்வவுனியன கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.

வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியைபண்டாரகவன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.

வெட்டி வீழ்த்தினான்

வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான்.எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு,பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.

கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரகவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து,பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.

மீண்டும் போர்

ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர்.இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும்,பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர்படை பின்வாங்கி ஓடியது.

மும்முனைத் தாக்குதல்

வெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலைஎன்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று,பண்டாரகவன்னியனை தாக்கினர்.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும்,அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.

போரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்குபண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

பண்டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், "இந்த இடத்தில் பண்டாரகவன்னியனைகேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்" என்று குறிப்பிட்டுள்ளது





செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தமிழனா /சிங்களவனா



இலங்கையின் மூத்தகுடி தமிழனா? /சிங்களவனா?
என்ன நகைப்பு என்றால் இருவருக்கும் மரபணு ஒன்றுதான். ஒருவரை கேலிச்சித்திரத்தால் காட்டுவது போல இலங்கை வரலாறு கேலிச்சித்திரங்களால் கேலிசெய்யப்படுகிறது.தமிழகம் பூம்புகார் இலங்கை இவற்றின் பூமித்தட்டையும் புவியியல் மாற்றங்களையும் உற்று நோக்கினால் வரலாறு புலப்படும். மரபழிப்பாக உருவாகியுருக்கும் இலங்கைச் சிக்கல் இடியப்பச்சிக்கலே!


http://kalaiy.blogspot.no/2012/01/blog-post_12.html
http://namkural.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/
http://tamilseithekal.blogspot.no/2009/10/blog-post_3044.html


சனி, 8 செப்டம்பர், 2012

கல்லணை


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கட
ல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி , 
அன்புடன் நிலா.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சிவா அய்யாதுரை

 
 Email கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?தமிழன்டா


நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவ
ிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தை http://www.inventorofemail.com/
தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.


ஆய் அண்டிரன்/ஆய் அந்திரன்

நாசில் நாட்டை ஆண்ட ஆய் மன்னர்களில் ஒருவனை அசோக கல்வெட்டு "ஹிதா ராஜா" என்று குறிப்பிடுகிறது. ஆயர் குலத்துச் சிற்றரசர் காலம் கி.மு 250 துவக்கம் என்கிறது குமரி நிலநீட்சி நூல் பக்கம் 155 (ISBN 81-87477-34-2) நம் ஆய்வுகள் ஆய் அண்டிரன் ஆண்ட நாட்டை நோக்குமானால் தமிழின் பழைமை தென்பட வாய்ப்புகள் உள.

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

‘திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே!


திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
திண்மையான தேரினை இரவலர்க்குத் தந்த குளிர்ந்த மாலையைர் சூடிய
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
(ஆய்)அந்திரன் வருகிறான் என்று ஒளியுடைய தொடியையும்
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
வச்சிரப் படையையும் உடைய அகன்ற கையையும் உடைய வேந்தனின் கோயிலில்
போர்ப்புறு முரசும் கறங்க,
வாரினால் போர்த்தப்பட்ட முரசு முழங்க
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே.
ஓசை வானில் எழுந்ததே!



பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,
‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.

http://www.wikimapia.org/#lat=8.6201017&lon=77.7660372&z=9&l=0&m=b